@அசோகன் பழனிசாமி

கொரோனாகாலத் திருமணங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

திருமணம் என்பது இரு மனங்கள் இணையும் அற்புதமான நிகழ்வு. அதை தங்கள் அந்தஸ்தை நிலைநிறுத்திக்கொள்ள ஆடம்பரமாகச் செய்தவர்கள் ஒருபக்கம்; ஊரார் மெச்ச வேண்டுமே என்பதற்காகக் கடன் வாங்கி ஆடம்பரமாகச் செய்தவர்கள் இன்னொரு பக்கம். கொரோனா காலத்தில் இந்த ஆடம்பரங்களுக்கு வழியில்லாததால், செலவற்ற எளிமையான திருமணங்கள் நடைபெற்றன. அந்தப் பணத்தைச் சேமிப்பாக்கும் தம்பதிகள், பிற்காலத்தில் கொரோனாவுக்கு நன்றி சொல்லக்கூடும்!

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

சினிமா கலைஞர்கள், சினிமாவில் மார்க்கெட் போனால் சின்னத்திரைக்கு வருவதுபோல, அரசியல்வாதிகள் மார்க்கெட் போனால் என்ன செய்வார்கள்?

ஒரு சிலர் வில்லனும் காமெடியனுமாக சினிமாவுக்கு வருகிறார்கள்... மற்றவர்கள் வீட்டிலுள்ள கரன்ஸி நோட்டுகளை எண்ணிக்கொண்டிருப்பார்கள்!

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14.

அமெரிக்காவின் புதிய துணை அதிபர் கமலா ஹாரிஸ், அவருடைய உறவுகளைக் காண தமிழகம் வர விரும்புவாரா?

உறவுகளுக்காக மட்டுமல்ல, அவருக்குப் பிடித்த சென்னையின் சாம்பாருக்காகக்கூட வர விரும்பலாம்!

ச.ந.தர்மலிங்கம், ஈரோடு.

‘முதல்வர் பழனிசாமி எல்லாருக்கும் மிகப்பெரிய கடவுளாகக் காட்சியளிக்கிறார்...’ என்று ஆரம்பித்து மிகப்பெரிய புகழ்மாலையைச் சூடியிருக்கிறாரே விஜயபாஸ்கர்?

அந்தக்கால அரசவையில் புலவர்கள் புகழ்மாலை சூடுவார்கள்; மந்திரிகள் மக்கள் பணிகளைச் செய்வார்கள். இங்கே புலவர்கள் வேலையையும் மந்திரிகளே செய்கிறார்கள். பாவம்... அவர்மீது ஒன்றிரண்டு வழக்குகளா இருக்கின்றன... அதையெல்லாம் சரிக்கட்ட வேண்டுமல்லவா?

@பெ.பச்சையப்பன், கம்பம்.

இயற்கைச் சீற்றங்கள் அரசியல்வாதிகளுக்கு நல்ல புத்தியைக் கொடுக்குமா?

கடந்தகால பாதிப்புகளிலிருந்து அவர்கள் பெரிதாகக் கற்றுக்கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. நல்ல புத்தியைக் கொடுக்கின்றனவோ, இல்லையோ... புதிய புதிய கான்ட்ராக்ட்டுகளைக் கொடுத்து வருமானத்துக்கு வழிசெய்யும்!

கே.விஸ்வநாதன், கோவை.

ஓர் அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்குத் தேவையானது பணமா, புகழா, திறமையா?

ஒரு காலத்தில் அர்ப்பணிப்பு, புகழ், திறமை வேண்டும் என்று இருந்த நிலை மாறி, இப்போது பணம் மட்டுமே போதுமென்றாகிவிட்டது. எல்லாம் காலக்கொடுமை!

@மைதிலி கோகுலகிருஷ்ணன், விசலூர்.

உலகக் கால்பந்தாட்ட வீரர் மாரடோனா காலமாகிவிட்டாரே... அவர் குறித்து?

