Published:Updated:

கழுகார் பதில்கள்

எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி

சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டியதை விளையாட்டாகவும், விளையாட்டாகக் கடந்து போக வேண்டியதை சீரியஸாக எடுத்துக்கொள்வதும்தானே நம் வாடிக்கை

கழுகார் பதில்கள்

சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டியதை விளையாட்டாகவும், விளையாட்டாகக் கடந்து போக வேண்டியதை சீரியஸாக எடுத்துக்கொள்வதும்தானே நம் வாடிக்கை

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி

சுகன்யா, சென்னை-110.

அரசியலில் ‘நகைச்சுவை விஞ்ஞானிகள்’ உருவாகிறார்களா அல்லது உருவாக்கப்படுகிறார்களா?

தானா உருவாகறதே தாங்க முடியலை... இதுல நீங்க வேற உருவாக்கச் சொல்றீங்க!

மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

எதை சீரியஸாக எடுத்துக்கொள்ளக் கூடாது... தேர்தல் வாக்குறுதிகளையா, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல்வாதிகள் கட்சி மாறுவதையா?

தேர்தல் வாக்குறுதி சீரியஸா எடுத்துக்க வேண்டிய விஷயம்தானே மாடக்கண்ணு... சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டியதை விளையாட்டாகவும், விளையாட்டாகக் கடந்து போக வேண்டியதை சீரியஸாக எடுத்துக்கொள்வதும்தானே நம் வாடிக்கை!

இல.கண்ணன், நங்கவள்ளி.

கடந்த தீபாவளிப் பண்டிகையின் போது, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு 1.5 டன் ஆவின் இனிப்புகள் இலவசமாகக் கொடுக்கப்பட்டதாக அமைச்சர் ஆவடி நாசர் குற்றம்சாட்டியிருக்கிறாரே?

டன் கணக்குல ‘ஸ்வீட் பாக்ஸ்’ போயிருக்குனு சொல்றாருபோல!

நாகராஜன், திருப்பத்தூர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து பிரதமர் மோடி மௌனம் சாதிப்பது ஏன்?

பொறுங்க பொறுங்க... வர்ற ஞாயிற்றுக்கிழமை ஒரு நல்ல திருக்குறளோட ‘மனக்குரல்’ நிகழ்ச்சிக்கு வருவார் நம்ம பிரதமர்!

துரைராஜன் உமாஷங்கர், கோலாலம்பூர், மலேசியா.

என்.ஆர்.காங் - பா.ஜ: தொடரும் மோதல்... நடக்குமா சட்டசபை?

உத்தரகாண்ட்டில் பார்த்தீங்கள்ல... நான்கு மாசத்துல மூன்று முதல்வர்களை மாத்தியேகூட சட்டசபை நடத்தறாங்கன்னா இங்க நடத்த மாட்டாங்களா என்ன?!

கழுகார் பதில்கள்

பெ.பச்சையப்பன், கம்பம்.

“அ.தி.மு.க நெருப்பில் பூத்த மலர்!” என்கிறாரே எடப்பாடி?

அட... நல்ல சினிமா டைட்டிலா சொல்லியிருக்காரே!

பாண்டியராஜன், மேல்மருவத்தூர்.

நீதிமன்றங்களில் சில வழக்குகள் தாமதமாகவே விசாரிக்கப்படுகின்றனவே?

`தனது ஒரு கண் பிடுங்கப்பட்ட நிலையில், ஒருவன் ரத்தம் வடிய வந்து நீதி கேட்டாலும், அவனது எதிரி வரும்வரையில் அவனுக்கு நீதி வழங்கக் கூடாது. ஏனெனில், அவனது எதிரி ஒருவேளை இரண்டு கண்களும் பிடுங்கப்பட்ட நிலையில் வரக்கூடும்’ என்பது கலீஃபா

உமர் (ரலி)-யின் வசனம். இரண்டு தரப்பையும் தீர விசாரிக்க வேண்டும் என்ற நோக்கில்தான், பெரும்பாலும் அந்த தாமதம் ஆகிறதோ என்னமோ!

கழுகார் பதில்கள்

நாகமாணிக்கம், பல்லடம்.

பேச்சா, மௌனமா... எது பிரதானம்?

`நுண்ணுயிரியலின் தந்தை’ லூயி பாஸ்டர் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இன்று நம்மைக் காப்பாற்றிக்கொண்டிருக்கும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட காரணகர்த்தா இவர்தான். இவரது வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுத்தபோது, பால் முனி என்கிற நடிகர் அதில் நடித்திருந்தார். படத்தில், லூயி பாஸ்டர் நோபல் பரிசு பெறும் காட்சியில், நன்றி தெரிவிப்பதுபோல இவர் பேச வேண்டும். ஒரு பக்கத்துக்கு இருந்த அந்த வசனத்தைப் பார்த்துவிட்டு பால் முனி, “நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று சொல்லி நடிக்க ஆரம்பித்தார். டேக் ஆரம்பித்ததும் நன்றி சொல்ல வந்து, உதடுகள் துடிக்க எதுவுமே பேசாமல் கண்களில் நீர் வழிய அவர் நிற்க, வசனமே இல்லாத அந்தக் காட்சி படமாக்கப்பட்டது. பின் ரசிகர்களால் அந்தக் காட்சி பெரிதும் கொண்டாடப்பட்டது. பால் முனிக்கு ஆஸ்கர் அவார்டையும் பெற்றுத் தந்தது. பல சமயங்களில் பேச்சைவிட மௌனம் சக்தி வாய்ந்தது!

கழுகார் பதில்கள்

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

`அரசியல் எனக்கு ரொம்ப முக்கியம்... ஆனால் அரசியலுக்கு வர மாட்டேன்’ என்று கூறும் நடிகர் யாராவது உண்டா?

நிறைய பேர் உண்டே... “வாக்களிக்கும் என் உரிமைக்காக, நான் தினமும் அரசியலை கவனிப்பேன். அப்டேட்டாக இருப்பேன். ஆனால் அரசியலுக்கு வர மாட்டேன்” என்று நடிகர் நாசர் சமீபத்தில்கூட ஒரு பேட்டியில் கூறியிருந்தாரே!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism