‘மேட்டுப்பாளையம்’ மனோகர், கோவை-14.

வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், ம.தி.மு.க., வி.சி.க-வைத் தவிர்த்துவிட்டு, பா.ம.க-வைக் கூட்டணியில் சேர்க்கும் எண்ணத்தில் தி.மு.க இருப்பதாகக் கூறப்படுகிறதே..?

ஓ... முதல்வர் பதவியை அன்புமணிக்கு விட்டுத் தர மு.க.ஸ்டாலின் தயாராகிவிட்டாரோ!

@சாந்தி மணாளன், கருவூர்.

‘ரஜினி கட்சி ஆரம்பித்தால், அடுத்தது அவர்தான் முதல்வர்’ என்கிறாரே எஸ்.வி.சேகர்?

பரபரப்பாக ஓடிய ‘முதல்வன்’ படத்தின் கதையை முதலில் ரஜினியிடம்தான் இயக்குநர் ஷங்கர் சொன்னார். ஆனால், நடிக்க மறுத்துவிட்டார். அதனால், அர்ஜூன் அந்தப் பதவிக்கு வந்துவிட்டார். ஒருவேளை ‘முதல்வன் பார்ட் டூ’ பற்றிச் சொல்கிறாரோ எஸ்.வி சேகர்!

@‘காட்டாவூர்’ தேனரசு, செங்குன்றம், சென்னை-52.

`இந்தியாவில் நீதிமன்றங்கள், வருமான வரித்துறை, காவல்துறை மற்றும் அரசுத்துறைகள் நேர்மையாகச் செயல்படுகின்றன’ என்று உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்ல முடியுமா?

எனக்கு 56 இன்ச் மார்பு இல்லையே!

கொ.மூர்த்தி, குட்டலாடம்பட்டி.

‘நிபுணர்களால் கணித்துச் சொல்ல முடியாத வைரஸாக கொரோனா உள்ளது’ என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளாரே?

அச்சச்சோ... ‘மூன்று நாள்களில் கொரோனா ஓடிவிடும்’, ‘கொரோனாவுக்கு அனைவரும் முகக்கவசம் அணியத் தேவையில்லை’, ‘இன்னும் 10 நாள்களில் கொரோனா ஓடிவிடும்’, ‘எடப்பாடியாரைக் கண்டால் கொரோனா ஓடி ஒளிந்துவிடும்’ இப்படியெல்லாம் இத்தனை நாள்களாகச் சொல்லிக்கொண்டிருந்த இவர்களெல்லாம் ‘நிபுணர்கள்’ இல்லையோ!

@இரா.கோதண்டராமன், அசோக் நகர், சென்னை-83.

கொரோனாவால் பெரும்பாலானவர்களின் பொருளாதாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. பாதிப்பை எப்படிச் சீர் செய்யலாம்?

‘சிறியதே அழகு’ என்று சிக்கனமாக வாழப் பழகினால், கொரோனாவின் அண்ணன் வந்தால்கூட ஆபத்தில்லை. 5 அடி உயரத்திலிருந்து விழுவதற்கும், 500 அடி உயரத்திலிருந்து விழுவதற்கும் எவ்வளவோ வித்தியாசம் இருக்கிறது. மார்ச் 25-ம் தேதி முதல் கடந்த நான்கு மாதங்களைக் கடந்துவிட்டோம். இந்தக் காலகட்டத்தில் எதையெல்லாம் நிறுத்தினீர்கள் என்று கணக்குப் போட்டுப் பாருங்கள். வாழ்க்கைக் கணக்கு புரியும்.

அதேசமயம், உயிர்வாழ்வதற்குத் தேவையான உணவுக்கே அல்லாடும் கேளிர் கூட்டமும் நம்முடன்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறது. ஒருவேளை, அரைவேளை, பல நாள்களுக்கு அதுவும் இல்லை என்கிற சூழலில் காலந்தள்ளிக்கொண்டிருக்கும் அவர்களுடைய பொருளாதாரத்தைச் சீர்ப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை.

