@அ.குணசேகரன், புவனகிரி.

ஆசிரியர்களை தேர்தல் பணிகளுக்குப் பயன்படுத்துவது சரியா?

சமீபத்திய உள்ளாட்சித் தேர்தல் பணிகளைப் பார்க்கும்போது, துளிகூட சரியில்லாத செயல் என்றே சொல்லத் தோன்றுகிறது. கல்விக் கூடங்கள்தான் வாக்குச் சாவடிகள் என்பதால், இரண்டு நாள்களுக்கு முன்பிருந்தே கைப்பற்றிக்கொள் கிறார்கள். வாக்கு எண்ணிக்கை என்ற பெயரிலும் ஆக்கிரமிக்கிறார்கள். ஆகக்கூடி, மாணவர்களின் கல்வி தான் பாழடிக்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை நீள நீள, பள்ளிக்கூடங்கள் திறக்கும் தேதியையும் தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கி றார்கள். பாடங்களை முழுமையாக முடிக்காமலேயே குழந்தைளைப் படுத்தியெடுக்கிறார்கள். ‘ஆசிரியர் களையோ, கல்விக்கூடங்களையோ தேர்தல் பணிகளுக்குப் பயன்படுத்தக் கூடாது. ஊராட்சி அலுவலகம், திருமண மண்டபங்கள், சமூகக் கூடங்கள் போன்றவற்றையைத்தான் பயன்படுத்த வேண்டும்’ என்று அனைவருமே ஓங்கி ஒலிக்கவேண்டும்.

@இல.செ.வெங்கடேஸ்வரன், சத்துவாச்சாரி.

‘ஊடக தர்மம்’ என்பது பொதுவானது தானே. ஆனால், குறிப்பிட்ட சில ஊடகங்கள், சிலரை மட்டும் தாக்கு கின்றனவே?

அது, ஊடக அதர்மம்!

@காந்தி, திருச்சி.

நெல்லை கண்ணன் பேசியது எல்லை மீறிய பேச்சா?

அதை எல்லை தாண்டிய பயங்கர வாதம் என்று சொன்னால்கூடத் தவறில்லை. அதேசமயம், ‘கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும்’ என்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சீறல், ‘ராஜீவ் காந்தியைக் கொன்றது நாங்கள்தான்’ என்ற சீமானின் வாக்குமூலம், உயர் நீதிமன்றத்தை நோக்கி ஹெச்.ராஜா வீசிய கேவலமான வார்த்தைகள்... இவையெல்லாமும் எல்லை தாண்டிய பயங்கரவாதங்களே! இவர்கள் மீதும் தமிழக அரசின் நடவடிக்கை உடனுக்குடன் பாய்ந்திருந்தால், ‘எனக்கு வந்தா தக்காளிச் சட்னி... உனக்கு வந்தா ரத்தமா?’ என்ற கேள்வி எழுந்திருக்காது!

ஆர்.ராமசாமி, பொள்ளாச்சி, கோயம்புத்தூர் மாவட்டம்.

இந்தியாவில் வாழ்ந்துகொண்டே ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று முழக்கமிடுபவர்கள்..?

நாடு கடத்தப்பட வேண்டியவர்கள்.

@மு.கல்யாணசுந்தரம், மேட்டுப்பாளையம், கோவை மாவட்டம்.

‘பாரத் மாதா கீ ஜே என்று கூறுபவர்கள் மட்டுமே இந்தியாவில் வாழ முடியும்’ என்று மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் கூறுவது?

ஆடு, மாடு, நாய், பூனை, புலி, சிங்கம், கரடி, எறும்பு, மண்புழு... உள்ளிட்ட ஜீவன்களையெல்லாம் என்ன செய்வதாக உத்தேசமோ!

வி.ஹரிகிருஷ்ணன், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு மாவட்டம்.

சீனாவில் மரபணுமாற்றுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குழந்தைகளை உருவாக்கியிருக் கிறார்களே?

