Published:Updated:

தி.நகர் திருப்பதி தேவஸ்தான கோயில் துணைத் தலைவராக கதிர் ஆனந்த்! - சேகர் ரெட்டியின் பிறந்தநாள் பரிசா?

கதிர் ஆனந்த்

சென்னை, தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் அமைந்துள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் வெங்கடேச பெருமாள் கோயிலின் உள்ளூர் ஆலோசனைக்குழுத் துணைத் தலைவராக கதிர் ஆனந்த் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

தி.நகர் திருப்பதி தேவஸ்தான கோயில் துணைத் தலைவராக கதிர் ஆனந்த்! - சேகர் ரெட்டியின் பிறந்தநாள் பரிசா?

சென்னை, தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் அமைந்துள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் வெங்கடேச பெருமாள் கோயிலின் உள்ளூர் ஆலோசனைக்குழுத் துணைத் தலைவராக கதிர் ஆனந்த் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
கதிர் ஆனந்த்

தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்த்தைச் சுற்றிச் சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை. `நேரடி அரசியலில் அனுபவம் இல்லாத கத்துக்குட்டி’ என்று அவர்மீது சொந்தக் கட்சியினரே விமர்சனங்கள் வைக்கிறார்கள். அதையெல்லாம் தவிடு பொடியாக்கும்விதமாக, கதிர் ஆனந்த் சமீபகாலமாக கட்சியின் உள்விவகாரங்களிலும் தலையிட்டுவருகிறார். தி.மு.க-வில் அடிப்படை உறுப்பினராக மட்டுமே இருந்துவரும் அவர், வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் பதவிக்குக் குறிவைத்து, தனது தந்தை மூலம் காய்நகர்த்துவதாகவும் கட்சிக்குள் பேச்சுகள் அடிபடுகின்றன.

சேகர் ரெட்டி
சேகர் ரெட்டி

இந்த நிலையில், சென்னை தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் அமைந்துள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் வெங்கடேச பெருமாள் கோயிலின் உள்ளூர் ஆலோசனைக்குழு துணைத் தலைவராக கதிர் ஆனந்த் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கான அறிவிப்பை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகம் வெளியிட்டிருக்கிறது. கதிர் ஆனந்த்துக்கு இந்தப் பதவி கிடைப்பதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் சேகர் ரெட்டி என்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தமிழக அரசியலில் எப்போதுமே சேகர் ரெட்டியின் பெயர் புயலைக் கிளப்பும். கடந்தகாலங்களில், அ.தி.மு.க தலைவர்களோடு நெருக்கம் காட்டிவந்த சேகர் ரெட்டி தற்போது தி.மு.க தலைவர்கள், அமைச்சர்கள் தொடங்கி அவர்களின் வாரிசுகளுடனும் கைகோத்து வலம்வருவதாகக் கூறப்படுகிறது.

ஆணை நகல்
ஆணை நகல்

நம்மிடம் பேசிய உள்விவகாரம் அறிந்த முக்கியப் புள்ளிகள் சிலர், ``கதிர் ஆனந்த் துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கும் தி.நகர் தேவஸ்தான வெங்கடேச பெருமாள் கோயிலின் ஆலோசனைக்குழுத் தலைவராக இருப்பவரே ஏ.ஜெ.சேகர் எனும் சேகர் ரெட்டிதான். சேகர் ரெட்டியின் சொந்த ஊரும் காட்பாடிதான். ஒரே ஊர்க்காரர்கள் என்பதும் கதிர் ஆனந்துடன் சேகர் ரெட்டி நெருக்கம் காட்டுவதற்கு முக்கியக் காரணம். ஜனவரி 19-ம் தேதி கதிர் ஆனந்த் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். பிறந்தநாள் பரிசாக, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சென்னை கோயிலின் துணைத் தலைவர் பதவியை சேகர்ரெட்டி பெற்றுக் கொடுத்திருக்கிறார்" என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism