ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்.

சுங்கச்சாவடி, வாக்குச்சாவடி... என்ன வித்தியாசம்?

சுங்கச்சாவடியைக் கடக்கும்போது நம்மை மறித்து, காசு கேட்கிறார்கள். வாக்குச்சாவடிக்குப் போகும்போது நம்மை மறித்து, காசு கொடுக்கிறார்கள்!

@பெ.பச்சையப்பன், கம்பம்.

தற்போதைய சூழ்நிலையில் நிம்மதியாக இருப்பவர்கள் யார்?

சினிமாவில் மட்டும் ரஜினியைக் கொண்டாடும் அவருடைய ரசிகர்கள்.

எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.

“தமிழகத்தில் ஊழல் ஒழியும் வரை அரசியலில் இருப்பேன்” என்கிறாரே கமல்ஹாசன்..?

மிக நீண்டகாலம் அரசியலில் இருப்பேன் என்பதைச் சூசகமாகச் சொல்கிறார்போல.

சு.செல்வராஜ், திட்டக்குடி.

தமிழருவி மணியன் அரசியலில் ஈடுபட்டு இதுவரை என்ன செய்தார்?

இதே கேள்வி அவருக்கும் எழுந்ததாலோ என்னமோ... “போகிறேன் வர மாட்டேன்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

@அனன்யா, பொள்ளாச்சி.

“பொய் பேசுவதற்காக ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டமே தரலாம்” என்கிறாரே எடப்பாடியார்?

‘ஊசியைப் பார்த்து சல்லடை சொன்னதாம்... உன் முதுகில் ஒரு ஓட்டை இருக்கு’ என்று. இந்தப் பழமொழிதான் இருவரைப் பற்றியுமான மக்களின் மைண்ட் வாய்ஸாக இருக்கிறது!

@ந.சண்முகம், திருவண்ணாமலை.

``கோட்டையைப் பிடிப்போம்’’ என்கிறாரே குஷ்பு...?

‘அண்ணாத்த’ படத்துல வர்ற காட்சியா இருக்கும். பாவம்... ஷூட்டிங்கை வேற நிறுத்திட்டாங்க!

@சீனிவாசன், கண்டனூர்.

“ரஜினியுடன் கூட்டணி என்பது ஓ.பி.எஸ்ஸின் தனிப்பட்ட கருத்து, கட்சியின் கருத்து அல்ல” என்று சொன்ன அமைச்சர் ஜெயக்குமாரே, இன்று அ.தி.மு.க-வை ரஜினி ஆதரிப்பார் என்கிறாரே..?

திடீரென்று கதாபாத்திரங்கள் மாறும்போது திரைக்கதை, வசனத்தையெல்லாம் மாற்றித்தானே ஆக வேண்டும்!

@இல.கண்ணன், நங்கவள்ளி.

`எனக்கும் ஆன்மிகத்துக்கும் விரோதம் கிடையாது’ என்று கமல்ஹாசன் கூறுவது ஓட்டுக்காகவா கழுகாரே?

ஓட்டுக்காக இல்லைனு சொல்லலை. இல்லாம இருந்தா நல்லாயிருக்கும்னுதான் சொல்றோம்.

சிவகுருநாதன், மயிலை.

ரஜினி அரசியலுக்கு வராததை, அவரின் குருவான கே.பாலசந்தர் இருந்து கேட்டிருந்தால் என்ன நினைத்திருப்பார்?

``யானை காட்டில், பூனை வீட்டில், திமிங்கிலம் கடலில்... என்று அவையவை அவையவற்றுக்கு உரிய இடத்தில் இருப்பதுதானே அழகு!’’

‘ரஜினி அரசியலுக்கு வருவாரா?’ என்ற கேள்விக்கு, ‘விகடன் மேடை’யில் கே.பாலசந்தர் சொன்ன பதில் இது! இதைப் படித்தாலே, அவர் இருந்திருந்தால் என்ன நினைத்திருப்பார் என்பது புரியும்!

@மு.மதிவாணன், அச்சல்வாடி போஸ்ட், அரூர்.

“இயேசுநாதரைச் சுட்ட கோட்சே” என்று பேசியிருக்கிறாரே அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்..?

`காந்தியைச் சுட்டது கோட்சே’ என்ற சரியான வரலாற்றுச் செய்தியை, திண்டுக்கல் சீனிவாசன் சொன்னால்தான் ஆச்சர்யப்பட வேண்டும். என்ன செய்வது... நமக்கு வாய்த்த அமைச்சர்கள் அப்படி!

ந.அய்யப்பசாமி, தேவாரம், தேனி மாவட்டம்.

சன் சேனல்களில், தமிழக அரசின் சாதனை விளம்பரம் வருகிறதே... இதன் மர்மம் என்ன, புரியவில்லையே கழுகாரே..?

வியாபாரத்தில் ஏது கட்சி பேதம்... பணம் என்று வந்த பிறகு மாமன் என்ன, மச்சான் என்ன?

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

அரிசி அட்டைதாரர்களுக்குப் பரிசாக 2,500 ருபாய் தருவது பொங்கலுக்கு மட்டும்தானா?

இல்லை... ஆளுங்கட்சியினர் ஐந்தாண்டுக் காலம் செய்த குளறுபடிகளுக்கும் தவறுகளுக்கும், தேர்தல் நேரத்தில் மக்கள் பொங்காமல் இருக்கவும்தான்!

@ஜீவன் சுந்தர், நாகப்பட்டினம்.

ரஜினியின் அறிவிப்பால் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழருவி மணியனா, அர்ஜுனமூர்த்தியா?

அர்ஜுனமூர்த்தி இந்த அசைன்மென்ட்டுக்காக டெபுடேஷனில் வந்தவர்தான். அடுத்த நாளே பிரஸ் மீட் வைத்து, ஏற்கெனவே இருந்த கட்சிக்கு சிக்னல் கொடுத்துவிட்டார். தமிழருவி மணியனுக்கும் அரசியலைவிட்டுப்போவது புதிதல்ல. ஏற்கெனவே 2016-ல் இதேபோல கடிதம் எழுதிவிட்டு விலகிப்போனவர்தான். இருவருக்குமே பாதிப்பெல்லாம் கிடையாது. சொந்தக் காசில் போஸ்டரெல்லாம் அடித்து, பூத் கமிட்டி வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்த அப்பாவி ரசிகர்களுக்குத்தான் பாதிப்பு அதிகம்!

ராஜ், விருதுநகர்.

மோடி முக்கியமாகக் குறிவைப்பது மேற்கு வங்கத்தையா, கேரளாவையா, தமிழ்நாட்டையா?

இருக்கும் இடத்தில் சாயம் வெளுக்க வெளுக்க, புதிய இடங்களைக் குறிவைப்பார்கள். அதிலும் நீங்கள் சொன்ன வரிசையில்தான் குறிவைப்பார் என்று தோன்றுகிறது!

குண சுந்தர்ராஜன், தூத்துக்குடி.

“முதலமைச்சர் வேட்பாளரை ராமதாஸ் அறிவிப்பார்” என்று சொல்கிறாரே ஜி.கே.மணி?

வருஷம் முடியப்போகுது, நானும் ஒரு காமெடி சொல்றேன்னு சொல்லியிருக்காரு!