@நெல்லை குரலோன், பொட்டல்புதூர்.

கழுகாரின் பார்வையும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதுதானே?

சந்தேகமே இல்லாமல்!

@சுவாமிநாதன், வேளச்சேரி, சென்னை.

சீனப் பொருள்களைப் புறக்கணித்தால், இன்றைய ஊரடங்கு சூழலில் லேப்டாப், மொபைல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய முடியுமா அல்லது இந்தியாவிலேயே தயார் செய்ய முடியுமா?

நாம் எங்கிருந்து வேண்டுமானாலும் வாங்கலாம். அதற்கு யாரும் தடை போட முடியாது. ஆனால், அமெரிக்காவிலிருந்து வாங்கும்போதும் ‘மேட் இன் சைனா’ என்று உள்ளிருக்கும் பேட்டரி நம்மைப் பார்த்து சிரிக்கக்கூடும். எனவே, உள்நாட்டு உற்பத்திதான் முழுமையான புறக்கணிப்பாக இருக்கும்.

@ராம்குமார்.

இந்தியாவில் இந்தியனாக, இந்துவாக வாழ்வது எதிர்காலத்தில் பெரும் சவாலாக இருக்கும் போலிருக்கிறதே கழுகாரே?

இதெல்லாம் ஒரு சிலரின் ‘ஏவல் வேலை’தானே ஒழிய, சவால் அல்ல. உண்மையிலேயே இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வுகாண வேண்டுமென்றால், எல்லோரும் முதலில் ‘மனிதன்’ என மாற வேண்டும். மகத்தான பொருள் பொதிந்த ‘மனிதன்’ என்கிற சொல்லுக்குரிய இலக்கணத்துக்கு ஏற்ப முழுமையாக வாழ ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வோர் இந்தியனும்... இதை உறுதிப்படுத்தினாலே இப்படி ‘ஏவல் வேலை’ செய்யும் கூட்டங்களை ஒட்டுமொத்தமாக ஒழித்துவிடலாம்.

@‘காஞ்சி’ எஸ்.ஃபைசுதீன், காஞ்சிபுரம்-1.

மருத்துவர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், டாஸ்மாக் ஊழியர்கள், சரக்கு வாங்குபவர்கள் பாதிக்கப்பட வில்லையே?

உங்களுடைய ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே ஏகப்பட்ட பாதிப்புதான். திருக்கழுக்குன்றம், திருப்போரூர், கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளின் டாஸ்மாக் கடை ஊழியர்களை கொரோனா தாக்கியதால் அடிக்கடி மூடப்படுகின்றன. விஷயம் வெளியில் பரவினால், மாநிலம் முழுக்க பிஸினஸ் `டல்’லடித்துவிடும் என்பதால் கமுக்கமாகக் கையாள்கிறார்கள். ‘குடிமக்கள்’ மீதுதான் என்னவொரு அக்கறை!

@பி.எஸ்.ஏ.ஜெய்லானி, கடையநல்லூர்

சூதாட்டத்துக்கு ஏற்கெனவே தடை இருக்கிறது. அப்படியிருக்க, ‘ஆன்-லைன் ரம்மி’ உள்ளிட்ட இணையதள சூதாட்டங்களைத் தடைசெய்ய மத்திய, மாநில அரசுகள் தயங்குவது ஏன்?

‘சீனாவுக்கு உளவு வேலை பார்க்கின்றன’ என்று சொல்லி அந்த 59 ஆப்களையே ஆஃப் செய்தவர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. இந்த ரம்மியும் சீனாவுடையதாக இருந்தால், இந்நேரம் ‘கும்மி’யிருப்பார்கள் ‘கும்மி.’ ஆனால், இதன் ஒரிஜினல் முதலாளியாக ட்ரம்ப் மாதிரி ஏதாவது ஒரு ‘பெரியண்ணன்’, அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து இயக்கிக் கொண்டிருந்தால், ‘நண்பேண்டா...’ என்றுதானே சொல்ல முடியும்.

