ஆர்.முரளி, ஒரத்தநாடு, தஞ்சாவூர் மாவட்டம்.

‘பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைக்க வேண்டிய சூழல் வந்தாலும், அந்தக் கட்சியின் கொள்கைகளை ரஜினி ஏற்க மாட்டார்’ என்று தமிழருவி மணியன் கூறியிருக்கிறாரே?

இதென்ன வெங்காயக் கொள்கை!

@ஆர்.ராஜசேகரன்.

‘ஏர் இந்தியா’ நிறுவனத்தை தனியாருக்கு விற்பதன் மூலமாக, நாம் இந்தியாவின் அடையாளத்தை இழக்கிறோம்தானே?

அவமானத்தையும் சேர்க்கிறோம் (மஹா)ராஜா!

@சீதா ரவி, சிதம்பரம், கடலூர் மாவட்டம்.

போலி பத்திரிகையாளர்கள், போலி வழக்கறிஞர்கள், போலி அதிகாரிகள் வரிசையில் போலி அரசியல்வாதிகள் உண்டா?

ஆரம்பமே அவர்கள்தான். ‘அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்’ என்கிறது சிலப்பதிகாரம். ஆனால், இங்கே அரசியலை வைத்துப் பிழைப்பவர்களை ஒருபோதும் அறம் அப்படியெல்லாம் தண்டித்ததாகவே தெரிய வில்லை. ‘`அரசியல் என்பது மிக மிக உயர்ந்த சொல். மக்களால் மக்களை ஆள்வதற்காக உருவாக்கப்பட்டதுதான் அரசியல். ஆனால், அந்தப் பெயரைப் பயன்படுத்தி ‘கட்சி’ கட்டுவது தான் நடக்கிறது. இவர்களையெல்லாம் ‘கட்சிக்காரர்கள்’ என்று வேண்டுமானால் சொல்லலாம்’’ என்று ஒரு பெரியவர் என்னிடம் அடிக்கடி சொல்வார். ஆக, ‘அரசியல்வாதிகள்’ என்று சொல்வதே போலியானதுதான்!

@இந்து குமரப்பன், விழுப்புரம்.

‘பெரியாரால் அடித்தட்டு மக்கள் வளர்ந்திருக்கிறார்கள்’ என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறுவது சரியா?

யாராலும் மறுக்க முடியாதே!

@காந்தி, திருச்சி.

கிராமசபை தீர்மானங்கள் அரசின் முடிவை மாற்றுமா?

ஏமாற்றும்!

வி.ஹரிகிருஷ்ணன், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு மாவட்டம்.

‘தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடக்கிறது என்று விருது வழங்கியவர்களை அழைத்துவந்து அடிக்க வேண்டும்’ என மு.க.ஸ்டாலின் பேசியிருப்பது வன்முறையைத் தூண்டும் செயல்தானே?

பார்... முழுசா சர்வாதிகாரியா மாறிக் கொண்டிருக்கிற ஸ்டாலினைப் பார்!

@ம.தமிழரசி, வெள்ளக்கோவில், திருப்பூர் மாவட்டம்.

அரசியல் தலைவர்களை வீட்டுச் சிறையில் அடைத்துவைப்பது ஜனநாயகப்படி சரியா?

ஆளுங்கட்சி நினைத்தால் சர்வாதிகாரத்துக்கும் ஜனநாயகப் பூச்சு பூச முடியும். இதற்கென்றே நிறைய வழிமுறைகள் நம்முடைய சட்ட திட்டங்களில் ஏற் கெனவே தயாராக இருக்கின்றன. இதுபோன்ற சூழல்களில் நீதிமன்றங்களால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும். ஆங்கிலேயர் காலத்திலிருந்தே இதுதான் நடைமுறை.

‘காஷ்மீர் சிங்கம்’ என்றழைக்கப்பட்ட ஷேக் அப்துல்லா, 1950-களில் தேசத்துரோக வழக்கில் கைதானார். அவரை நம்முடைய கொடைக்கானலில் உள்ள ‘கோஹினூர் பங்களா’வில் சிறை வைத்தார் ‘ரோஜாவின் ராஜா’ நேரு. பிறகு வழக்கிலிருந்தே விடுவிக்கப்பட்டார் ஷேக் அப்துல்லா. அவருடைய மகனும் (பரூக் அப்துல்லா) பேரனும் (உமர் அப்துல்லா) இன்றைக்கு காஷ்மீரிலேயேதான் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டிருக்கின்றனர். அந்த வகையில் இந்த விஷயத்தில் ஜனநாயகம் கொஞ்சம் கூடுதலாகவேதான் இருக்கிறது.

@மா.உலகநாதன், திருநீலக்குடி.

‘இன்னும் 60 அமாவாசைகளுக்கு அ.தி.மு.க ஆட்சிதான்’ என்று சூளுரைக்கிறாரே தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்?

‘அமாவாசை’களுக்குத்தானே காலம்!

வி.சண்முகம், திருவாரூர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்களை தனித்தனியாக அழைத்து ‘தேவையற்ற கருத்துகளை பொதுவெளியில் பேசக் கூடாது’ எனக் கண்டித் தாராமே?

