Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்

மக்களைச் சந்திப்பதில் எடப்பாடியார் ஜெயலலிதாவைவிட, ஏன் மற்ற மாநில முதல்வர்களைவிட முன்னணியில்தானே இருக்கிறார்?

அனன்யா, பொள்ளாச்சி.

‘நிவர்’ புயல் பாதிப்பில் சென்னை தப்பியதற்கு யார் காரணம்?

வேறு யாராக இருக்க முடியும்! `ஏற்கெனவே கொரோனா, பொருளாதார மந்தநிலை என்று நொந்துபோயிருக்கும் மக்களை நாமும் சோதிப்பானேன்’ என்று நிவர் புயலே நினைத்திருக்கும்போல. அதுதான் இயற்கையின் பெருங்கருணை!

கழுகார் பதில்கள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

@V.பாலசுப்பிரமணியன், மன்னார்குடி.

ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை இன்னும் மத்திய அரசு செயல்படுத்திவருகிறதா?

மாமல்லபுரத்தில்கூட அதற்கான போட்டோ ஷூட்டெல்லாம் நடந்ததே பார்க்கலையா நீங்க... மறந்துட்டீங்களா?

@மா.பழனி, தருமபுரி.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் எதை மையப்படுத்தி பிரசாரம் செய்வார்கள்?

எல்லாருமே மக்கள்நலனை மையப்படுத்தி பிரசாரம் செய்து வசீகரமான வாக்குறுதிகள் கொடுப்பதுதான் வழக்கம். ஆனால், தேர்தல் முடிந்ததும் அவரவர் செய்ய நினைத்ததைத்தான் செய்வார்கள் என்பதுதான் கடந்த காலம் நமக்குச் சொன்ன வரலாறு.

@பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.

லஞ்சம், ஊழல், குடும்ப அரசியல், சாதி, மதம் இவற்றைத் தவிர்த்த ‘தமிழக அரசியல் தலைவரை’ மக்கள் தேர்ந்தெடுக்கும் காலம் எப்போது?

எல்லாம் மக்கள் கையில்தான் இருக்கிறது!

@ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

நாடு எதைத் தாங்காது, கடல் கொந்தளிப்பு... அரசியல்வாதிகள் கொந்தளிப்பு?

மக்களின் கொந்தளிப்பு!

@தாராபுரம் ரவிச்சந்திரன்.

மற்றவற்றைவிடுங்கள். மக்களைச் சந்திப்பதில் எடப்பாடியார் ஜெயலலிதாவைவிட, ஏன் மற்ற மாநில முதல்வர்களைவிட முன்னணியில்தானே இருக்கிறார்?

ஆள்பவர்களின் தலையாய கடமையே மக்களைச் சந்திப்பதுதான். அதையே சிலாகித்துப் பேசுமளவுக்கு இன்றைய அரசியல்வாதிகள் இருப்பது வருத்தமளிக்கக்கூடிய விஷயம்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நாகராஜன், மேல்மருவத்தூர்.

ஈரானில், காரில் சென்று பாடம் எடுத்த ஓர் ஆசிரியர் வைரல் ஆகியிருக்கிறாரே..?

கழுகார் பதில்கள்

ஆம். தன்னிடம் படிக்கும் ஒரே மாணவிக்காக, காரில் தினமும் அவரது கிராமத்துக்குச் சென்று கற்றுக்கொடுக்கும் அந்த ஆசிரியர் தனது வெண்மை நிற காரையே போர்டாகப் பயன்படுத்தியிருக்கிறார். தன்னை வெளிப்படுத்திக்கொள்ளவே விரும்பாததுதான் இதில் ஹைலைட்.

அதே ஈரானைச் சேர்ந்த இன்னொருவர் ஜாஃப்ரி. ஆங்கில ஆசிரியையான அவர், உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதும் ஆன்லைன் வகுப்பு நடத்தியிருக்கிறார். அந்தப் புகைப்படம் வெளியாகி வைரலாகவே, ஈரானிய கல்வித்துறை மந்திரி அவரை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார். ஆன்லைன் கல்விக் காலத்தில் ஆசிரியர்களின் பணி பாராட்டுக்குரியது!