பின்குறிப்பு: அஸ்ஸாம், தெலங்கானா, ஒடிசா மாநில அரசுகள் முதுகெலும்புடன் இதற்குத் தடைபோட்டுள்ளன.

@சரோஜா பாலசுப்ரமணியன், கோலார் தங்க வயல், கர்நாடக மாநிலம்.

சுற்றுச்சூழல் தாக்க சட்டவரைவைக் (EIA 2020) கொண்டு வருவதற்கு பதில், கார்ப்பரேட்களிடமே நாட்டை ஒப்படைத்துவிடலாமே?

அதுதான், ‘ஒப்படைத்துவிட்டோம்’ என்று உச்ச நீதிமன்றத்திலேயே கிட்டத்தட்ட வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டிருக்கிறதே மத்திய அரசு. ‘சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும். இந்தியாவின் 22 பிராந்திய மொழிகளில் மொழிபெயர்த்துப் பகிர வேண்டும்’ என்று கூறியுள்ளது டெல்லி உயர் நீதிமன்றம். உடனே, உச்ச நீதிமன்றத்துக்கு ஓடிப்போய், ‘மக்களிடம் கருத்து கேட்க அவசியமில்லை... மொழிபெயர்க்கவும் முடியாது. அரசாங்கத்தின் முடிவில் யாரும் தலையிட முடியாது’ என்று அகங்காரம் பொங்க மனுத்தாக்கல் செய்துள்ளது மத்திய அரசு. இதிலிருந்தே தெரியவில்லையா... இது யாருக்கான அரசு என்று!

@கார்த்திக் திவ்யா, அரியலூர்.

பி.பி.இ கிட் (பாதுகாப்பு கவச உடை) இல்லாமலும், நோயாளிகளைத் தொட்டும் சித்த மருத்துவர்கள் குணப்படுத்துகிறார்கள் என்றால், சித்த வைத்தியம் வலிமையானதுதானே?

சித்த வைத்தியம் வலிமையானதுதான். அதற்காக, ஆங்கில வைத்தியம் வலிமையற்றது என்றாகிவிடாது. உயிர் போகும் அவசரம் என்றால், சித்த மருத்துவ கொரோனா வார்டில் இருப்பவர்கள், ஆங்கில மருத்துவ வார்டுகளுக்குத்தான் அனுப்பப் படுகிறார்கள். ‘வலிமை’ பற்றிய பிரச்னை எந்த மருத்துவத்திலும் இல்லை. அதை வைத்துச் சம்பாதிக்க நினைக்கும் கூட்டத்திடம்தான் இருக்கிறது. தற்போது, சித்த மருத்துவத்தை வைத்தும் சம்பாதிக்கும் கூட்டம் பெருகிக் கொண்டிருக்கிறது... ஜாக்கிரதை!

@‘குடந்தை’ பரிபூரணன், மல்லபுரம், தஞ்சாவூர் மாவட்டம்.

ஜெயலலிதாவின் ‘வேதா இல்லம்’ அரசுடைமையாக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகத் தீபா அறிவித்திருக்கிறாரே?

எங்க பாட்டி சொத்து!

பி.கே.காமாட்சி, கோம்பை, தேனி மாவட்டம்.

தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்ளும் பா.ஜ.க., அ.தி.மு.க நிர்வாகிகள் ஏன் கோபப்படுகிறார்கள்?

அத்தனை கட்சிக்காரர்களுமே அங்கே கோபப்பட்டாக வேண்டும். இல்லையென்றால், அடுத்த தடவை அவர்களுக்கு அங்கே வேலை இல்லை. இவர்களுடைய பி.பி எகிற எகிற... அதைப் பார்க்கும் உங்களுடைய பி.பி-யும் எகிற எகிற... சேனலின் டி.ஆர்.பி-யும் எகிறும்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள்,

ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!