வி.சண்முகம், திருவாரூர்.

சி.பி.ஐ போலீஸார் சுவர் ஏறிக் குதித்துக் கைதுசெய்யும் அளவுக்கு ப.சிதம்பரம் பயங்கரவாதியா என்ன?

பயங்கரவாதிகளை மட்டும்தான் சுவர் ஏறிக் குதித்துக் கைதுசெய்ய வேண்டுமா என்ன?

@ஆர்.சுப்ரமணியன், சென்னை.

வழக்கை எதிர்கொள்ளாமல் ப.சிதம்பரம் ஓடி ஒளிந்தது சரியா?

ப.சிதம்பரம், நாடறிந்த வழக்கறிஞர்களில் ஒருவர். அவருக்குத் தெரியாத சட்டம் இல்லை. அப்படிப்பட்டவரே சட்டப்படியாக வழக்கை எதிர்கொள்ளாமல், ‘அரசியல் காழ்ப்புணர்ச்சி’ என்றெல்லாம் சொல்லிக்கொண்டு, ஆட்டம் காட்டியது ரசிக்கும்படியாக இல்லை. ‘மடியில் கனம் இல்லை... வழியில் பயமில்லை’ என்று ‘தில்’லாக நின்றிருந்தால், மரியாதை கூடியிருக்கும்.

@கி.முருகன், மாப்பிள்ளைக்குப்பம்.

‘முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது’ என்ற செய்தி, கழுகார் மனதில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது?

இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எடுக்கப்பட்ட நடவடிக்கையல்ல என்பதை நிரூபிக்கவேண்டிய பெரும்பொறுப்பு, பிரதமர் நரேந்திர மோடிக்கு தற்போது வந்துள்ளது. இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் மத்தியில் ஆண்ட/ஆண்டுக்கொண்டிருக்கிற அமைச்சர்கள் பலர்மீதும் பற்பல குற்றச்சாட்டுகள் உள்ளன. பெரும்பாலானோர்மீது வழக்குகளும் உள்ளன. அவர்கள்மீதெல்லாம் இதே நேர்மையோடு சட்டத்தைப் பாய்ச்சவேண்டும். அப்படிச் செய்தால், கிட்டத்தட்ட 90 சதவிகிதத்துக்கும் மேலானவர்கள் கம்பிக்குள் களி தின்னும் நிலை உருவாகும்.

‘புதிய இந்தியா... புதிய இந்தியா’ என்று மூச்சுக்கு முன்னூறு தடவைச் சொல்லிக்கொண்டிருக்கும் மோடி, இத்தகைய கடும் நடவடிக்கையை எடுக்கவேண்டும். இல்லாதபட்சத்தில், ‘பம்மாத்து இந்தியா’ என்பதாகத்தான் இருக்கும்.

@சரவணன், ஓ.ஏ.கே.ஆர்., சென்னை-2

ஒன்பது வருடப் பகையைத் தீர்த்துக்கொண்டுவிட்டாரே அமித் ஷா?

இதுகூட இல்லாமல் அரசியல் செய்ய முடியுமா? ஜெயலலிதாவை, கருணாநிதி கைதுசெய்தார். அடுத்து ஆட்சிக்கு வந்ததும் ‘ஐயோ கொல்றாங்களே!’ என்று பதிலுக்கு அலறவிட்டார் ஜெயலலிதா. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

@கே.எஸ்.குமார், விழுப்புரம்.

‘உலகின் நுரையீரல்’ என்று பெருமையுடன் அழைக்கப்படும் அமேசான் காடுகள் எரிந்துகொண்டிருக் கின்றனவே?

மனிதர்களின் பேராசைத் தீ, உச்சக்கட்டமாகக் கொழுந்துவிட ஆரம்பித்துவிட்டது.

@அ.சுகுமார், காட்பாடி.

‘மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணாவிட்டால், மக்களை விட்டே அதிகாரிகளை உதைக்கச் சொல்வேன்’ என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சொல்லியிருக் கிறாரே?

சங் பரிவார் பக்தர்கள், ஏற்கெனவே சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு ஆங்காங்கே அலறவிட்டுக்கொண்டுள்ளனர். அந்தப் பரம்பரையில் வந்த நிதின் கட்கரிக்கு, மந்திரியாக அமர்ந்த பிறகும் பழக்கதோஷம் போகவில்லை. ‘சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவேன்’ என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டவர், சட்டரீதியில் நடவடிக்கை எடுப்பதற்குத் துணியாமல் ரெளடிபோல் பேசுவது வேதனையே. அனைத்து எம்.பி-க்களும் உரக்கக் குரல்கொடுத்து, அவரை மன்னிப்புக் கேட்கச் சொல்ல வேண்டும்.

@வெ.ராமானுஜம், சென்னை-73.

இப்போது பால், அடுத்து பேருந்துக் கட்டணம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

2021-ல் தேர்தல் வருகிறது. முன்கூட்டியே மக்களிடமிருந்து கறக்க வேண்டியதையெல்லாம் கறந்து, சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்க வேண்டுமே!

@இரா.கோதண்டராமன், கோயம்புத்தூர்-42.

