@பி.எஸ்.ஏ.ஜெய்லானி, கடையநல்லூர், தென்காசி மாவட்டம்.

வெங்காயம், பூண்டு, முட்டை இவை சைவமா, அசைவமா?

உணவுப் பொருள்கள்.

@கா.கு.இலக்கியன், செங்குன்றம், சென்னை-52.

பாலில் அதிகளவில் கலப்படம்; குடிநீர் மிகவும் அசுத்தம்; அபாயமான கட்டத்தில் நிலத்தடிநீர். இப்படி இந்தியாவிலேயே தமிழகம்தான் முதல் இடத்தில் இருப்பதாக மத்திய அரசின் ஆய்வறிக்கைகள் வரிசைகட்டுகின்றனவே?

கொஞ்சம் பொறுங்கள், ‘புத்திசாலிகள்’ அதிகம் இருப்பது தமிழ்நாட்டில்தான் என்கிற அடுத்த ஆய்வு முடிவும் சீக்கிரமே வந்துவிடும்!

@எம்.கல்யாணசுந்தரம், கோயம்புத்தூர்.

கல்விநிலையங்களில் தொடரும் தற்கொலைகளுக்கு யார் காரணம்?

‘வீட்டைவிட்டு வெளிய வந்தா நாலும் நடக்கலாம்.

அந்த நாலும் தெரிஞ்சு நடந்துகிட்டா நல்லாயிருக்கலாம்!?’

இந்த உண்மையை உறைக்கும்படி குழந்தைகளுக்குச் சொல்லி அனுப்பாத பெற்றோர்கள்தான். ‘என்ன நடந்தாலும் தன்னம்பிக்கையை மட்டும் ஒருபோதும் இழந்துவிடக் கூடாது’ என்று சொல்லிச் சொல்லி வளர்த்திருந்தால், பிஞ்சுகளை அநியாயமாக நாம் இழக்கவேண்டியிருக்காதே.

சீனி.சோமசுந்தரம், திருநாகேஸ்வரம், தஞ்சாவூர் மாவட்டம்.

ஒரு கட்சியிலிருந்து நீக்கப்பட்டவரை வேறொரு கட்சி சேர்த்துக்கொள்வதும், பதவி கொடுப்பதும் நல்லதா?

இது அவர்களுடைய தனிப்பட்ட தொழில்ரீதியிலான பரிமாற்றம். ‘தொழிலில் கைதேர்ந்தவர்’ எனப் பார்த்துப் பார்த்துச் சேர்த்துக்கொள்கிறார்கள். ஆக, அவர்களுக்கு நல்லதாகத்தான் இருக்கும்.

@தே.ஞானக்கலைமோகன்குமார், புதுக்கோட்டை.

‘விஷவண்டு கடித்து மரணம்’ என்ற செய்தி அதிகமாக வருகின்றனவே. விஷவண்டுகளை இறக்குமதி செய்துவிட்டார்களோ?

எல்லாவற்றுக்கும் யார்மீதாவது சந்தேகப்படுவதே வேலையாகி விட்டது. இங்கே இல்லாத விஷ ஜந்துக்களா! அவையெல்லாம் கிடைத்த ஏதாவது ஓரிடத்தில் வாழ்ந்துகொண்டிருக் கின்றன. நமக்கு எல்லா இடங்களுமே தேவையாக இருக்கின்றனவே. தேடித் தேடிப் போய்ச் சீண்டுகிறோம்... சீற்றமாகிவிடுகின்றன.

@கிணற்றுத்தவளை, புதுக்கோட்டை.

நடிகர்கள் இருவர் பற்றி அரசியல் கட்சியினர் வரிந்துகட்டிக்கொண்டு விவாதிக்கிறார்கள். அனல்பறக்கும் விவாதங்கள் மாநிலம் முழுக்க அலையடிக்கின்றன. ஆக, மிகமிக விரைவில் அனைத்துத் துறைகளிலும் நாம் தன்னிறைவு அடைந்துவிடுவோம்தானே?

எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்திலிருந்தே இப்படி ‘தன்னிறைவு’ அடைந்துகொண்டுதானே இருக்கிறோம்.

