@சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம், நெல்லை மாவட்டம்.

சுகாதாரத் துறையின் செய்தியாளர் சந்திப்பில், ‘மாண்புமிகு முதலமைச்சர் ஆணையிட்டபடி’ என்று மீண்டும் மீண்டும் கூறுவது அருவருப்பாகத்தானே இருக்கிறது?

காமராஜரின் ஆட்சி, அண்ணாவின் ஆட்சி, கலைஞரின் ஆட்சி, புரட்சித் தலைவரின் ஆட்சி, அம்மாவின் ஆட்சி இப்படி ஒவ்வொரு கட்சியின் ஆட்சியின்போதும் ஏதாவது ஒரு டயலாக் இருக்கத்தான் செய்கிறது. ‘எதையாவது சொல்லித் தொலைத்துவிட்டுப் போகட்டும். மக்களின் நலன்களைத் தொலைக்காமல் இருந்தால் சரி’ என்று சகித்துக்கொள்ள வேண்டியதுதான்!

@ ‘படிப்பகம்’ வே.ப.இராசாமணி, தாராபுரம்.

கடைநிலைக் காவலர் ஒருவருக்கு உணவுப்படி மாதத்துக்கு 8,675. ஒருவேளைக்கு சராசரியாக 100 ரூபாய். ஆனால், ஓர் ஏழைக் குடும்பத்துக்கே தமிழக அரசின் ஒரு மாத நிவாரணம் 1,000 ரூபாய். இது பத்துமா கழுகாரே?

அவர்கள் அரசு ஊழியர்கள். ஏழைகள் ‘இந்நாட்டு மன்னர்கள்’.

@கோபி.பச்சமுத்து, கிருஷ்ணகிரி-1.

புதுடெல்லியின் நொய்டா பகுதியில் செல்போன் கேம் விளையாடிக்கொண்டிருந்த போது தொடர்ந்து இருமிய நண்பரை சகநண்பரே துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளாரே?

கொரோனா, நின்று கொல்லும். கொரோனா பீதி, நிமிடத்தில் கொல்லும்!

@தாமரை நிலவன், கீழ்க்கட்டளை, சென்னை-117.

எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளை ஏற்க அரசு தயங்குவது ஏன்?

அவர்களும் எதிர்க்கட்சிகளாக இருந்தவர்கள்தானே... அந்தச் சூட்சுமங்கள் எல்லாம் அவர்களுக்கும் தெரியும்தானே! ஆனால், நாம்தான் பரிதாபம். இவர்களுடைய அரசியல் மற்றும் ஈகோக்களால் எல்லாவற்றிலுமே சிக்கிச் சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கிறோம். அதற்கு காரணம்... ‘தானைத்தலைவர்’ தொடங்கி பல்வேறு பட்டங்களையும் வாரிவழங்குவதுடன், ‘அவர்களுடைய அடிமைகள் நாம்’ என்கிற உணர்விலேயே மக்கள் ஊறியே கிடப்பதும்தான். ‘நீ என்னுடயை சேவகன்’ என்கிற உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தாதவரை நம் கதி... அதோகதிதான்!

@மாணிக்கம், திருப்பூர்.

காவல் துறையினரின் கண்காணிப்புதான் நடைமுறையில் ஊரடங்கைச் சாத்தியமாக்கும். ஆனால், நாளாக நாளாக கண்காணிப்புக் குறைவதால் மக்கள் நடமாட்டம் அதிகரிக்கிறதே?

அரசாங்கத்துக்கே அந்த அக்கறை இருப்பதுபோல் தெரியவில்லை. ஆங்காங்கே கேட்களைத் திறந்துவிட ஆரம்பித்து விட்டார்களே! முழு ஊரடங்கு எனும்போதே வீதியில் திரிந்தவர்கள், பல்வேறு கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் திறக்கலாம் என்கிற உத்தரவுக்குப் பிறகு கூட்டம் கூட்டமாகக் கிளம்புவார்கள். ஒன்றிரண்டு பேர் திரிந்தபோதே அடக்க முடியாமல் தவித்த காவலர்கள், சுத்தமாக கையைக் கட்டிக்கொண்டுவிட்டால்... நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது!

@ஜெ.நெடுமாறன், ராமபுரம், சென்னை-89.

அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கும் நேரத்தில் கொரோனா (கோவிட்-19) வந்து குழப்பிவிட்டது. ட்ரம்புக்கு வெற்றி வாய்ப்பு இருக்குமா?

முதலில் கொரோனாவிடமிருந்து உலகத்துக்கு வெற்றி வாய்ப்பு இருக்குமா என்பதே தெரியவில்லையே!

@திருப்பூர் சாரதி

கொரோனாவுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் மதரீதியான மோதல்கள் அதிகமாகிவிட்டனவே?

வீணாக கொரோனா மீது பழிபோடாதீர்கள்!

@சி.கார்த்திகேயன், சாத்தூர், விருதுநகர் மாவட்டம்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இந்த ஆண்டு அவசியமா?

ஒருவேளை கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்தால், அனைவருமே தேர்ச்சி பெற்றதாக அறிவித்துவிட வேண்டியதுதான். இது பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகூட இல்லையே, கல்லூரி இடங்களுக்காக கவலைப்பட்டுக் கொண்டிருக்க. இதுபோன்ற விஷயங்களை பெரும்பிரச்னையாக உருவகப்படுத்திக்கொண்டு, நீட்டிமுழக்கி யோசிப்பதற்குக் காரணமே, குழந்தைகளையெல்லாம் மதிப்பெண் இயந்திரங்களாக மாற்றிவைத்ததுதான். ‘வாழ்க்கையைப் புரிந்துகொள்ளத்தான் படிக்க வைக்கிறோம்’ என உணர்ந்தால், இதெல்லாம் ஒரு பிரச்னையாகவே தெரியாது!

@பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை, சேலம் மாவட்டம்.

சம்பாதித்த பணத்திலிருந்து மக்கள் நிவாரண நிதி அளிக்கிறார்கள். எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் எல்லோரும் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்தல்லவா கொடுக்கிறார்கள். அதுவும் மக்களின் பணம்தானே?

மக்கள் தருவது நன்கொடை. ஆனால், இது கட்டாய வசூல். ஆம், அரசாங்கம் அதிரடியாக உத்தரவுபோட்டுத்தான் தொகுதி மேம்பாட்டு நிதியை வசூல்செய்கிறது. அதேசமயம்,

எம்.பி-க்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை நன்கொடையாகக் கொடுக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள் பிரதீபா!

@லி.சீனிராஜ், தொம்பக்குளம்.

‘25,000 கோடி ரூபாய் செலவில் நாடாளுமன்றத்துக்குப் புதிதாக கட்டடம் கட்டத் திட்டமிட்டிருப்பதை, கொரோனா உருவாக்கியிருக்கும் பொருளாதார நெருக்கடியை மனதில்கொண்டு தள்ளிவைக்க வேண்டும்’ என்கிறாரே சுப்பிரமணியன் சுவாமி?

ஏற்கெனவே பாதாளம் நோக்கித்தான் பாய்ந்துகொண்டிருந்தது இந்தியப் பொருளாதாரம். பழி பாவத்தை தற்போது கொரோனா சுமந்துகொண்டது. எதுவாகவோ இருந்துவிட்டுப் போகட்டும்... சுவாமியின் யோசனை நல்ல யோசனையே. வீட்டில் பண நெருக்கடி என்றால், மழைக்கு ஒழுகும் கூரையில் கூடுதலாக இரண்டு ஓலைகளைச் செருகி சரிசெய்வோமே தவிர, மச்சுவீடு கட்டும் வேலையைச் செய்ய மாட்டோம்தானே!

@‘நன்னிலம்’ இளங்கோவன், பட்டமங்கலம், மயிலாடுதுறை.

சித்த வைத்தியத்தைப் பயன்படுத்த அரசு தயங்குவது ஏன்?

சித்த வைத்தியமா... அது தென்னாட்டுக்குச் சொந்தமானதாயிற்றே! அதுமட்டுமல்ல, தாங்கள் எப்போதுமே தூக்கிப் பிடிக்கும் ‘ஆயுர்வேதம்’ என்பதைக்கூட மறந்தும் உச்சரிக்கத் தயங்குகிறார்களே, அந்த வடக்கு பார்ட்டிகள். தேவையில்லாமல் ‘பெரியண்ணன்’ ட்ரம்ப் மிரட்டலுக்கு ஏன் ஆளாக வேண்டும் என்கிற முன்னெச்சரிக்கை உணர்ச்சி அந்த அளவுக்கு ததும்பிப் பாய்கிறது!

