Published:Updated:

அப்பாவின் அழுகை, கட்சிப் பதவி, ஸ்டாலின் பரிசு... - கதிர் 'ஆனந்தம்' பகிர்வுகள்!

விகடன் டீம்

கட்சியில் பொறுப்பு என்பது, மரியாதை நிமித்தமாகக் கொடுப்பதல்ல. கட்சியில் உழைப்பதற்காகக் கொடுக்கப்படுவது

kathir anand
kathir anand

வேலூர் எம்.பி-யாக அடுத்த ஐந்து ஆண்டுகள் பணியாற்றப்போகும் கதிர் ஆனந்திடம், சில கேள்விகளை முன்வைத்தோம். https://bit.ly/31LChrO

"முதன்முறையாக நேரடி அரசியலுக்குள் வந்திருக்கும் உங்களுக்கு, இந்தத் தேர்தல் புதிய அனுபவமாக இருந்ததா?"

''உள்ளாட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தல்கள் எனக்குப் புதிதல்ல. ஐந்தாறு தேர்தல்களில், அப்பாவோடு களப்பணி செய்திருக்கிறேன்; கட்சியினருடன் பழகியிருக்கிறேன். மக்களோடு மக்களாக இருந்துவருகிறேன். மீடியா முன் வந்ததில்லையே தவிர, மக்களுக்கு என்னை நன்றாகவே தெரியும். அப்பாவின் பின்புலத்தில் இருந்ததால்,வெளிவட்டாரத்தில் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள வில்லை."

kathir anand
kathir anand

''உங்கள் தந்தை அடிக்கடி உணர்ச்சி வசப்பட்டு அழுவதற்கான காரணம் என்ன?"

''அது அழுகையல்ல... உணர்ச்சியின் வெளிப்பாடு! நான் வெற்றிபெற்று வீட்டுக்கு வந்தபோது, என் அம்மா ஆரத்தியெடுத்து என்னைக் கட்டிப் பிடித்து உணர்ச்சிவசப்பட்டார். சந்தோஷத்திலும் கண்ணீர் வரும்... துக்கத்திலும் கண்ணீர் வரும். இந்தக் கண்ணீருக்குப் பின்னால் இருக்கும், தந்தையின் மனவலிமையையும் கொள்கைப் பிடிப்பையும்தான் நான் பார்க்கிறேன்."

''தி.மு.க-வில் இளைஞரணிச் செயலாளர் பதவி உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது. கட்சியில் உங்களுக்கும் பதவி வழங்கப்படுமா?"

''கட்சியில் பொறுப்பு என்பது, மரியாதை நிமித்தமாகக் கொடுப்பதல்ல. கட்சியில் உழைப்பதற்காகக் கொடுக்கப்படுவது. 'மாபெரும் கடமையாகப் பார்ப்பதாக' உதயநிதியே சொல்லியிருக்கிறார். அந்த மாதிரி, ஒருகாலகட்டத்தில் எனக்கும் பொறுப்பு வழங்கினால் ஏற்றுக்கொள்வேன்."

kathir anand
kathir anand

''தி.மு.க தலைவர் ஸ்டாலின் உங்களிடம் என்ன சொன்னார்?"

''பிரசாரத்தை முடித்துவிட்டு காரில் புறப்பட்டபோது, கார் கண்ணாடியை இறக்கி விட்டு என் கையில் வைரமுத்து எழுதிய ஒரு புத்தகத்தைக் கொடுத்து 'தேர்தல் முடிந்த பிறகு திறந்து பார்' என்றார். வெற்றிபெற்ற பிறகு புத்தகத்தைத் திறந்து பார்த்தேன். அதில், 'வெற்றிக்கு வாழ்த்துகள்' என்று முன்கூட்டியே கணித்து எழுதியிருந்தார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது."

> ஜூனியர் விகடன் இதழில் வெளிவந்துள்ள முழுமையான பேட்டியை வாசிக்க > "வேலூர் மக்களுக்காக தாயுள்ளதோடு பணியாற்றுவேன்!" - கதிர் 'ஆனந்தம்' https://www.vikatan.com/government-and-politics/politics/interview-with-vellore-dmk-mp-kathir-anand

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/