பாஸ்கர், சென்னை.

டெல்லியில், பாரதியார் சிலையிலிருந்த கைத்தடி காணாமல் போயிருக்கிறதே..?

உ.சிவன், திருமங்கலம்.

சாத்தான்குளம் சம்பவத்துக்குப் பிறகும், காக்கிகளின் அதிகார அத்துமீறல்கள் அன்றாடம் ஏதாவதொரு பகுதியில் தொடர்கதையாக இருக்கின்றனவே... இதற்கு முடிவே கிடையாதா?

தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரம் மக்களைக் காப்பதற்கானதே அன்றி, மக்களை பயத்தால் அடிமைப்படுத்த அல்ல என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்து, அவர்களுக்கும் உணர்த்தும்வரை இதற்கு முடிவே கிடையாது!

@ஜெ.நெடுமாறன், ராமாபுரம், சென்னை.

அரசியலிலும் வெற்றி பெற வேண்டுமென்று ரஜினிகாந்துக்கு சிரஞ்சீவி வாழ்த்து கூறியுள்ளாரே..?

அப்படியா சொன்னார்... ‘என்னை மாதிரி ஆகிடாதீங்க ரஜினி’னு சொன்னதாகக் கேள்விப்பட்டோமே!

ராமலிங்கம், மேல்மருவத்தூர்.

எழுத்தாளர்கள் எப்போதும் சீரியஸாகத்தான் இருப்பார்களா?

அமிதாப் பச்சன் சொன்ன ஒரு சம்பவம். ஒருமுறை அமிதாப், தமிழ் எழுத்தாளர் ஒருவரைச் சந்தித்திருக்கிறார். அவர் அமிதாப்பைப் பார்த்து, “நீங்க என்ன வேலை செய்யறீங்க?” என்று கேட்டிருக்கிறார். இந்தச் சம்பவத்தைப் பற்றிச் சொன்ன அமிதாப், “நான் அதிர்ந்துபோனேன். இந்தியாவிலேயே பிரபலம் என்று நினைத்துக்கொண்டிருந்த என் கர்வத்தை அந்த எளிய மனிதர் கலைத்துவிட்டார். ஒருவேளை அவர் பொய் சொல்லியிருந்தால், என்னைவிட சிறந்த நடிகர் அவர்” என்றார் அமிதாப். அந்த எழுத்தாளர், க.நா.சுப்ரமணியம். பிற்பாடு க.நா.சு-விடம் இது பற்றிக் கேட்டபோது, சும்மா வேண்டுமென்றே கேட்டதாகச் சொல்லியிருக்கிறார். எழுத்தாளர்கள் உண்மையில் குசும்புக்காரர்களும்கூட!

ஆர்.ஜெயச்சந்திரன், திருச்சி.

உதயநிதி மூலம் தி.மு.க ஏற்படுத்தும் தேர்தல் பிரசாரப் பரபரப்பு, தன் பலத்தைக் கூட்டணிக் கட்சிகளுக்குக் காட்டவா அல்லது ஆளுங்கட்சியை மிரட்டவா?

ஸ்டாலினைப் பொறுத்தவரை ‘அடுத்தது இவர்தான்’ என்று அறிவிப்பதற்கும்; உதயநிதியைப் பொறுத்தவரை ‘அடுத்தது நான்தான்’ என்பதை நிலைநிறுத்திக்கொள்வதற்கும்; இருவருமாகச் சேர்ந்து ‘இனி இதை ஏற்றுக்கொள்வதுதான் உங்களுக்கிருக்கும் ஒரே வாய்ப்பு’ என்று தொண்டர்களைத் தயார்ப்படுத்துவதற்கும்!

@ஈஸ்வரன், சேலம்.

`வரும் தேர்தலில் எனது பங்களிப்பும் இருக்கும்’ என்கிறாரே மு.க.அழகிரி?

நிச்சயம் இருக்கும். அவரும் வாக்காளர்தானே... அவருக்கும் இருக்குமல்லவா ஒரு வாக்கு!

@பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை, சேலம் (மா).

‘மக்களை அறிவுகெட்ட கூட்டமாக ரஜினி நினைக்கிறார்’ என்று சீமான் கூறுகிறாரே..?

ரஜினி மட்டுமல்ல... யார் மக்களை முட்டாளாக நினைத்தாலும், அவர்கள் சொல்லும் கதைகளை எளிதில் கண்டுபிடித்து நிராகரித்துவிடுவார்கள் மக்கள்!

@சே.எட்வின், மயிலாடுதுறை.

‘தமிழகம் மீட்போம்’, ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்’, ‘சீரமைப்போம் தமிழகத்தை’, ‘நம்மில் ஒருவர், நமக்காக ஒருவர்’ - கழுகாரைக் கவர்ந்தது எந்த வசனம்?

கவர்ச்சியான வசனங்களைக் கேட்டுக் கேட்டு மக்களுக்குப் புளித்துப்போய்விட்டது. செயலே சிறந்த வசனம்!

@சரோஜா பாலசுப்ரமணியன்.

காணாமல் போனது தங்கமா... சிபிஐ-யா?

சிபிஐ மீதான மக்களின் நம்பிக்கை!

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14.

ஒருவழியாக, ரஜினி புதிய கட்சியை ஆரம்பிக்கவிருக்கிறார். இதற்கு உத்வேகம் ஊட்டிய தமிழருவி மணியனின் மனது இப்போது எப்படியிருக்கும்?

இதற்கு மேல் என்ன நடக்குமோ என்ற பதைபதைப்பில் இருப்பார்!

சீனிவாசன், கண்டனூர், சிவகங்கை.

ஓ.பி.எஸ் கூறிய ‘அந்த ஜெயலலிதா மரணத்தைப் பற்றிய மர்மத்தை’ மக்களுக்குத் தெரியப்படுத்தாமலேயே ஆட்சிக்காலத்தை முடிக்கப்போகிறார்களே..?

மர்மம் என்று கூறிய ஓ.பி.எஸ்., விசாரணை கமிஷனில் நான்கு ஆண்டுகளாக ஆஜராகாததே பெரிய மர்மமாக இருக்கிறதே!

@கு.ப.இரகுநாதன், பூவிருந்தவல்லி.

‘ஒரே தேசம் ஒரே ரேஷன்’ முதல் ‘ஒரே தேசம் ஒரே மருத்துவம்’ வரை வந்தாயிற்று. இன்னும் எத்தனை `ஒரே’க்கள் என்று பட்டியலிட முடியுமா?

இந்த ‘ஒரே’க்களைக் கடந்து, சாதியப் பாகுபாடுகள் இல்லாது மனிதர்களெல்லாம் ஒன்றே என்ற நிலை வந்தால் சந்தோஷப்பட்டுக்கொள்ளலாம்!

@சீ.பாஸ்கர், நந்திவரம்-கூடுவாஞ்சேரி.

‘என்ன விலை கொடுத்தாவது விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்போம்’ என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறாரே..?

பெரிய விலையெல்லாம் எதற்கு... அழைத்துப் பேசி, அவர்களின் குறை தீர்த்தால் போதாதா!