@இல.கண்ணன், நங்கவள்ளி, சேலம் மாவட்டம்.

பெரியார் இப்போது இருந்திருந்தால் வெங்காயம் விலையேற்றத்தைப் பற்றி என்ன சொல்லியிருப்பார்?

வெங்காயம் என்னடா பெரிய வெங்காயம். ஆடு, மாடு எல்லாம் வெங்காயத்தைச் சாப்பிடுதா? அது இல்லாமலும் சமைக்க முடியும்னு சொன்னா, எந்த வெங்காயம் கேக்கறான். வெங்காயம் இல்லாம சாப்பிட்டா, செத்தா போகப் போறானுவ... எல்லாம் காட்டுமிராண்டி பயலுவ!

@பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை, சேலம் மாவட்டம்.

மீடியாக்களின் நாயகனாக இருந்த ‘தினகரனை’ இன்று ஒட்டுமொத்த மீடியாக்களும் புறக்கணிப்பது ஏன்?

ஒரு செய்தி / நபர், பரபரப்பாகப் படிக்கப்படும்போது / பார்க்கப்படும்போது, ‘நாயகன்’ அந்தஸ்தில் இருப்பது உண்மையே. பரபரப்பு அடங்கிவிட்டால் மறைந்து கிடக்கும். தேவைப்படும்போது வெளிப்படும். பொள்ளாச்சி, காவிரிப் பிரச்னை, விஜயகாந்த், சுப்பிரமணியன் சுவாமி, ஹெச்.ராஜா... இப்படி அடுக்கிக்கொண்டேபோகலாம். இது புறக்கணிப்பு அல்ல... ‘மறக்கணிப்பு!’

@ஆர்.சுந்தரராஜன், சிதம்பரம்.

‘முதலமைச்சரின் ராசியால் அனைத்து குளங்களும் நிரம்பி உள்ளன’ என்கிறாரே அமைச்சர் எஸ்.பி.வேலுமணி?

‘எங்கள் ஊருக்கும் கொஞ்சம் அவரை அனுப்பிவையுங்கள். நாங்கள் 100 டி.எம்.சி தண்ணீரை எடுத்துக்கொள்கிறோம்’ என்று தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரிலிருந்து கேட்கிறார்கள். கொஞ்சம் ஏரோபிளேன் ஏற்றிவிடுங்களேன் எஸ்.பி.வேலுமணி.

கே.வேதநாராயணன், மயிலாடுதுறை.

ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் பிரஸ்மீட்களுக்கு கழுகார் சென்றதுண்டா?

கேள்விப்பட்டதுண்டு.

@சரவணகுமார் சின்னசாமி, தாராபுரம்,

மேட்டுப்பாளையம் சுவர் விழுந்த சம்பவம் நடக்காமல் தடுத்திருக்க வேண்டியது உள்ளாட்சி மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள்தான். அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுப்பதன்மூலம் புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்தலாமே தமிழக அரசு?

மக்கள் இந்த அளவுக்குக் கொந்தளிக்க வில்லையென்றால், சுவரின் உரிமையாளர்மீதே நடவடிக்கை எடுத்திருக்க மாட்டார்கள். இதில் அதிகாரிகள்மீது வேறு நடவடிக்கை எடுக்கச் சொல்கிறீர்கள். அப்படிச் செய்தால், பல இடங்களிலிருந்தும் கமிஷன் கதைகள் கசிய ஆரம்பித்து, செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரை நாறி நசநசத்துவிடும் என்று அவர்களுக்குத் தெரியாதா என்ன?

@சி.பழனிவேலு, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர்.

கமல், ரஜினிகாந்த் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தால், வெற்றி சாத்தியமா... நல்லாட்சி அமையுமா?

கூட்டணி மேலும் பலம்பெறுவதைப் பொறுத்து வெற்றிகூட சாத்தியமாகலாம். ஆனால், நல்லாட்சிக்கு அவர்கள்தான் உத்தரவாதம் தர வேண்டும்.

@ஜெயம் ராஜேந்திரன், பொறையார், நாகப்பட்டினம் மாவட்டம்.

‘சமீப ஆண்டுகளாக, தேர்தலில் வாக்களிப்பதை பலர் தவிர்த்துவருகிறார்கள். இதனால் நல்ல பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு பறிபோகிறது’ என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளாரே?

எடியூரப்பாவுக்கு உண்மையிலேயே பெரிய மனதுதான். உண்மையை ஒப்புக்கொண்டு விட்டாரே!

@தி.மதிராஜா, சின்னபுங்கனேரி.

ஹைதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து, எரித்துக் கொன்ற நான்கு குற்றவாளிகளும் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதுதானே?

அவர்கள் குற்றவாளிகள் அல்ல... குற்றம்சாட்டப்பட்டவர்கள். நீதிமன்றம்தான் `குற்றவாளி’ என்று முடிவுசெய்ய முடியும். இது காவல்துறையில் வழக்கமாக நடக்கும் ‘என்கவுன்ட்டர்’; காவல் துறையினரைத் தாக்கிவிட்டு கைதிகள் தப்பி ஓடும்போது, யதேச்சையாக நடக்கும் மோதல் கொலை. ஆனால், நம் ஊரில் ‘என்கவுன்ட்டர்ல போட்டுத் தள்ளிடுவேன்’ என்று வெளிப்படை யாகச் சொல்லியே செய்வதுதான் அதிகம் நடக்கிறது. ‘இவனுங்களை யெல்லாம் சுட்டுக் கொல்லணும்’, ‘நடுரோட்டில் தூக்கில் போடணும்’ என்று பொதுமக்கள் மட்டுமல்ல, நாடாளுமன்றத்திலேயே பேசுகிறார்கள். இத்தகைய சூழலில்தான் இந்த ‘என்கவுன்ட்டர்’ நடந்திருக்கிறது. நீதியின்மீதும் சட்டத்தின்மீதும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கேகூட நம்பிக்கை இல்லாமல்போய்விட்டதைத்தான் காட்டுகிறது, இந்த நடவடிக்கைக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு. ஆனால், இது ஆபத்தான போக்கு. சட்டத்தின் ஆட்சியையும் நீதியின் ஆட்சியையும் சமரசமில்லாமல் நிலைநாட்டுவதைத்தான் அனைவருமே வற்புறுத்த வேண்டும்... வரவேற்க வேண்டும். இல்லையென்றால், காரணமே இல்லாமல்கூட நாளை நமை நோக்கியும் பாயும் தோட்டா!

@ஜி.ஆர்.மாதேஸ்வரன், புளியம்பட்டி, ஓமலூர்.

ஆன்மிகத்தின் பெயரால் பெண்களை பாலியல் கொடுமை செய்பவர்களையும் ‘என்கவுன்ட்டர்’ செய்வார்களா?

அவர்கள்தான் ‘வித்தைகள்’ கற்றவர்களாயிற்றே!

@எம்.தமிழ்மணி, வெள்ளகோவில், திருப்பூர் மாவட்டம்.

ப.சிதம்பரத்தின்மீது இருந்த கோபம் அமித் ஷாவுக்கு இப்போதாவது குறைந்திருக்குமா?

அதுதான் 96 - 106 என்று கணக்கு நேர்செய்யப்பட்டுவிட்டதே!

ஜெ.ஜானி, போரூர், சென்னை 116.

‘மரணமே தண்டனை என்றால்தான் ஒழுக்கம் வரும். எங்களுக்கு அரசாள வாய்ப்பு கிடைத்தால் என்கவுன்ட்டர் தண்டனைகள் நிச்சயம் உண்டு’ என்று சீமான் கூறுகிறாரே?

தாலிபான் பராக்!

@கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்-6.

உள்ளாட்சித் தேர்தல் குழப்பத்தை இதைவிட மோசமாக வேறு யாராவது செய்ய முடியுமா?

ம்... எவ்வளவு பாடுபட்டு, அழகாக ஸ்கெட்ச் போட்டு செய்து முடித்துள்ளார்கள். அதைப்போய்...

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை- 600002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!