மரபணுமாற்றுத் தொழில் நுட்பத்தின் மூலம் விளைந்த உணவுப் பொருள்களுக்கு உலக அளவில் பெரும் எதிர்ப்பு இருக்கிறது. இத்தகைய உணவுப் பொருள்களை உண்பதால் மனிதர்களுக்கு என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதற் கான ஆய்வுகளும் நடத்தப் படவில்லை. அதற்கான ஆய்வகங்களும் உலக அளவில் முழுமையாக உருவாக்கப் படவில்லை. இந்த நிலையில் மனித னையும் இந்தத் தொழில் நுட்பத்தின்மூலம் உருவாக் குவது ஆபத்தானதே. இந்த முயற்சி, இயற்கைக்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்துக்கு மனிதன் வந்துவிட்டான் என்பதையே பறைசாற்றுகிறது; இது, தன்குலத்துக்கான இறுதி அத்தியாயம் என்பதையும் அவன் அறியாமலிருப்பது பரிதாபமே!

ஜெ.ஜானி, போரூர், சென்னை-116.

சமீபத்திய வெட்கக்கேடு?

துணைமுதல்வர் அஜித்பவார்!

சிவசேனாவுடனான கூட்டணி ஒப்பந்தத்தை மதிக்காமல், முதல் நாள் இரவில் பா.ஜ.க பக்கம் சாய்ந்து அந்தக் கட்சி ஆட்சிக்கு வர உதவினார். கடுமையான ஊழல் புகாரில் சிக்கியவர் எனத் தெரிந்திருந்தும் ‘ஆட்சிவெறி’யோடு துணை முதல்வர் பதவியைக் கொடுத்து அழகுபார்த்தது பா.ஜ.க. பதிலடியாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அடுத்த நாளே பி.ஜே.பி ஆட்சி கவிழ, சிவசேனா ஆட்சியில் அமர, இப்போது இங்கேயும் துணைமுதல்வர். அவருக்கு மட்டுமல்ல, முதலில் அவருக்கு இந்தப் பதவியைக் கொடுத்த பி.ஜே.பி, இப்போது அதே பதவி கிடைக்கக் காரணமான சரத்பவார், பதவியைக் கொடுத்த உத்தவ் தாக்கரே, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் கூட்டணி தோழன் காங்கிரஸ்... யாருக்குமே வெட்கமில்லை!

@லி.சீனிராஜ், தொம்பக்குளம்.

‘குடியுரிமைச் சட்டத்தைப் புரிந்துகொள்ள முடியாத மிகப்பெரிய முட்டாள் ராகுல் காந்தி’ என்று பா.ஜ.க எம்.பி-யான நயாப் சிங் சைனி கூறியிருக்கிறாரே?

புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு அந்தச் சட்டத்தை இயற்றியவர்களை, என்ன சொல்லி அழைப்பதோ!

@ரங்கநாதன் பழனிசாமி.

‘அசைவம் உண்பது பாவம்’ என்றபடி ‘வீகன்’ அமைப்பினர் மாணவர்களிடையே விஷமப் பிரசாரம் செய்கிறார்கள் என்று குற்றம் சுமத்துகிறீர்கள். புலால் மறுப்பை வலியுறுத்தி திருவள்ளுவர் ஓர் அதிகாரமே படைத்திருப்பதும் விஷமப் பிரசாரம்தானோ?

‘விஷமப் பிரசாரம்’ என்று குற்றம்சாட்டும் சமூக ஆர்வலர் களின் குரல் மட்டுமல்ல, ‘அது சரியே’ என்பவர்களின் குரலும் சேர்ந்தேதான் ஜூ.வி-யில் பதிவுசெய்யப் பட்டுள்ளது. திருவள்ளுவராக இருந்தாலும் சரி, திருவாளர் பொதுஜனமாக இருந்தாலும் சரி, அவர்கள் நம்பும் விஷயத்தைச் சொல்லும் சுதந்திரம் உண்டு. ஆனால், ஒருவர் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக் கூடாது என்பதை சம்பந்தப் பட்டவர்தான் தீர்மானிக்க வேண்டும். மற்றவர்கள் தீர்மானிக்க முடியாது, கூடாது. அதிலும் வகுப்பறைகளுக்குள் நுழைந்து குழந்தைகளிடம் போய் குற்ற உணர்ச்சியைத் தூண்டுவதுபோல் பேசுவதெல் லாம் துளிகூட ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றே!