கால்பந்து விளையாட்டில் பலருக்கும் ஆதர்ச நாயகன். அவரது ஆதர்ச நாயகர்களோ சே குவேராவும், ஃபிடல் காஸ்ட்ரோவும்!

தன் வலது தோளில் சே குவேராவையும், இடது காலில் ஃபிடல் காஸ்ட்ரோவையும் டாட்டூ குத்தியிருந்தார். 1986 உலகக்கோப்பைப் போட்டியில் கையால் கோல் அடித்தது பரபரப்பாகி, அது ‘கடவுளின் கை’ என்று பேசப்பட்டது. ஆனால், அதே விளையாட்டில் மாரடோனா அடித்த இரண்டாவது கோல், ‘நூற்றாண்டின் கோல்’ என்று போற்றப்பட்டது. பாதி மைதானத்துக்கு மேல் தனி ஒருவனாக எதிரணியின் ஐந்து வீரர்களை அநாயாசமாகக் கடந்து 11 ‘டச்’ களில் அந்த கோலை அடித்திருந்தார் மாரடோனா! எந்த வசதிகளுமற்ற கிராமச் சிறுவர்களுக்கும் ஃபுட்பாலை அறிமுகப்படுத்தி, பலரை விளையாட்டு வீரர்களாக்கிய பெருமை மாரடோனாவுக்கு உண்டு!

@ஸ்ரீ.பூவராகவன், படியூர், காங்கேயம்.

திரையுலகில் கொடிகட்டிப் பறக்கும் ஹீரோக்கள் அரசியலைக் கண்டு அஞ்சுகிறார்களே..?

திரையுலகில் முதலிலேயே ஸ்கிரிப்ட் தெரிந்துவிடும்... அரசியலில் அப்படி இல்லையே!

மணிபல்லவன், விழுப்புரம்.

அரசு பஸ்கள் இவ்வளவு ஒழுகுகின்றனவே?

தவறுகளிலிருந்து தப்பிக்க, சட்டத்தின் ஓட்டைகளைத் தேடுவதற்கே நேரமில்லாதவர்களுக்குச் சாமானியர்களை பாதிக்கும் இந்தச் ‘சாதாரண’ ஓட்டைகள் பற்றி கவனிக்க நேரமிருக்குமா என்ன?!

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

புயல் வெள்ள பாதிப்புகளுக்கு உள்ளானவர் களைத் தேடிச் சென்று உதவுவதில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், தன்னார்வலர்கள் இவர்களிடையே என்ன வித்தியாசம்?

அதிகாரிகளுக்கு அது கடமை. அரசியல்வாதிகளுக்கு வரும் தேர்தலுக்கான மூலதனம்.தன்னார்வலர்களுக்கு அது சேவை!

@இல.கண்ணன், நங்கவள்ளி.

“கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அது நம் கையில் இல்லை. ஆனால் அதில் சிலர் அரசியல் செய்கின்றனர்” என்று பிரதமர் மோடி கூறுகிறாரே..?

பரவாயில்லையே... சுயவிமர்சனமெல்லாம் செய்துகொள்கிறாரே!

கணேசன், சென்னை.

டெல்லியில் மாஸ்க் போடவில்லையென்றால், ரூ.2,000 அபராதம் என்ற முதல்வரின் அறிவிப்பு..?

`இன்னும் என்னை ஞாபகம்வெச்சிருக்கீங் களாடா’ன்னு கொரோனாவே இதைக் கேட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்திருக்கும்!

திருப்பூர் அர்ஜுனன்.ஜி, அவிநாசி.

அமித் ஷா வருகைக்கு முன்... அமித் ஷா வருகைக்குப் பின்!?

அவர் வருகைக்கு முன் மூச்சை இழுத்துப் பிடித்த அந்த இருவரும், அதற்குப் பின் ‘அப்பாடா’ என்று நிம்மதிப் பெருமூச்சுவிட்டிருப்பார்கள். அவ்வளவுதான்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை,சென்னை-600 002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!