வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

`மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்றால், கூட்டணி அமைவதெல்லாம்..?

பேரம் அமையும் விதம்!

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.

`பழைய 41 தொகுதிகள் கிடைத்தால் போதும்...’ என்று பெருந்தன்மை காட்டுகிறதே தே.மு.தி.க?

ஓ... இதுக்கு உங்க ஊர்ல பெருந்தன்மைன்னா பேருவெச்சிருக்காங்க?

த.சிவாஜி மூக்கையா, தர்காஸ்.

மரியாதை நிமித்தமான சந்திப்பு, அரசியல் சந்திப்பு... என்ன வித்தியாசம்?

கூட்டணி பேரம் படிந்து ஓகே ஆகிவிட்டதை வெளியில் சொல்ல முடிந்தால், அது அரசியல் சந்திப்பு. இழுபறி என்றால் அது மரியாதை நிமித்தமான சந்திப்பு!

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

அரசியல்வாதிகளிடம் நெருங்கிப் பழகலாமா?

அரசியல்வாதிகள் மட்டுமல்ல சொக்கலிங்க ஆதித்தன்... யாரோடு பழகவும் வள்ளுவர் சொன்ன

தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும் என்ற குறளைப் பின்பற்றலாம்.

பெ.வெங்கடேசன், ஓசூர்.

அரசியல் கட்சிகள் தேர்தலில் தனித்துப் போட்டியிடாமல் ,கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது எதனால்?

ஒரே கருத்துள்ள கட்சிகள், மக்கள்நலனுக்காக ஒன்றிணைந்து களம் காணும்போது எதிரிகளை எளிதில் வீழ்த்த முடியும் என்ற கோட்பாடுதான். ஆனால், இன்றைக்கு நடக்கும் கூத்துகளைப் பார்த்தால்...

@ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

கடன் வாங்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

நம் முன்னோர்கள் காலத்தில் கிரெடிட் கார்டுகளோ, கடன் கொடுக்க இத்தனை நிறுவனங்களோ இல்லை. அவர்களிடம் தொலைநோக்கோடு திட்டமிடலும் இருந்தது. அவர்களிடமிருந்து அந்தப் பொருளாதார நுண்ணறிவுகளைக் கற்றுக்கொண்டு, பின்பற்றத் தவறிவிட்டோம். முறையாகத் திட்டமிட்டாலே கடன் வாங்குவதைத் தவிர்த்துவிடலாம்.

பிரகாஷ், நெல்லை.

கமல்ஹாசனின் திடீர் தீவிரப் பிரசாரங்கள் குறித்து..?

`திடீர்’ என்று சொல்ல முடியாது. தேர்தல் சமயத்தில் எல்லா கட்சிகளும் செய்வதுதான். கமல் கொஞ்சம் முந்திக்கொண்டுவிட்டார்!

@ஆதித்தன், திருநெல்வேலி.

ஆட்டோ எப்படிச் செல்லும்?

இப்பதான் எஃப்.சி-க்கு நிக்குது. பர்மிட் கிடைச்சதும், டிரைவர் ஓட்டுகிற வழியில் செல்லும்.

@ந.சண்முகம், திருவண்ணாமலை.

ஒரே மாதத்தில் இரண்டு முறை சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டது பற்றி?

‘பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்...’ என்றார் திருவள்ளுவர். ஒரு பக்கம் பெட்ரோல் விலை, இன்னொரு பக்கம் சமையல் எரிவாயு விலை என்று நம்மையும் அறியாமல் எளிய மக்கள்மீது சுமையை ஏற்றிக்கொண்டே போகிறது அரசு. மக்கள் கணக்கு வைத்துக்கொண்டு தான் இருப்பார்கள்.

எஸ்.சிவகுமாரன், சென்னை.

‘யாமறிந்த மொழிகளிலே’ என்று தமிழை விதந்தோதும் பாரதிக்கு வேறு என்ன மொழிகள் தெரியும்?

தமிழ் அல்லாது ஆங்கிலம், சம்ஸ்கிருதம், இந்தி, வங்காளம், பிரெஞ்சு, இத்தாலி ஆகிய ஆறு மொழிகள் தெரியும். இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்திருந்தால், இன்னும் சில மொழிகளைக் கற்றிருப்பார் பாரதி. உலகளாவிய அறிவையும் கலை ஞானத்தையும் அடைவதில் அப்படி ஓர் ஆவல் அவருக்கு.

‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!’

என்ற அவரது வரிகளில் அதை உணரலாம்.

@கே.கே.வெங்கடேசன், செங்கல்பட்டு.

உலகை ஆள வேண்டும் என்று நினைத்த ஹிட்லர், நெப்போலியன் போன்றோரின் முடிவு சோகமாக இருந்திருக்கிறதே..!

அதிகாரமோ, சர்வாதிகாரமோ என்றும் நிலைத்ததில்லை என்பதற்கான சான்றுகள்தான் அவை.

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை.

அம்மா மினி கிளினிக்?

நல்ல நோக்கத்துடன் தொடங்கப்படும் திட்டங்கள், அதே நோக்கத்துடன் தொடர்ந்து செயல்படும் போதுதான் மக்களுக்கு நன்மை பயக்கும்.

வெங்கடேசன், கிருஷ்ணகிரி.

போராடுபவர்களால் இந்த நாட்டை மாற்றிவிட முடியுமா?

அமெரிக்காவில் அமைதித் தூதுவராகப் பணியாற்றிய ஏ.ஜே.மஸ்டி என்ற பாதிரியார் வியட்நாம் போருக்கு எதிராக ஒற்றை மெழுகுவத்தியுடன் வெள்ளை மாளிகைக்கு எதிரில் நின்று போராடிக்கொண்டிருந்தார். ஒரு நிருபர் அவரிடம், ``நீங்கள் இப்படித் தனியாகப் போராடுவதன் மூலம் நாட்டின் கொள்கைகளை மாற்றிவிட முடியுமென்று நம்புகிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு மஸ்டி கூறினார்: ‘‘நான் இந்த நாட்டை மாற்ற வேண்டும் என்று இதைச் செய்யவில்லை. இந்த நாடு என்னை அதைப்போல மாற்றிவிடக் கூடாது என்றுதான் இந்த எதிர்ப்பில் ஈடுபடுகிறேன்.”

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை,சென்னை-600 002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!