Published:Updated:

வெடித்துக் கிடக்கும் பஞ்சப்பட்டி ஏரி... அரசியல் செய்யும் ஆட்சியாளர்கள்!

பஞ்சப்பட்டி ஏரி
பிரீமியம் ஸ்டோரி
பஞ்சப்பட்டி ஏரி

நான் 2006-ல் எம்.எல்.ஏ-வாக இருந்த காலத்திலிருந்தே இந்தக் கோரிக்கை வைக்கப்பட்டுவருகிறது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் இதற்காகத் தொடர்ந்து மெனெக்கெடுகிறார்.

வெடித்துக் கிடக்கும் பஞ்சப்பட்டி ஏரி... அரசியல் செய்யும் ஆட்சியாளர்கள்!

நான் 2006-ல் எம்.எல்.ஏ-வாக இருந்த காலத்திலிருந்தே இந்தக் கோரிக்கை வைக்கப்பட்டுவருகிறது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் இதற்காகத் தொடர்ந்து மெனெக்கெடுகிறார்.

Published:Updated:
பஞ்சப்பட்டி ஏரி
பிரீமியம் ஸ்டோரி
பஞ்சப்பட்டி ஏரி

‘‘காவிரி வெள்ளம் கடலில் கலக்கிறது. ஆனால், காவிரியிலிருந்து 16 கி.மீ தூரத்திலுள்ள பஞ்சப்பட்டி ஏரி, வறட்சியில் வெடித்துக்கிடக்கிறது... ஆவன செய்யவேண்டிய ஆட்சியாளர்களோ வெறுமனே அரசியல் மட்டும் செய்துகொண்டிருக்கின்றனர்’’ என்று குமுறுகின்றனர் கிராம மக்கள்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திலுள்ள பஞ்சப்பட்டி கிராமத்தில் இருக்கிறது தமிழ்நாட்டின் பெரிய ஏரிகளில் ஒன்றான பஞ்சப்பட்டி ஏரி. 1,170 ஏக்கர் பரப்புள்ள இந்த ஏரி தற்போது நீரின்றி வறண்டு கிடப்பதால், சுத்துப்பட்டு கிராமங்களும் வறட்சி சூழக் காட்சியளிக்கின்றன.

பஞ்சப்பட்டி ஏரியின் இந்தப் ‘பஞ்சநிலை’க்குக் காரணமான அரசியல் குறித்துப் பேசும் ‘பஞ்சப்பட்டி ஏரி மீட்புக்குழு’ செயலாளர் அழகப்பன், “காமராஜர் முதல்வராக இருந்த காலத்திலேயே ஜோடார்பாளையம் காவிரி ஆற்றிலிருந்து, ஏரிக்குத் தண்ணீர் கொண்டுவரத் திட்டமிடப்பட்டது. ஆனால், ஏட்டளவில் அது நின்றுபோனது. யாரும் அதைச் செயல்படுத்தவில்லை.

வெடித்துக் கிடக்கும் பஞ்சப்பட்டி ஏரி... அரசியல் செய்யும் ஆட்சியாளர்கள்!

பெரம்பலூர் எம்.பி பாரிவேந்தர், ஏரியை இரண்டு முறை பார்வையிட்டு, இது சம்பந்தமாக நாடாளுமன்றத்திலும் பேசினார். அதேபோல், கரூர் எம்.பி ஜோதிமணியும் இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசியதோடு, பஞ்சப்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டத்துக்கு, மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் 50 சதவிகித நிதி பெற ஒப்புதலும் வாங்கினார்.

இதற்கிடையே கடந்த ஆட்சியில், அப்போதைய மாவட்ட அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், ‘முதல்வரிடம் பேசி, இந்தத் திட்டத்தை செயல்படுத்துகிறேன்’ என்றார். அன்றைய குளித்தலை தி.மு.க எல்.எல்.ஏ ராமரும் சட்டமன்றத்தில் ஏரியின் நிலை குறித்துப் பேசினார். இதையடுத்து அப்போதைய முதல்வர் எடப்பாடியும், ‘பஞ்சப்பட்டி ஏரிக்கு மாயனூர் காவிரியிலிருந்து உபரிநீரை நீரேற்று முறையில் கொண்டுவரும் திட்டத்தை அறிவித்து, அதற்கான ஆய்வுப் பணிக்காக 10 லட்சம் ரூபாயை ஒதுக்குவதாக’ சட்டமன்றத்திலேயே அறிவித்தார். ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இது குறித்துக் கேட்டபோது, ‘பணம் எதுவும் ஒதுக்கப்படவில்லை’ என்றே பதில் கிடைத்தது.

ஜோதிமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாணிக்கம்
ஜோதிமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாணிக்கம்

இப்போதும்கூட அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கோரிக்கை வைத்தபோது, ‘வரும் பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வரும்’ என்று சொல்லியிருக்கிறார். குளித்தலை தி.மு.க எம்.எல்.ஏ மாணிக்கத்தைத் தொடர்புகொள்ளவே முடியவில்லை. பஞ்சப்பட்டி ஏரியை எல்லாக் கட்சிகளுமே தேர்தல் வாக்குறுதிக்காக மட்டும் பயன்படுத்திவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் மறந்துவிடுகின்றன” என்றார் வருத்தத்துடன்.

இதையடுத்து, அந்த ஏரி இருக்கும் குளித்தலை தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ-வான மாணிக்கத்திடம் இந்தப் பிரச்னை குறித்துப் பேசினோம். “நான் 2006-ல் எம்.எல்.ஏ-வாக இருந்த காலத்திலிருந்தே இந்தக் கோரிக்கை வைக்கப்பட்டுவருகிறது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் இதற்காகத் தொடர்ந்து மெனெக்கெடுகிறார். நானும்கூட நீர்வளத்துறை அமைச்சரிடம் இது விஷயமாகப் பேசியிருக்கிறேன். பஞ்சப்பட்டி ஏரிக்கு கண்டிப்பாகத் தண்ணீர் கொண்டுவருவோம்” என்றார் அழுத்தமாக.

சொல்லாதீர்கள்... செய்யுங்கள்!