@ப.சுவாமிநாதன், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.

அரசியல் கட்சிகள், பிற அமைப்புகள் எல்லாம் நலத்திட்ட உதவிகள் வழங்கும்போது சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் கும்பலாக நிற்பதைத்தானே காண முடிகிறது?

ஊரில் உள்ளவர்களை எல்லாம் முகக்கவசம் அணியச் சொல்கிறார்கள். ஆனால், இதுபோன்ற உதவிகளை வழங்கும் அமைப்பின் தலைவர்களே முகம் தெரிய வேண்டும் என்பதற்காக கவசமின்றி கவர்ச்சியாகச் சிரித்தபடி போஸ்கொடுக்கிறார்கள். ம்... ஊருக்கு உபதேசம் என்பதுதான் எப்போதும் நிரந்தரம்போல.

@ஆர்.ஹரிகோபி, புதுடெல்லி.

‘அமெரிக்காவில் ஊரடங்கைத் தளர்த்துவது பற்றி ஆலோசிக்கப்படுகிறது’ என்று அதிபர் ட்ரம்ப் கூறுவது, அவருடைய சொந்த தொழில் ஆதாயங்களைக் கருத்தில்கொண்டுதானே?

பெரும் கார்ப்பரேட்களின் தொழில் ஆதாயத்தையும் கருத்தில்கொண்டுதான். ட்ரம்ப்கூட, இது சரியா... தவறா என்று கொஞ்சமாவது யோசிப்பார்போல. ஆனால், அங்கே முதலாளித்துவ ஆதரவாளர்களாக இருக்கும் பொதுமக்களில் ஒரு பகுதியினர், ‘உயிராதாரம் முக்கியமா, பொருளாதாரம் முக்கியமா?’ என்று கேட்டால் ‘பொருளாதாரம்தான் முக்கியம்’ என்கிறார்கள். அதனால்தான் நியூயார்க் மாகாணத்தில் மட்டுமே ‘கோவிட் -19’ வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைத் தாண்டி எகிறிக்கொண்டுள்ளது.

@சரவணகுமார் சின்னசாமி, தாராபுரம்.

கைத்தட்டல், பாதபூஜை இவையெல்லாம் வெறும் சுயநல நாடகங்கள் என்பதை, சென்னையில் மரணமடைந்த ஆந்திர மருத்துவரின் சடலம் பட்டபாடு உணர்த்துகிறதுதானே. நாமெல்லாம் மனிதர்களோடுதான் வாழ்கிறோமா?

‘குழந்தைக் கடத்தல்’ என்று செய்தி பரவினால், கூட்டமாகச் சேர்ந்துகொண்டு சந்தேகப் பட்டவர்களை எல்லாம் அடித்து நொறுக்கும் கும்பல் மனோபாவம்போலத்தான் இதுவும். மக்களுக்கு எந்தெந்த விஷயங்களில் போதுமான விழிப்புணர்வு தேவை என்பதை உணர்ந்து, அதையெல்லாம் சரி வர கற்பிக்கும் தலைவர்கள் இங்கே இல்லையே! ‘கைதட்டுங்கள், பாதபூஜை செய்யுங்கள், கோலம்போடுங்கள், விளக்கேற்றுங் கள்’ என்று உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டுக் கொண்டிருப்பவர்களோடுதானே இப்போதும் நாம் வாழ்கிறோம்!

‘6 லட்சம் கோடி ரூபாய் சொத்துகளையும் நாட்டுக்கு ரத்தன் டாடா அறிவித்துள்ளார்’ என்று சமூக ஊடகங்களில் பரவிய செய்தியின் அடிப்படையில் வாசகர் எழுப்பிய கேள்விக்கு, 15.04.2020 தேதியிட்ட இதழில் பதிலளித்திருந்தேன். ஆனால், அப்படி எந்தவிதமான அறிவிப்பையும் டாடா வெளியிடவில்லை எனத் தெரியவருகிறது. இதை, வாசகர் என்.எஸ்.பெருமாள் சுட்டிக்காட்டியிருக் கிறார். அவருக்கு நன்றி. உண்மையில் கொரோனாவுக்காக 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணம், டாடா நிறுவனம் சார்பில் அறிவிக்கப் பட்டுள்ளது. தவறான பதில் அளித்ததற்காக வாசகர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!