அதைவிட, பேசவே கூடாது எனக் கண்டிப்பதுதான் சரியாக இருக்கும். இவர்களெல்லாம் மேடை ஏறும் முன்பே, கர்வம் அவர்கள் தலையில் ஏறிக்கொள்கிறது. எப்போதுமே நிதானம் தவறியவர்கள் போலத்தானே பேசுகிறார்கள்.

@கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்-6.

ஆயிரக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலக் கனவை கேள்விக்குறி ஆக்கியிருக்கும் டி.என்.பி.எஸ்.சி முறைகேடுகள் பற்றியெல்லாம் ரஜினி ‘வாய்ஸ்’ கொடுப்பதில்லையே?

அடுத்த படம் தீபாவளிக்குத்தான்!

ஜெ.ஜானி, போரூர், சென்னை-118.

‘நாட்டின் பொருளாதார நிலை மோசமாக இருப்பதற்கு ப.சிதம்பரம்தான் முழுப்பொறுப்பு’ என்கிறாரே மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்?

ஆறு ஆண்டுகளுக்கு முன்புதான் ப.சிதம்பரம் நிதியமைச்சர் பதவியில் இருந்தார். கடந்த ஆறு ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பது பி.ஜே.பி-தான். ‘காங்கிரஸின் தவறுகளால்தான் ஆட்சிக்கு வந்தோம்’ என்று இவர்களும் சொல்கின்றனர். ஆனால், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகும் அதே ‘தவறு பல்லவி’யையே பாடிக்கொண்டிருக்கின்றனர். ‘தவறு செய்துவிட்டோம்’ என்று மகாராஷ்டிரம், ஹரியானா, சத்தீஸ்கர் மூலமாக ஏற்கெனவே மக்கள் பேச ஆரம்பித்துவிட்டனர் என்பதை மத்திய ஆட்சியாளர்கள் கொஞ்சம்கூட உணர்ந்ததாகத் தெரியவில்லை.

@எல்.ஆர்.சுந்தரராஜன், மடிப்பாக்கம்.

பத்ம விருதுகளுக்கு வழக்கு ஏதும் இருக்கக் கூடாதுதானே. கேள்வி புரிகிறதா?

தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் கேரக்டர் உள்ளிட்ட அனைத்தும், மத்திய புலனாய்வு அமைப்புகள்மூலமாக விசாரித்து உறுதிசெய்யப்படும் என்று மட்டும்தான் போட்டுள்ளனர். வழக்கு இருக்கக் கூடாது என்றெல்லாம் போடவேயில்லை. அது கிடக்கட்டும், உங்கள் கேள்வி சாமி சத்தியமா புரியவேயில்லையே!

@வளன்அரசு.

வேலைவாய்ப்பு, மக்கள் நலம், பொருளாதாரம் என ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கும்போது, குடியுரிமைச் சட்டம், குடிமக்கள் பதிவேடு, குடியுரிமைப் பதிவேடு போன்றவற்றுக்கு மட்டும் பி.ஜே.பி அதீத முக்கியத்துவம் கொடுப்பதற்கு என்ன தேவையிருக்கிறது?

‘கொண்டை‘யை மறைக்க வேண்டியிருக்கிறதே!

மு.மதிவாணன், காஞ்சிபுரம்.

ஷீரடி சாய்பாபாவையும் அரசியல் விட்டுவைக்காது போலிருக்கிறதே?

ஆன்மிக அரசியல்!

கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு-77.

தமிழகத்தில் கழகங்கள் (தி.மு.க -அ.தி.மு.க) இல்லாத ஆட்சி சாத்தியமா?

எல்லாமே சாத்தியம்தான். அதற்காகத்தான் தற்போது ஏகப்பட்ட ‘கலகங்கள்’ பற்ற வைக்கப்படுகின்றன.

ஹாலிஸ், சென்னை-92.

‘அயோத்தி ராமர் கோயிலின் தலைமைப் பூசாரி பதவியில் நியமிப்பதற்காக, பட்டியலினப் பிரிவைச் சேர்ந்த ஒருவருக்குப் பயிற்சி அளிக்கிறார்கள்’ என செய்திகள் வருகின்றனவே?

இது அதிகாரபூர்வ தகவல் அல்ல. ‘பூசாரிகளாக, பட்டியல் இனத்தவரை நியமிக்க வேண்டும்’ என்று விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு விரும்புவதாகவும், அதற்காக சிலருக்கு பயிற்சியளித்துவருவதாகவும் காற்றுவாக்கில் செய்திகள் வருகின்றன... அவ்வளவுதான்!

@வெங்கட்.

‘வங்கிகள், நகைக்கடன் வழங்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி சொல்லிவிட்டால், இந்திய வங்கிகள் அனைத்தும் திவாலாகிவிடும்’ என்கிறான் என் நண்பன். இது உண்மைதானா?

நகைக்கடன் மட்டுமல்ல, அனைத்து வகை கடன்களும் வங்கிகளுக்கு மிகமிக முக்கியம். சொல்லப்போனால், கடன் என்பதுதான் அவற்றின் உயிர்மூச்சே!

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை- 600002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!