பாஸ்கர், சென்னை.

‘கலைஞரின் மூளை ஸ்டாலினிடம் இல்லை. அது அழகிரியிடம் உள்ளது’ என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியிருக்கிறாரே?

ஏற்கெனவே விஞ்ஞானிப் பட்டம் வாங்கியாச்சு. இப்ப ‘மூளை மாற்று’ பற்றியெல்லாம் பேசி டாக்டர் பட்டத்துக்கு அடிபோடுறார்போல!

சே.சே.முகமது கமால், கடையநல்லூர்.

அமித் ஷா வருகை... நிவர் புயல் வருகை... ஒப்பிடுக.

இரண்டுக்குமே நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. இரண்டுமே கணிக்க முடியாததாக இருந்தன. இரண்டுமே வந்த வேகத்தில் சென்றன!

ப.திருக்காமேஷ்வரன், குயவர்பாளையம், புதுச்சேரி.

புத்தகம் படிக்கும் பழக்கம் மிகவும் குறைந்து காணப்படுகிறதே?

ஒலி வடிவ நூல், வீடியோக்களில் புத்தகங்கள் என்று வடிவங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன. படிப்பவர்கள் படித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். வாசிப்பு பழக்கம் அடுத்த தலைமுறைக்கும் சென்றுசேர தங்கள் வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு வாசிப்பை ஊக்குவிக்க வேண்டும். இது பெற்றோர்கள், ஆசிரியர்கள் கையில்தான் இருக்கிறது!

குணசேகரன், வேலூர்.

மழைக்குச் சாலைகள் பல்லிளிப்பது, ஆட்சிகள் மாறினாலும் மாறாத காட்சியாக இருக்கிறதே!

பர்சன்டேஜ் மாறுவதால்தான்!

@மு.மதிவாணன், அரூர்.

‘ஆசியாவிலேயே லஞ்ச விகிதம் அதிகமாக உள்ள நாடு இந்தியா’ என்று ஊழல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்திருக்கிறதே..?

நமக்கெல்லாம் தெரிந்த செய்தியைத் தான் சொல்லியிருக்கிறார்கள். ஏதோ புதுசா கண்டுபிடிச்சதைப்போல பெருமைப்பட்டுக்கறாங்களே!

@பாண்டி முத்துராஜ்

இந்த தடவையாவது ரஜினி வருவாரா?

வருவதும் வராததும் அவரது தனிப்பட்ட விருப்பம். ஆனால், அதில் ஏன் இத்தனை குழப்பம் என்பதுதான் மக்களின் கேள்வி!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சீ.பாஸ்கர், நந்திவரம்-கூடுவாஞ்சேரி.

வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேற ட்ரம்ப் சம்மதம் தெரிவித்துவிட்டாரே?

கழுகார் பதில்கள்

வேறு வழி? சம்மதிக்காவிட்டால் வெளியேற்றப்படுவோம் என்பது அவருக்கும் தெரியுமே!

@பா.ஜெயப்பிரகாஷ், மாக்கினாம்பட்டி, பொள்ளாச்சி.

பிரதமர் மோடி வெண்தாடி வேந்தராகக் காட்சியளிப்பதன் மர்மம் என்னங்க சார்..?

கழுகார் பதில்கள்

அரசியல்வாதிகள் தங்கள் செயல்களில் நம்பிக்கைவைக்காமல், ஸ்டைல்களில் நம்பிக்கை வைப்பது சமீபகால யுக்தியாக மாறிவருகிறது. தமிழ்நாடு மட்டும் இதில் விதிவிலக்கா என்ன?

கழுகார் பதில்கள்

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை,சென்னை-600 002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!