ராஜ கண்ணப்பன், செம்மஞ்சேரி.

ஒரு சிறு தவறுக்காக என்னை வேறு துறைக்கு மாற்றிவிட்டார்கள். இது எனக்கு நல்லதா, கெட்டதா?

அமெரிக்காவில் செய்தி வாசிப்பாளராக இருந்த ஒருவர், தவறுதலாக ஒரு வார்த்தையை உச்சரித்துவிட்டார். லைவில் இப்படி நடக்கும்போது மன்னிப்புக் கேட்டுவிட்டு, சரியான வார்த்தையை உச்சரிக்க வேண்டும் என்பது அப்போதைய விதி. ஆனால், இவர் அடக்க முடியாமல் சிரித்துவிட்டார். அவருக்கு தண்டனை தரும்விதமாக டி.வி நிர்வாகிகள், அப்போது நடந்துகொண்டிருந்த டாக் ஷோவில் உதவியாளராக அவரைப் பணிமாற்றம் செய்தார்கள். பிற்பாடு அந்த நிகழ்ச்சியே அவர் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அவர்தான் ஓப்ரா வின்ஃப்ரே. 1986-ல் ஆரம்பித்து 25 வருடங்களுக்கு மேலாக, தனது டாக் ஷோவால் தொலைக்காட்சி ரசிகர்களைக் கட்டிப்போட்டவர்.

மாற்றங்கள் பல சமயம் ஏற்றங்களையும் தரும்!

@டி.ஜெய்சிங் கோயம்புத்தூர்.

‘தி.மு.க தலைவர் ஸ்டாலினைத் தேர்தலில் எதிர்த்துப் போட்டியிடத் தயார்’ என்கிறாரே நடிகை குஷ்பு?

இதுவரைக்கும் இருந்த கட்சிகள் எதிலும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத குஷ்பு, ஒரே தேர்தலில் ஸ்டார் வேட்பாளராக மாற ஆசைப்படுகிறார்போல!

ஜெயச்சந்திரன், தருமபுரி.

“மாலை நேரத்தில் அந்தப் பெண் வெளியே தனியாகச் சென்றிருக்கக் கூடாது. எனவேதான் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது” என்று உத்தரப் பிரதேசத்தில், பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் சந்திரமுகி தேவி கூறியிருக்கிறாரே?

பாரதியின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், ரௌத்ரம்தான் வருகிறது. கோயில் ஒன்றில் பூசாரி உட்பட மூன்று பேர் ஐம்பது வயதுப் பெண்மணியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றிருக்கிறார்கள். கோயிலில் நடந்ததால், பெண்கள் கோயிலுக்குச் செல்ல வேண்டாம் என்று கூறுவாரா சந்திரமுகி தேவி? மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக இருப்பவர் பொறுப்புணர்ந்து பேச வேண்டும். இவர் போன்றவர்களை இந்தப் பதவியில் நியமிப்பவர்களும் மிகுந்த பொறுப்போடு இருக்க வேண்டும்!

கே.பிரசன்னா, பாபநாசம்.

‘மக்களுக்குப் பணிசெய்யும் பொறுப்பாளராகத்தான் என்னைக் கருதுகிறேன்’ என்கிறாரே எடப்பாடி பழனிசாமி?

பரவாயில்லையே... தேர்தல் நெருங்கும் நேரத்தில், பல விஷயங்கள் அவருக்கு நினைவுக்கு வருகின்றனவே!

த.சிவாஜி மூக்கையா, தர்காஸ்.

எடப்பாடியாரும் ஸ்டாலினும் மாறி மாறி ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார்களே?

மாறி மாறிப் பேசிக்கொள்ளும் அளவுக்கு இவ்வளவு ஊழல்கள் நடந்திருக்கின்றனவா என்று நீங்கள் ஆச்சர்யப்படுவது தெரிகிறது சிவாஜி!

@சீ.பாஸ்கர், நந்திவரம்-கூடுவாஞ்சேரி.

வருகிற சட்டமன்றத் தேர்தலில், ஒருவேளை ரஜினி வாய்ஸ் கொடுத்தால், அது எடுபடுமா?

