Published:Updated:

கழுகார் பதில்கள்!

வெங்காயம்
பிரீமியம் ஸ்டோரி
வெங்காயம்

வெங்காயம் இல்லாமல்கூட சாம்பார் வைக்கலாம், தோசை சுடலாம்

கழுகார் பதில்கள்!

வெங்காயம் இல்லாமல்கூட சாம்பார் வைக்கலாம், தோசை சுடலாம்

Published:Updated:
வெங்காயம்
பிரீமியம் ஸ்டோரி
வெங்காயம்

மு.மதிவாணன், செங்கல்பட்டு.

வெங்காய விலை உயர்வுக்கு என்ன காரணம்?

கழுகார் பதில்கள்!

பொதுவாகவே வேளாண் உற்பத்தி பொருள்கள், குறிப்பாக காய்கறி போன்ற தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தியானது கடும் வறட்சி, பெருமழை போன்ற காரணங்களால் பாதிக்கப்படும்போது வழக்கமாகவே அதன் விலை உயரும். ஆனால், அது குறிப்பிட்ட அளவுக்குமேல் செல்வ தில்லை. சீக்கிரமே அழுகிவிடக்கூடிய பொருள்கள் என்பதால், உடனுக்குடன் விற்பனையும் செய்யப்பட்டுவிடும். ஆனால் வெங்காயத்தை, மாதக்கணக்கில் சேமித்துவைத்து விற்க முடியும். பதுக்கல் பேர்வழிகளுக்கு இது வசதியாக இருப்பதால்தான் விலையும் தாறுமாறாக உயர்கிறது. இதனால் வெங்காய விவசாயி களுக்கு பெரிதாக லாபம் இருப்பதில்லை என்பது தான் உண்மை. இடைத்தரகர்கள் காட்டில்தான் மழை. ஓரிரு மாதங்களுக்கு வெங்காயம் இல்லாமல்கூட சாம்பார் வைக்கலாம், தோசை சுடலாம் என்பதை உணர்ந்தால், விலை தானாகவே கட்டுக்குள் வந்துவிடும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எம்.டி.சகுந்தலா, பூந்தமல்லி, திருவள்ளூர் மாவட்டம்.

‘தமிழர்களைக் கொன்று குவித்த கோத்தபய ராஜபக்சேவுக்கு கோடிக்கணக்கில் கடன் வழங்குவதா...’ என்று வைகோ கண்டனம் தெரிவித்துள்ளாரே?

உண்மைதான். தமிழர்கள், இந்தியாவின் முக்கியமான அங்கம். இன்றைக்கு அனைத்து துறைகளிலும் முதல் அல்லது இரண்டாவது இடத்தில் இருப்பது தமிழகம்தான். இந்தியா இந்த அளவுக்கு முன்னேறிக் கொண்டிருப்பதற்குக் காரணம், தமிழர்களின் உழைப்பும் புத்திசாலித் தனமும்தான். அவர்களுடைய ரத்தச் சொந்தங்களைக் கொன்று குவித்த கோத்தபயவுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பதும், கோடிக்கணக் கில் அள்ளிக் கொடுப்பதும் இயல்பாகவே கோபத்தை வரவழைக்கத் தானே செய்யும். கண்டனம்கூட தெரிவிக்காவிட்டால் எப்படி?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

@இரா.கோதண்டராமன், கோவைப்புதூர், கோவை-42.

தமிழக கோயில்களின் நிர்வாகம், அரசிடமிருந்து அந்தந்த ஊர் மக்களின் நிர்வாகத்தின்கீழ் வந்தால் நல்லதுதானே?

அப்படியெல்லாம் சொல்லிவிட முடியாது. இப்போதும்கூட ஊர் மக்களில் பலரும் அறங்காவலர்கள் என்கிற பெயரில் ஆலய நிர்வாகத்தில் இடம் பெறத்தான் செய்கின்றனர். ஆனால், அவர்களும் அதிகாரிகளுடன் கைகோத்துக்கொண்டு ஆலயத்தின் சொத்துகளை கொள்ளையடித்துக்கொண்டு தான் உள்ளனர். பல கோயில்களில், எந்த வேறுபாடும் இல்லாமல் ஆலய ஊழியர்கள் அனைவருமே இதற்கு உடந்தையாக இருக்கிறார்கள். ஒரு காலத்தில் ஊருக்கு ஊர் இருந்த தர்மகர்த்தாக்களில் பலரும் கொள்ளைக்காரர்களாக இருந்ததால்தான், ஆலயங்கள் அனைத்தும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. இதில் தவறு நடக்கிறது என்றால், அதைத் தடுக்க சரியான வழி என்ன என்பதைத்தான் யோசிக்க வேண்டும். அதைவிடுத்து மேலும் சிக்கலாக்கிவிடக் கூடாது.

