@ரூபன்.

கழுகாருக்கு எந்த உணவு பிடிக்கும்?

கழுகார், ஆயிரத்தில் ஒருவனல்ல... உங்களில் ஒருவன்.

@நிவேதிதா, கோயம்புத்தூர்.

வெளிமாநிலத் தொழிலாளர்கள் இல்லாமல் நாம் எப்படித் தொழில் செய்வது?

இதுநாள்வரை இங்கே பணியாற்றிவந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சில லட்சம் பேர்தான். அவர்களைவிடப் பல மடங்கு கூடுதல் எண்ணிக்கையிலான உள்ளூர்த் தொழிலாளர்கள்தான் காலங்காலமாகத் தமிழகத்தைத் தாங்கிப்பிடிக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். உதாரணமாக, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, சேலம் என எல்லாத் திசைகளிலிருந்தும் புறப்பட்டு திருப்பூரில் குடியேறி, பனியன் தொழிலை உலக உச்சத்துக்குக் கொண்டு சென்றவர்கள், தமிழகச் சொந்தங்களே!

@அ.சுகுமார், காட்பாடி, வேலூர்.

ஊர்ப் பெயர்களின் ஆங்கில உச்சரிப்புத் தொடர்பான அரசாணை திரும்பப் பெறப்பட்டுவிட்டதே?

‘மங்குணி’ அமைச்சர்கள் என்பதை மணிக்கொரு முறை காட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

@சாந்தி மணாளன், கருவூர்.

‘சென்னை மீளும்... வாழும்’ என்கிறாரே நடிகர் விவேக்?

அதிலென்ன சந்தேகம். ஆனால், சென்னையின் பெயரைத்தான் அழிக்கப் பார்க்கிறார்கள். கொரோனா பரவலைத் தடுக்கத் துப்பில்லாமல் தப்லீக் மாநாடு, கோயம்பேடு என்று மக்களின் கவனத்தை திசை திருப்பித் தப்பித்தவர்கள், தற்போது சென்னையை நோக்கி திசை திரும்புகின்றனர். இவர்களின் சொற்படி கோயம்பேட்டை மூடிய பிறகு கொரோனா ஒழிந்திருக்க வேண்டுமே... அதுமட்டுமல்லாமல், வெளியூர் களிலெல்லாம் கொரோனா இல்லாதது போலவும், இங்கிருந்து போகிறவர்கள்தான் பரப்புவதுபோலவும் பிரசாரம் நடக்கிறது. மார்ச் 23-ம் தேதியிலிருந்தே தமிழகம் முழுக்க மக்கள் இடம்பெயர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். போதாக்குறைக்கு டாஸ்மாக் கடைகளை வேறு வம்படியாகத் திறந்துவிட்டார்கள். எல்லாமும் சேர்ந்து பிரச்னையைத் தீவிரமாக்கும் போது பழையபடி தப்பிப்பதற்காகச் சென்னையின் மீது பழிபோடுகிறார்கள். கடைசியில், ‘கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று கையையும் விரிக்கிறார்கள்.

முதலில் இவர்களிடமிருந்து இந்த நாட்டை நாம் காப்பற்ற வேண்டும்!

@எல்.ஆர்.சுந்தரராஜன், மடிப்பாக்கம்.

‘லாக்டௌன்’ சமயத்தில் உங்களுக்கு எப்படி நேரம் நகர்கிறது?

அதைத்தான் கண்டுபிடிக்கவே முடியவில்லை. கண்மூடி, கண்திறப்பதற்குள் ‘மாலை 7 மணி’ என்று கடிகார முள் குத்துகிறது!

@ராம்குமார்

பாசனத்துக்காக கல்லணையைத் திறந்தபோது அமைச்சர் உட்பட தமிழக, புதுச்சேரி மக்கள் பிரதிநிதிகள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் பட்டனை ஒருசேர அழுத்தி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தது..?

உயிரைவிடவும் ‘வரலாறு’ முக்கியம் ராம்குமாரே!

@செய்யது முகம்மது, மேலப்பாளையம், திருநெல்வேலி-5.

இந்தியா-சீனா எல்லையில் பதற்றம்... பா.ஜ.க அரசின் வெளிநாட்டுக் கொள்கையில் ஏற்பட்ட தோல்வியா?

சீன அரசின் ‘நட்புத் தந்திரங்களு’க்குக் கிடைத்த வெற்றி!

@`சோழா’ புகழேந்தி, கரியமாணிக்கம்.

கொரோனா விவகாரத்தில் உலக நாடுகளின் வெறுப்புக்கு ஆளாகியுள்ள நிலையிலும் எந்த தைரியத்தில் இந்தியாவைச் சீண்டிப் பார்க்கிறது சீனா?

‘கொரோனாவின் இரண்டாவது அலை’ வேறு அங்கே பரவ ஆரம்பித்துவிட்டது என்கிறார்கள். இப்படி இன்னும் ஏகப்பட்ட ‘ஸ்டாக்’ வைத்திருக்கும் தைரியமாகக்கூட இருக்கலாம்.

@‘திருப்பூர்’ அர்ஜுனன்.ஜி, அவினாசி.

மாமல்லபுரம் நட்பு அத்தனையும் நடிப்பா கழுகார்?

‘ஜின்பிங்... அத்தனையும் நடிப்பா ஜின்பிங்!’

@ஆர்.அஜிதா, கம்பம், தேனி மாவட்டம்.

“மு.க.ஸ்டாலின், ‘ஒன்றிணைவோம் வா...’ என்று சொல்லிச் சொல்லி மக்களிடம் கொரோனாவைப் பரப்பி, அவர்களின் நிம்மதியைக் கெடுத்துவிட்டார்’’ என்று சொல்லி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கிண்டலடிக்கிறாரே..?