‘வர மாட்டேன் ஆளை விடுங்கள்’ என்று சொல்லிவிட்டார். அதன் பிறகும் ‘வாங்க தலைவா’ என்று கூடிய கூட்டத்திடம் ‘என்னை வேதனைக்கு உள்ளாக்காதீர்கள்” என்று கடும் வேதனையுடன் கூறியவர், இதற்கு மேலும் வாய்ஸ் கொடுத்தால், அது நிர்பந்தத்தின் பேரில்தான் என்று மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.

வண்ணை கணேசன், சென்னை-110.

ஸ்டாலின் முதல்வரானால் யார் துணை முதல்வர்?

துணை முதல்வர் பதவி இருக்கிறதோ இல்லையோ... கட்சிக்கே நிழல் தலைமையாக கிச்சன் கேபினெட் செயல்படுவதைப் பற்றிய தொண்டர்களின் புலம்பலில் இதற்கான பாதி பதில் இருக்கிறது.

சம்பத், திருச்சி.

கிட்டத்தட்ட 45 நாள்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் டெல்லியில் நடக்கும் நிலையில், இதுவரை ஒரு சிறு வன்முறைகூட நிகழாதது பாராட்டத்தக்கது தானே?

மஞ்சள் சட்டை போட்டுக்கொண்டு, வேனில் ஏறி, துப்பாக்கியால் சுட்டால் மட்டும்தான் வன்முறையா? இந்த இதழ் அச்சுக்குப் போகும்வரை, போராட்டக் களத்தில் இருந்த 70 விவசாயிகள் இறந்திருக் கிறார்கள். விவசாயிகள் வன்முறை செய்யவில்லையே ஒழிய, இந்த மரணங்களைக் கண்டுகொள்ளாதது சாமானிய விவசாயிகள்மீது அரசாங்கம் நடத்தும் வன்முறை அல்லாமல் வேறு என்ன?

சம்பத்குமாரி, பொன்மலை.

ஸ்டாலினைப் பதவி வெறியர் என்று அழகிரி கூறியிருக்கிறாரே?

தம்பியைப் பற்றி அண்ணனுக்குத் தெரியாதா என்ன... அது சரி... அண்ணனுக்குப் பதவி வெறி இல்லாததால்தான் தேர்தலுக்குத் தேர்தல் அலப்பறையைக் கூட்டுகிறார்போல!

எம்.மிக்கேல் ராஜ், சாத்தூர், விருதுநகர்.

பி.ஜே.பி-க்கு எதிராக அமைச்சர்களைப் பேசவிட்டு, அப்பாவிபோல அமர்ந்திருக்கிறாரே எடப்பாடி?

‘குரங்கு, குட்டியை விட்டுத்தான் ஆழம் பார்க்கும்’ என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது மிக்கேல்!

கணேசன், பொன்னியம்மன்மேடு.

‘அ.தி.மு.க கூட்டணியில் த.மா.கா பலத்துக்கேற்ப தொகுதிகளைப் பெறுவோம்’ என்று வாசன் கூறியுள்ளாரே?

அந்த அசுர பலத்தை ஆராய்வதற்குத்தான் ஏழு நபர் கொண்ட கமிட்டி அமைத்திருக்கிறாராம் எடப்பாடி!

குணசேகரன், தஞ்சாவூர்.

பொங்கல் பரிசாக 2,500 ரூபாயை, ‘நாங்கள் சொல்லித்தான் கொடுத்தார்கள்’ என்று தி.மு.க-வும், ‘நாங்களாகத்தான் கொடுத்தோம்’ என்று அ.தி.மு.க-வினரும் மாறி மாறிச் சொல்லிக்கொண்டிருக்கிறார்களே?

`இது எங்கள் பணம்’ என்று மக்கள் சொல்வது காதில் விழவில்லையா! இதைத்தான் ‘உழக்கரிசி அன்னதானம், விடிய விடிய மேளதாளம்’ என்று ஊர்ப்பக்கம் சொல்வார்கள்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com

என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!