@கோபி ராம், ஒட்டன்சத்திரம்.

`விவசாயிகள் பீட்ஸா தின்கிறார்கள்... இதுவா போராட்டம்...’ என்று பா.ஜ.க-வினர் பலரும் கேட்பது பற்றி..?

விவசாயிகள் ஏன் பீட்ஸா சாப்பிடக் கூடாது? பீட்ஸாவில் கோதுமையும் பால் பொருள்களும்தான் பிரதானம். இவை இரண்டையும் பெருமளவில் உற்பத்தி செய்யும் அவர்கள், பீட்ஸா சாப்பிடுவதில் என்ன கேலி, கிண்டல் வேண்டியிருக்கிறது... உணவை அரசியலுக்குள் இழுத்து வருவது பா.ஜ.க-வுக்கு புதிதா என்ன?

லட்சுமி செங்குட்டுவன், வேலூர்.

முதல்வருக்குப் பிரசார வாகனச் செலவுகள் அரசிடமிருந்தா... இல்லை, கட்சியிலிருந்தா?

ஏன்... ஏதாவது ஒப்பந்ததாரர் ஏற்பாடா இருந்தா ஏத்துக்க மாட்டீங்களா?

அ.குணசேகரன், புவனகிரி, சேலம்.

ரஜினியின் கட்சி பெயர், ‘மக்கள் சேவைக் கட்சி’ என்றும் சின்னம் ‘ஆட்டோ’ என்றும் செய்தி வெளியாகிக்கொண்டிருக்கிறதே... உண்மையா கழுகாரே?

கவனித்திருக்கிறீர்களா... சில விளம்பரங்களில் ஸ்டார் போட்டு ‘கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அது ரஜினியின் அறிவிப்புகளுக்கும் பொருந்தும்.

மதிராஜா திலகர், சின்னபுங்கனேரி.

ஊழல் இல்லா அரசியலும் ஆட்சியும் இந்தியாவில் அமையப்பெறுவது எப்போது?

நம் காலத்தில் அது நடக்க வேண்டும் என்ற முனைப்புடன், நாம் அறத்தோடு நடந்துகொண்டு நேர்மையானவர்களைத் தேர்ந்தெடுத்தால், குறைந்தபட்சம் நம் அடுத்தடுத்த தலைமுறை களிலாவது அது நடக்கலாம்!

வீ.கே.கஸ்தூரிநாதன், குழிபிறை, புதுக்கோட்டை.

மோடி, திருக்குறளையும் பாரதியையும் வானளாவப் புகழ்கிறார். ஆனால், இருவருக்கும் தேசிய அங்கீகாரம் மட்டும் தர மறுக்கிறாரே?

பாரதியாரோ திருவள்ளுவரோ அரசியல் மேடைகளில் வசனம் பேசுவதற்கு மட்டுமான கறிவேப்பிலைகள் கிடையாது. உண்மைகளை எப்போதுமே மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்!

த.சிவாஜி மூக்கையா, தர்காஸ்.

`காந்தியின் பேரனும் நான்தான்... எம்.ஜி.ஆரின் நீட்சியும் நான்தான்’ என்று கமல் கூறியிருக்கிறாரே?

திரைப்படங்களில் ‘ஏ’ சென்டர் ஆடியன்ஸுக்கு மட்டுமானவர் என்று பார்க்கப்பட்ட கமல், இந்தப் பிரசாரத்தில் ஏ, பி, சி என அனைத்துத் தரப்பினரையும் இழுத்துப் பிடிக்க முடிவு செய்து களமிறங்கியிருப்பது தெரிகிறது. ஒரு திரியைக் கொளுத்திப்போட்டு பல பட்டாசுகளை வெடித்திருக்கிறார். ரிசல்ட் எப்படி இருக்குமோ... ஆனால் ‘அண்ணாத்த’ ஆடத் தொடங்குவதற்கு முன் இந்த ‘அண்ணாத்த ஆடுறார்!’

@ராதாகிருஷ்ணன், ராஜபாளையம்.

காமராஜர் ஆட்சி என்று சொல்லிக்கொண்டிருந்த பலரும், இப்போது எம்.ஜி.ஆர் ஆட்சி என்று சொல்கிறார்களே?

ஓடுகிற குதிரையில் பணம் கட்டுவதில் நம்மாட்கள்தான் கைதேர்ந்தவர்களாயிற்றே!

முருகேசன் சண்முகம், மார்த்தாண்டம்.

உலகின் சிறந்த நடிகராகப் போற்றப்படும் மார்லன் பிராண்டோவிடமிருந்து நம் நடிகர்கள் எதைக் கற்றுக்கொள்ள வேண்டும்?

‘தி காட் ஃபாதர்’ படத்துக்காக மார்லன் பிராண்டோவுக்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டது. அப்போது அவர் சார்பாகச் செவ்விந்திய இனத்தைச் சேர்ந்த நடிகை சாஷீன் லிட்டில்ஃபெதர் என்ற நடிகை மேடையேறுகிறார். விருது வாங்க அல்ல. மார்லன் பிராண்டோவின் சார்பில் ஒரு கடிதத்தைப் படிக்கிறார். திரைப்படங்களில் அமெரிக்காவின் பூர்வகுடிகளான செவ்விந்தியர்கள் மோசமானவர்களாகச் சித்திரிக்கப்படுவதை எதிர்த்து, ஆஸ்கர் விருதைப் பெற்றுக்கொள்ள மார்லன் பிராண்டோ மறுத்து எழுதிய கடிதம்தான் அது. அப்போது என்றில்லை, அதற்கு முன்னமே தென்னாப்பிரிக்கக் கறுப்பின மக்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று போராட்டங்களிலெல்லாம் கலந்துகொண்டு குரல் கொடுத்தவர் அவர். இப்படி, கலையைச் சமூகத்துக்குமானதாகப் பயன்படுத்தும் அவரது நோக்கத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்!

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

எந்தக் கேள்வி கேட்டாலும் கூலாக பதில் சொல்கிறாரே அமைச்சர் ஜெயக்குமார்... டென்ஷன் இல்லா அமைச்சர் அவர் ஒருவர்தானா?

அவருக்குள் எவ்வளவு வேதனை இருக்குமோ... தலைக்கு மேல் வெள்ளம் போன பின், வலிக்காத மாதிரியே நடிச்சாத்தான் களத்துல நிக்க முடியும்கிற உண்மை தெரிஞ்சவர் அவர்!

@நிவேதா, கோவை-14.

நடிகர்கள் மக்கள் சேவை புரிவதால் அவர்களுக்கு என்ன பயன்?

சிரஞ்சீவி நடிக்கும் ‘ஆச்சார்யா’ படத்தில் வில்லன், நடிகர் சோனு சூட். சண்டையில் வில்லனை ஹீரோ உதைப்பதுபோல ஒரு காட்சி. “கொரோனா டைம்ல நீங்க பண்ணின பல சேவைகள்னால இப்போ உங்களுக்கு ஒரு இமேஜ் உருவாகியிருக்கு. உங்களை நான் உதைக்கற மாதிரி நடிச்சா நல்லாயிருக்காது” என்ற சிரஞ்சீவி, இயக்குநரை அழைத்து காட்சியை மாற்றச் சொல்லியிருக்கிறார். வழக்கமாக ஹீரோவுக்காகத்தான் காட்சியை மாற்றுவார்கள். நிஜ வாழ்வில் கொஞ்சம் நல்லது செய்தால், வில்லனும் ஹீரோவாகலாம்!

சம்பத்குமாரி, பொன்மலை.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததற்காக, தன் மனைவி சுஜாதா மொண்டல் கானிடமிருந்து விவாகரத்து கோரியிருக்கிறாரே பா.ஜ.க எம்.பி சௌமித்ரா கான்?

காக்கா உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாக, ரொம்ப நாள் சண்டையை அரசியல் ஸ்டன்ட்டுக்காகப் பயன்படுத்திக்கொண்டிருப்பார். வேறென்னெ!