அப்படியென்றால்... அமைச்சர், அரசுச் செயலாளர், எஸ்.பி, டி.ஆர்.ஓ, தாசில்தார் எனப் பலருக்கும் பரப்பியது யார்? சொல்லப்போனால், ராஜேந்திர பாலாஜியின் உதவியாளர்கூட தற்போது ‘கொரோனா பாசிட்டிவ்’ என மருத்துவமனையில் இருக்கிறார். ஒருவேளை, இவர்களெல்லாம் ஸ்டாலினுடன் ரகசியமாக ஒன்றிணைந்திருப்பார்களோ!

@காந்தி, திருச்சி.

உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில், கௌசல்யாவின் தந்தை விடுதலை ஆகிவிட்டாரே..?

நேரடி சாட்சிகள் அல்லது சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில்தான் தீர்ப்புகள் அமையும். சந்தர்ப்பவாத சாட்சிகள் இருந்தால் என்ன செய்யமுடியும். ஊரே பார்க்கப் பட்டப்பகலில்... நட்டநடு ரோட்டில் ஆணவத்தோடு நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல் மற்றும் கொலை இது. அந்தக் கொலைக் காட்சிகளை உலகமே காணொளியாக வேறு பார்த்து பகீரிட்டது, அத்தகைய வழக்கில் இப்படித்தான் தீர்ப்பு வரும் என்றால், மக்களின் நம்பிக்கை மேலும் மேலும் குறையவே செய்யும். போதுமான சாட்சிகளை உரியவகையில் தயார் படுத்தி, உரிய தீர்ப்பைப் பெற்றுத் தராத தமிழகக் காவல்துறையின் தொப்பியில் மேலும் ஒரு கரும்புள்ளி!

சாதி வெறியோடு இந்தத் தீர்ப்புக்கு பின்னூட்டம் போட்டு ஒரு கூட்டம் கொண்டாடிக் கொண்டிருப்பது கொடுமையோ கொடுமை.

@பி.மணி, குப்பம், ஆந்திரா மாநிலம்.

ஆதார் கார்டுபோல, கொரோனா இருக்கிறதா... இல்லையா என்று பரிசோதனை செய்து, ‘கொரோனா கார்டு’ வாங்கி வைத்திருந்தால்தான் அனைத்து அரசுச் சேவைகளும் கிடைக்கும் என்று அறிவிக்கலாம்தானே?

ஏன் மணி... ஏன்? எல்லாம் நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு!

@சரோஜா பாலசுப்ரமணியன், கே.ஜி.எஃப், கர்நாடக மாநிலம்.

சீன-இந்திய எல்லைகளை இந்த டிஜிட்டல் காலத்தில் இதுதான் என்று வரையறுக்க முடியாதா?

‘இதுதான்’ என்று இருவரும் ஒப்புக்கொண்டால், அது எந்தக் காலமாக இருந்தாலும் நொடிகளில் தீர்த்துவிட முடியும். ஒரு தோட்டத்துக்கும் பக்கத்துத் தோட்டத்துக்கும் இடையேயான வேலித் தகராறையே அத்தனை சுலபமாகத் தீர்க்க முடிவதில்லையே... ஓர் அங்குல நிலத்துக்காக அண்ணன்-தம்பிக் குடும்பங்கள் பரம்பரைகள் கடந்தும் பேசாமல் இருப்பதை அக்கம்பக்கம் பார்க்கவும் கேட்கவும் செய்கிறோமே!

@அ.யாழினி பர்வதம், சென்னை-78.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் திடீர் விடுப்பில் சென்றதில் மர்மம் இருப்பதாகக் கனிமொழி எம்.பி கூறுகிறாரே?

மர்மம், அதில் மட்டும்தானா!

@மு.மதிவாணன், அரூர்.

`கொரோனா பரிசோதனைக்கு நாடு முழுவதும் ஒரே கட்டணம் வசூலிக்க வேண்டும்’ என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே?

எதற்காக நாம் இந்த அரசுகளைத் தேர்ந்தெடுத்தோம் என்பதற்கு அர்த்தமே இல்லை என்பதைத்தான் நீதிமன்றத்தின் இதுபோன்ற உத்தரவுகள் காட்டுகின்றன. மக்களுக்குத் தேவையானவற்றைத் தேடித் தெரிந்து செய்து கொடுக்க வேண்டியது இவற்றின் கடமை. ஆனால், ஒவ்வொரு தடவையும் நாம் இப்படி நீதிமன்றங்களுக்கு ஓட வேண்டியிருப்பது கொடுமை. இந்தப் பரிசோதனையை அனைவருக்கும் கட்டணமில்லாமல் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை.

@ப.தயாநிதி ஆதம்பாக்கம், சென்னை-88.

முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது அனைத்துக்கட்சிக் கூட்டங்களைக் கூட்டியிருந்தால், அடிக்கடி பல்டி அடிக்க வேண்டிய அவசியம் இருக்காதுதானே எடப்பாடிக்கு?

உயிர்போகும் விஷயத்திலேயே யாருடைய பேச்சையும் கேட்கவில்லையே... ‘அவர்களெல்லாம் என்ன டாக்டர்களா?’ என்று மட்டும்தானே கேட்டார்.

@பொன்விழி, அன்னூர்.

நாஸ்ட்ரடாமஸ் சொன்னதுபோல் உலகம் அழிந்துவிடுமா?

அதெல்லாம் உண்மையாக இருந்தால், ஏற்கெனவே 200, 300 தடவைக்கும் மேல் இந்த உலகம் அழிந்திருக்க வேண்டும்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,

757, அண்ணா சாலை,

சென்னை - 600 002 kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!