@முனைவர் எ.ஜேம்ஸ் ராஜசேகரன்.

அந்த இரவில் நடைபெற்ற நடவடிக்கைகளுக்காகக் காட்டிய அவசரத்தை, பொதுமக்கள் நலனுக்கான திட்டங்கள் எதிலாவது மத்திய அரசு காட்டியுள்ளதா?

வெங்காயம்
வெங்காயம்

அப்படிக் காட்டியிருந்தால், இப்படி ‘அவசர’ப்படுவதற்கான தேவையே இருந்திருக்காதே!

த.இந்திரஜித், மேலவளவு, மதுரை மாவட்டம்.

உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடக்குமா?

நடந்தால் நன்றாக இருக்கும்.

@‘காஞ்சி’ எஸ்.ஃபைசுதீன், காஞ்சிபுரம்-1.

மாமல்லபுரமும் திருக்கழுக்குன்றமும் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்துக்குப் போய்விட்டன. பொலிவிழந்த மிகச்சிறிய மாவட்டமாக எங்கள் ‘காஞ்சிபுரம் மாவட்டம்’ ஆகிவிட்டதே?

என்ன ஆந்திராவுக்கும் கர்நாடகாவுக்குமா பிரித்துக் கொடுத்து விட்டார்கள்? மாமல்லபுரத்தை வடிவமைத்த பல்லவர்களின் தலைநகரமே உங்கள் காஞ்சிதானே. 1,300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப் பட்ட கயிலாசநாதர் கோயில், 1000 ஆண்டுகளுக்கு முன்பே சமூகச் சீர்திருத்தத்தை கையில் எடுத்த ராமானுஜர், இந்து மதத்தை இந்தியா முழுக்கப் பரப்பியவர்களில் முக்கியமானவரான காஞ்சி காமகோடி மடத்தின் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், தமிழகத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, சமீபத்தில் இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைத்த அத்திவரதர்... இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக ‘நகரேஷு காஞ்சி’ எனப் பெருமையுடன் அழைக்கப்படும் ஊர் உங்களுடையது. நகரங்களிலெல்லாம் சிறந்த நகரம் காஞ்சிபுரம் என்பது தான் அதன் பொருள். அப்படிப்பட்ட ஊரில் இருந்துகொண்டு சும்மா நடிக்காதீர்கள்!

@கொ.மூர்த்தி, குட்டலாடம்பட்டி.

‘பா.ஜ.க-வில் ராதாரவி இணைந்திருப்பதன்மூலம் பெண்களுக்கு என்ன செய்தி சொல்லவருகிறீர்கள்?’ என சின்மயி கேள்வி எழுப்பியுள்ளாரே?

நாங்களும் ரௌடிதான்!

@ஜி.ஆர்.மாதேஸ்வரன், புளியம்பட்டி, ஓமலூர்.

இந்த மழையால் ஏரிகள் தளும்பி வருகின்றன. இது அரசின் சாதனைதானே?

எத்தனை நாள்களுக்குத் தேங்கியிருக்கிறது என்பதைப் பொறுத்துதான் சாதனையா... வேதனையா என்பதைத் தீர்மானிக்க முடியும். இப்போதே ‘ஏரிக்கரைகள் உடைந்து ஊருக்குள் வெள்ளம்’ என வழக்கம்போல் செய்திகள் வர ஆரம்பித்துவிட்டன. கரைகள் பலமாக இல்லை என்பது ஒருபுறமிருக்க, திட்டமிட்டே ஆக்கிரமிப் பாளர்களாலும் பல இடங்களில் கரைகள் உடைக்கப்படுகின்றன.

சு.பிரபாகர், தேவகோட்டை.

பொதுப்பிரச்னைகளுக்காக முன்னணி நடிகர்கள் பலரும் தற்போது குரல்கொடுக்கின்றனர். நடிகராக தி.மு.க-வில் இருந்த எம்.ஜி.ஆர் அப்போது ஆளுங் கட்சியை விமர்சனம் செய்திருக்கிறாரா?

என்னது விமர்சனம் செய்திருக்கிறாரா... அன்றைய ஆளும் கட்சியான காங்கிரஸிடமிருந்து தமிழகத்தை தி.மு.க கைப்பற்றியதில் அவருக்கு முக்கியமான பங்கே இருக்கிறது!