வசதியுள்ளவர் பலர் சேர்ந்து, தங்கள் சொந்த ஊர்களில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தரலாமே?

பள்ளிக்கூடங்களுக்கு மட்டுமல்ல, அரசு நூலகங்கள், அரசு மருத்துவமனைகள், அரசுக் கல்லூரிகள் என்று அந்தக் காலத்தில் இப்படித்தான் நல்ல மனம் படைத்தவர்கள் கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளைச் செய்து கொடுத்தனர். இப்போது எல்லாமே வணிகம் என்றாகிவிட்ட சூழலில், அத்தகையோர் அருகிவிட்டனர். ஆனாலும், நம்பிக்கை அருகவில்லை.

பழம்பெரும் கம்யூனிஸ்ட்வாதியான ஏ.கே.சுப்பையனின் மகனும் தி.மு.க-வின் முன்னாள் எம்.பி-யுமான ஏ.கே.எஸ்.விஜயன், தன்னுடைய சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் சித்தமல்லியில் அரசு மருத்துவமனை கட்டுவதற்காக தன் குடும்பத்துக்குச் சொந்தமான பல லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள ஒரு ஏக்கர் நிலத்தை, கடந்த சில தினங்களுக்கு முன் தானமாகக் கொடுத்துள்ளார். பங்காளிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் கையெழுத்துப் போடவைத்து அரசிடம் அதை ஒப்படைத்திருக்கிறார்.

எஸ்.சிவகுமார், உறையூர், திருச்சி.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ‘அந்நிய செலாவணி மோசடிப் பேர்வழிகள், பிக்பாக்கெட் பார்ட்டிகள் எல்லாம், டி.டி.வி.தினகரனிடம் உள்ளனர்’ என்று சாடுகிறாரே?

பாம்பறியும் பாம்பின் கால்!

எம்.டி.உமாபார்வதி, சென்னை.

தி.மு.க மகளிர் அணித் தலைவி கனிமொழி, ‘அரசு, மக்கள்மீது மதுவைத் திணிக்கிறது’ என்று குற்றம்சாட்டுகிறாரே?

கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறிகிறார் கனி. தமிழகத்தில் மதுவைக் கொண்டுவந்ததே தி.மு.க-தானே! கருணாநிதியிடம் ராஜாஜி கதறவில்லையா... தி.மு.க-வின் முக்கியப் புள்ளிகளாக இருப்பவர்களும் இவருக்கு வேண்டியவர்களும் தமிழகத்தில் மதுபானத் தொழிற்சாலைகளை நடத்திவருகின்றனர். அதையெல்லாம் மூடச் சொல்லிவிட்டு வந்தால், இவருடைய பேச்சுக்கு ஒரு பொருள் இருக்கும்.

@ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

ஆகஸ்ட்-22 `சென்னை தினம்’ கொண்டாடப்பட்ட நிலையில், சென்னையின் வளர்ச்சி குறித்து கழுகுப்பார்வை என்னவோ?

ஆங்கிலேயேர்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு நகரம், சுதந்திரம் பெற்ற பிறகு தொடர்ந்து சீரழிந்துகொண்டிருக்கிறது. ஆங்கிலேயர்கள் காலத்தைவிட தற்போது நகர்ப்புற உருவாக்கம், விரிவாக்கம் போன்றவற்றுக்கு பலமான விதிமுறைகள் உருவாக்கப் பட்டுள்ளன. ஆனால், அவரவர் பாக்கெட் வீங்கினால் போதும் என்று பணம் பார்க்கும் அரசியல்வாதிகள்/அதிகாரிகள், விதிமுறைகளைத் தூக்கிக் குப்பைக்கூடையில் வீசிவிட்டதால் கான்கிரீட் காடாகவும், குப்பைமேடாகவும்தான் தலைநகர் உருமாறி வருகிறது. ஆண்டுதோறும் மேடை போட்டு கொண்டாட்டம், கும்மாளம் போடுவதைவிட, ஆக்கபூர்வமான வழிமுறைகளை யோசிப்பதுடன் செயல்படுத்தவும் வேண்டும்.

@அ.குணசேகரன், புவனகிரி.

குடும்ப அரசியல்தானே ஊழல் களுக்குக் காரணமாக அமைகிறது?

குடும்பமே இல்லாத ஜெயலலிதா, மாயாவதி, மம்தா போன்றோரின் அரசியலும் ஊழலின் ஊற்றுக்கண்கள் என்பதாகத்தானே இருந்தன/இருக்கின்றன. எனவே, குடும்பமே இல்லாதவர்கள் ஊழல் செய்ய மாட்டார்கள் என்கிற முடிவுக்கு வந்துவிடாதீர்கள். இருப்பவருக்கு ஒரு குடும்பம்... இல்லாதவருக்குப் பல குடும்பம் என்ற கதையாகத்தான் இருக்கிறது.

@ந.அய்யப்பசாமி, தேவாரம்.

இந்திரா காந்தியின் மன்னர் மானியம் ஒழிப்பு, நரேந்திர மோடியின் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து பறிப்பு இரண்டையும் ஒப்பிடுங்களேன்?

அது மன்னர் பிரச்னை... இது மக்கள் பிரச்னை!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள்,

ஜூனியர் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை- 600002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!