@சரவணக்குமார் சின்னசாமி, தாராபுரம், திருப்பூர் மாவட்டம்.

அனுபவசாலியான அமைச்சர் செங்கோட்டையனின் பள்ளிக்கல்வித் துறையில் ஏன் அடிக்கடி சொதப்பல் அறிவிப்புகளாக வருகின்றன. பள்ளிக்கல்வித் துறை அவருடைய கையில் இல்லையோ?

ஆட்சியே வேறு யாருடைய பையில்தானே இருக்கிறது.

ஆர்.அழகிரிராஜ், மேட்டூர், சேலம் மாவட்டம்.

மகாராஷ்டிர அரசின் வரவு-செலவுகள் பலவற்றையும் தன்னுடைய மனைவி உயரதிகாரி யாகப் பணியாற்றும் தனியார் வங்கி ஒன்றில், பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஃபட்னாவிஸ் வைத்திருந்தாராமே?

அரசாங்க வங்கிகள் திவால் நிலையை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதாகப் பேச்சிருக் கிறது. அதனால், அரசாங்கப் பணத்தை தன்னுடைய சொந்தப் பணம் போல் பார்த்துக்கொள்வதற்காக மனைவி வேலைபார்க்கும் வங்கியிலேயே முதலீடு செய் திருந்திருப்பார். இதையெல் லாமா பெரிதுபடுத்துவது!

டாக்டர் கே.விஸ்வநாதன், கோயம்புத்தூர்-45.

புத்தாண்டில் தமிழக அரசியலில் அல்லது நாட்டு அரசியலில் மாற்றம் ஏதாவது இருக்குமா?

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் ஓகேதானே டாக்டர்

ஆர்.இளங்கோ, கோவில்பட்டி.

இந்து ராஜாக்கள் ஒற்றுமையாக எதிர்த்திருந்தால், முஸ்லிம், கிறிஸ்துவர்களை அப்போதே தடுத்திருக்கலாம்தானே?

சங்கத்தமிழ் மன்னர்கள் ஒற்றுமையாக இருந்திருந்தால் எந்த மதத்தினருமே வராமல்கூட தடுத்திருக்கலாம்! காட்டு மிராண்டிகள் தெளிவோடு இருந்திருந்தால், ‘பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணமுண்டா, இல்லையா’ என்கிற அதிமுக்கியமான ஆராய்ச்சியை மேற்கொண்ட சங்க மன்னர்களைக்கூடத் தடுத்திருக்கலாம்! சூழலுக்கு துளியும் தீங்கு விளைவிக்காத விலங்குகள் ஒற்றுமையாக இருந்திருந்தால், காட்டு மிராண்டிகள் நாட்டு மிராண்டிகளாக மாறியதைத் தடுத்திருக்கலாம்!

மாடசாமி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டம்.

தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு 1,000 ரூபாய்... மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்குத் தேவையா?

பாவம், விட்டுத்தள்ளுங்கள். நம் ஊரில்தான் பங்களாவில் வசிப்பவர்கள்கூட ஏழைகளாக இருக்கிறார்கள். நம் நாட்டில் மட்டும்தான் எம்.எல்.ஏ, எம்.பி வீட்டில் இருப்பவர்கள்கூட காரில் வந்து ரேஷன் அரிசியை வாங்கும் கொடுமையான சூழல் நிலவுகிறது. வருமானவரி கட்டும் அளவுக்குச் சம்பளம் வாங்கும் மத்திய, மாநில, தனியார், அரசு ஊழியர்கள்கூட வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கிறார்கள்!

லட்சுமி காந்தம், வேலூர், நாமக்கல் மாவட்டம்.

சில்லுக்கருப்பட்டி?

செம!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை- 600002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!