அண்ணா அன்பழகன், அந்தணப் பேட்டை.

மதவாதக் கட்சியான சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராகப் பதவியேற்ற நிகழ்வில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றது சரியா?

‘இதென்ன பிரமாதம், மதவாதக் கட்சியான பா.ஜ.க-வோடு சேர்ந்து மத்தியில் ஐந்து ஆண்டுக் காலம் ஆட்சியே நடத்தியிருக் கிறோம்’ என்று ஆரம்பித்து, பக்கம் பக்கமாக ஸ்டாலின் கொடுத்திருக்கும் ‘தக்காளிச்சட்னி’ விளக்கத்தைப் படிக்கவில்லையோ!

@மா.உலகநாதன், திருநீலக்குடி.

‘மோடி-உத்தவ் இருவரும் அண்ணன்-தம்பி’ என்று சிவசேனாவின் ‘சாம்னா’ பத்திரிகை வர்ணிக்கிறதே?

நீர் அடித்து நீர் விலகாது!

டி.கே.மோகன், ஆதம்பாக்கம்.

ஜூ.வி-யில் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க-வுக்கு எதிராகவும், தி.மு.க-வுக்கு ஆதரவாகவுமே கட்டுரைகளும் பதில்களும் அமைந்திருப்பது பற்றி?

பொதுவாகவே மீடியாக்களின் பார்வை ஆளுங்கட்சிகள் பக்கம்தான் இருக்கும். ஏனென்றால், அவர்கள்தான் அதிகாரம் செலுத்தக்கூடியவர்கள். அவர்களுடைய அசைவுகள்தான் மக்களுக்கு பலனையோ, பாதிப்பையோ அதிகார பூர்வமாகத் தரக்கூடியவை. எனவே, ஆளுங் கட்சிகளைக் கண்காணிப்பதுதான் மீடியாக்களின் மிகமிக முக்கியமான வேலையாகவே இருக்கும். இது இயல்பாகவே அமைந்துவிடும். அதனால், ஆளுங்கட்சி பற்றிய செய்திகள் கொஞ்சம் அதிகமாகவே இடம்பிடிக்கும். தி.மு.க, காங்கிரஸ் போன்றவை ஆட்சியில் இருந்த காலத்தில் வெளியான ஜூ.வி இதழ்களைப் புரட்டிப் பாருங்கள், உண்மை உங்களுக்கே புரியும்.

அந்த உண்மையை அப்படியே உங்கள் சகாக்களுக்கும் வாட்ஸப் மூலமாகப் பரப்பி விடுங்களேன்.

ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

‘ரஜினி, அரசியலுக்கு வந்துவிடுவார்’ என்று தமிழருவி மணியன் இன்னமும் நம்பிக்கை வைத்திருக்கிறாரே?

ரஜினியைச் சந்தித்த கையோடு, ‘மார்ச் மாதம் கொடி பறக்கும்’ என்று கூறியிருக்கிறாரே தமிழருவி! போகிறப்போக்கைப் பார்த்தால், உங்களையும் நம்பவைத்துவிடுவார் என்றுதான் தோன்றுகிறது.

@சு.சேகர், ஆலப்பாக்கம், சென்னை.

தற்கொலைவரை துணியும் விவசாயிகளுக்குச் சலுகை காட்ட முன்வராத தமிழக அரசு, தமிழ்நாடு கிரிக்கெட் கிளப்பின் குத்தகை பாக்கி 1,553 கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்யும் முடிவிலிருக்கிறதாமே?

கிரிக்கெட் வாரியம் போன்ற ‘சீமான்களின் ராஜ்ய’ங்களுக்குச் சலுகை காட்டினால், தேர்தலுக்குத் தேர்தல் ‘பலன்’ கிடைக்கும். விவசாயிகளிட மிருந்து மறுபடி மறுபடி போராட்ட அறிவிப்புதானே கிடைக்கும்.

@நெல்லி.மூர்த்தி, சவூதிஅரேபியா.

தமிழக பா.ஜ.க தலைவர் பதவிக்கு இதுவரை எவரும் தேர்ந்தெடுக்கப் படவில்லை. அங்கேயும் வெற்றிடமா?

‘வெற்றிடம்’ என்பதைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், அது ‘வேறிடம்’ தேட ஆரம்பித்துவிட்டதே!

@ரவீரந்திரன்.எம்.

உண்மையைச் சொல்லுங்கள், கழுகார் ‘ஆன்டி இண்டியன்’தானே?

ஆண்டி இந்தியன்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை- 600002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism