Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்

நம் பிரதமருக்கு தூரப்பார்வையோ என்னமோ! டெல்லியில் நடக்கும் விவசாயிகளின் போராட்டங்கள் கண்ணுக்குத் தெரியவில்லை

கழுகார் பதில்கள்

நம் பிரதமருக்கு தூரப்பார்வையோ என்னமோ! டெல்லியில் நடக்கும் விவசாயிகளின் போராட்டங்கள் கண்ணுக்குத் தெரியவில்லை

Published:Updated:
கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்

@வெங்கடேசன், திருப்பத்தூர்.

‘அமெரிக்கக் கலவர வன்முறைச் செய்திகளைக் கண்டு, மன உளைச்சலுக்கு ஆளானதாக’ மோடி ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறாரே..?

கழுகார் பதில்கள்

நம் பிரதமருக்கு தூரப்பார்வையோ என்னமோ! டெல்லியில் நடக்கும் விவசாயிகளின் போராட்டங்கள் கண்ணுக்குத் தெரியவில்லை. அமெரிக்காவில் நடப்பவையெல்லாம் கண்ணுக்குத் தெரிகின்றன!

கழுகார் பதில்கள்

வண்ணை கணேசன், சென்னை-110.

‘தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர்கள் மெகா பட்டியலால் எந்தப் பயனும் இல்லை’ என்று கார்த்தி சிதம்பரம் கருத்து கூறியிருக்கிறாரே..?

“காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியில் கார்த்தி சிதம்பரத்தின் பங்கு என்ன... அவர் எத்தனை முறை சத்தியமூர்த்தி பவனுக்கு வந்திருக்கிறார்?” என்று அவர் கட்சியைச் சேர்ந்தவரே கேட்டிருக்கிறாரே!

கழுகார் பதில்கள்

சௌந்தர்ராஜன், அரியலூர்.

“பூதக்கண்ணாடிவைத்துப் பார்த்தாலும், எங்கள் ஆட்சியில் குறைகளைக் கண்டுபிடிக்க முடியாது” என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே?

ரொம்பச் சின்ன விஷயங்களைப் பார்க்கத்தான் பூதக்கண்ணாடியெல்லாம் வேணும். மலையளவு குறைகளுக்கு எதுக்கு? சும்மா கூகுளைத் தட்டினாலே... மெரினா தடியடி, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, சாத்தான்குளம் சம்பவம், பாரத்நெட் டெண்டர், பொள்ளாச்சி சம்பவம், நிறைவேற்றப்படாத திட்டங்கள், விவசாய நிலங்களை பாதிக்கும் ஹைட்ரோகார்பன் திட்டம், எட்டுவழிச் சாலைக்கு மக்களை நிர்பந்தித்து நிலங்களைக் கையகப்படுத்தியது, கிசான் திட்ட மோசடி... என்று நிற்காமல் கொட்டுமே!

கழுகார் பதில்கள்

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14.

அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்துள்ள தமிழக பா.ஜ.க., அந்தக் கட்சியைக் கட்டுப்படுத்தும் வகையில் செயல்படுவது ஏற்புடையதா?

குதிரை, தான் வண்டி ஓட்டுவதாக நினைத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும். ஆனால், ஓனர் கையில்தான் லகான் இருக்கும். எல்லாம் அப்படித்தான் பாஸ்!

@எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.

“பொங்கல் பரிசுப் பணம், டாஸ்மாக் மூலம் அரசுக்கே வந்துவிடும்...” என்ற திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு?

மிகவும் கண்டிக்கத்தக்க பேச்சு இது. மக்களை எவ்வளவு கேவலமாக எண்ணியிருந்தால், இப்படி ஒரு பதில் வரும்... இதை உளறலாக எடுத்துக்கொள்ள முடியாது. வாய் தவறி அவர்களின் திட்டத்தை வெளிப்படுத்திவிட்டார் போல இருக்கிறது!

@ராமராஜ் குணசேகரன், கீழ்க்கட்டளை.

‘தமிழகத் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதிக்கக் கூடாது’ என்று மத்திய அரசின் அறிவுறுத்தல் வந்ததைக் கவனித்தீர்களா?

அது வந்த கொஞ்ச நேரத்திலேயே ‘இதுக்கு முன்னாடி இங்க வந்தவன்லாம் உயிர் பயத்துல ஓடிப் போயிருக்கலாம். ஆனா என் கதையே வேற... முடிஞ்சா தொடச் சொல்லுடா பார்ப்போம்’ என்ற வசனத்துடன் ‘மாஸ்டர்’ படத்தின் புரொமோ ஒன்று வந்ததை நீங்கள் கவனித்தீர்களா?

@ந.அய்யப்பசாமி, தேவாரம், தேனி மாவட்டம்.

இரண்டாண்டுகள் கழித்து, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கியக் குற்றவாளியான அ.தி.மு.க நிர்வாகியை சி.பி.ஐ கைதுசெய்திருக்கிறதே... இவ்வளவு நாள்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்?

குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டார்கள் என்று நிம்மதி அடைவதா... இல்லை, இவ்வளவு காலம் கடந்து தேர்தல் நேரத்தில் சீட் பேரத்துக்காகவும், கட்சிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்காகவும் இதைச் செய்கிறார்களே என்று வருத்தப்படுவதா... எது எப்படியோ, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைத்தால் சரி!

@செ.அ.ஷாதலி, கோனுழாம்பள்ளம்.

அரசியலில் பெரும்பதவியில் இருப்பவர்கள்கூட, பொது இடங்களில் கண்ணியக் குறைவான வார்த்தைகளை உபயோகிக்கின்றனரே..?

உங்கள் ஆதங்கம் புரிகிறது... கண்ணியக் குறைவான வார்த்தைகளை உபயோகிப்பவர்களை மக்கள் புறக்கணிக்க ஆரம்பித்துவிட்டால், இந்தப் பிரச்னைக்கு ஒரு முடிவு வந்துவிடும்!

சி.கார்த்திகேயன், சாத்தூர்.

முப்பத்தி எட்டு தொகுதிகளுக்கு பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் வெளியே கசிந்திருக்கிறதே?

கசிந்ததோ, கசியவிடப்பட்டதோ... முப்பத்தெட்டெல்லாம் கொஞ்சம் ஓவர் பாஸ்!

யூசுப் ஜாஃபர், தூத்துக்குடி.

ஓட்டுக்குப் பணம் கொடுப்பது சமீப ஆண்டுகளில் ஆரம்பித்ததுதானே?

கழுகார் பதில்கள்

இந்த ஜோக், 1926-ல் ஆனந்த விகடனில் வெளிவந்தது.

ஓட்டுக்குக் காசு கொடுக்கும் அவலம் நூற்றாண்டு காணப்போகிறது!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism