Published:Updated:

கழுகார் பதில்கள்

மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

எந்தக் கட்சியும் கண்டுகொள்ளாத ஊர் சார்ந்த பிரச்னை களுக்காக முன்பு சுயேச்சை வேட்பாளர்கள் களமிறங்குவார்கள்.

கழுகார் பதில்கள்

எந்தக் கட்சியும் கண்டுகொள்ளாத ஊர் சார்ந்த பிரச்னை களுக்காக முன்பு சுயேச்சை வேட்பாளர்கள் களமிறங்குவார்கள்.

Published:Updated:
மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

குணசீலன், மேல்மருவத்தூர்.

சமீபத்தில் கழுகாரை யோசிக்கவைத்த செய்தி?

விழுப்புரம் வந்த அமித் ஷாவுக்கு, வானதி சீனிவாசன் இரண்டு தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளைப் பரிசளித்தார். அதில் ஏதாவது தமிழக அரசியலைப் பற்றிய குறியீடு இருக்கிறதோ என்பதைத்தான் யோசிக்க வேண்டியதாக இருக்கிறது!

கழுகார் பதில்கள்

செ.அ.ஷாதலி, கோனுழாம்பள்ளம்.

சுயேச்சை வேட்பாளர்களை ஏன் பெரும்பாலான வாக்காளர்கள் கண்டுகொள்வதில்லை?

எந்தக் கட்சியும் கண்டுகொள்ளாத ஊர் சார்ந்த பிரச்னை களுக்காக முன்பு சுயேச்சை வேட்பாளர்கள் களமிறங்குவார்கள். இப்போது பெரிய கட்சியில் சீட் கிடைக்காதவர்களே பெரும்பாலும் சுயேச்சையாகப் போட்டியிடுவதால், நேர்மையான சுயேச்சைகளும் கண்டுகொள்ளப்படாமல் போகிறார்கள்!

இல.கண்ணன், நங்கவள்ளி.

‘உலகின் தொன்மையான தமிழ் மொழியைக் கற்க முடியவில்லை என்ற வருத்தம் தனக்கு இருப்பதாக’ பிரதமரும், ‘இந்த உன்னதமான மொழியில் பேச ஆசை’ என்று அமித் ஷாவும் கூறியிருக்கிறார்களே?

“கோழி மீதான பாசம் கொழம்புச் சட்டி வரைக்கும் தான்!” என்று ஊர்ல ஒரு பழமொழி இருக்குங்க கண்ணன்... கேள்விப்பட்டிருக் கீங்களா?

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை, சேலம் (மா).

‘ஆனந்தக் கண்ணீர்’ என்பது எப்போதெல்லாம் வரும்?

திட்டமிட்டே யாரோ ஒருவரை வீடியோ எடுக்கச் சொல்லிவிட்டு, விம்மி விம்மி போன் பேசினால் பொங்கி வருவதுதான் ஆனந்தக் கண்ணீர்!

கழுகார் பதில்கள்

@வேதாந்த தேசிகன் மணி, அவினாசி.

பா.ஜ.க., தமிழகத்தில் தேர்தலுக்குப் பின்பே தீவிரம் காட்டும் என்கிறேன் நான். உங்கள் கருத்து?

கோவா, சிக்கிம், மேகாலயா என்று நீளும் பட்டிலிலுள்ள மாநிலங்களில், அவர்கள் காட்டிய ‘பலே’ தீவிரத்தைப் பற்றித்தானே சொல்கிறீர்கள்... பலே!

ராஜசேகர், குமாரபாளையம்.

பெட்ரோல் விலை உயர்வை மக்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்?

‘அழுதாலும் புள்ளய அவதான் பெத்தாகணும்’ என்கிற மனோநிலைக்கு மக்கள் வந்துவிட்டதைப்போலத் தெரிகிறது. ஆனால், வலி வலிதான்!

காந்தி, திருச்சி.

மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் காமராஜர், எம்.ஜி.ஆர் இருவரின் கட் அவுட்கள் வைக்கப்பட்டிருந்தனவே?

சொல்லிக்கொள்ளும் படியான தலைவர்கள் தமிழ் நாட்டில் தங்களுக்கு இல்லாததால், தலைவர் களையும் இரவல் வாங்க வேண்டியதாகப் போயிற்று... பாவம்!

ஒதியடிக்காடு மு.க.அழகிரி, தஞ்சை.

அரசு தடைசெய்த பாலிதீன் பைகள், பல கடைகளில் புழக்கத்தில் உள்ளன. அதேபோல அரசு பயன் பாட்டுக்குக் கொண்டுவந்த பத்து ரூபாய் நாணயத்தை, பல கடைகளில் வாங்க மறுக்கின்றனர். இது அரசின் சட்ட திட்டங்களை மதிக்கவில்லை என்றுதானே அர்த்தம்?

பாலிதீன் பை மட்டுமா... தடைசெய்யப்பட்ட குட்கா கூடத்தான் ‘வெற்றிநடை போடும் தமிழகத்தை’ விட வேகமாக நடைபோடுகிறது. கடுமையான சட்டங்கள் இயற்றி, இவற்றைக் கண்காணிக்க வேண்டியது அரசின் கடமை.

ராமகிருஷ்ணன், தஞ்சாவூர்.

ஆல் பாஸான மாணவர்களுக்குக் கழுகார் சொல்ல விரும்புவது என்ன?

இந்த இரண்டு வருடங்களில் பாஸ் செய்த மாணவர்கள் பிற்பாடு மேற்படிப்புகளிலும், வேலை வாய்ப்புகளிலும் ஒதுக்கப்படாமல் இருப்பதற்கு தங்களைத் தகுதியோடு வைத்துக்கொள்ள வேண்டும். தேர்வுதான் இல்லை; ஆனால் கற்க வேண்டும் என்பதை உணர்ந்துகொண்டால் அவர்களின் எதிர்காலத்துக்கு நல்லது!

கழுகார் பதில்கள்

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

பிரதமர் மோடியின் தமிழக விசிட், பா.ஜ.க-வுக்கு பலம் சேர்த்திருக்கிறது என்கிறார்களே?

இன்னும் எலெக்‌ஷனும் நடக்கல... ரிசல்டும் வர்லியே பாஸ்... அதுக்குள்ள எப்படி?

கழுகார் பதில்கள்

எம்.மிக்கேல் ராஜ், சாத்தூர்.

அ.ம.மு.க - ம.நீ.ம - தே.மு.தி.க கூட்டணி அமைந்தால் சாதகம் யாருக்கு... பாதகம் யாருக்கு?

இரண்டு வருடங்களுக்கு முன்பு கட்சி ஆரம்பித்து, தேர்தல் அரசியலுக்கு வந்தவர் கமல். மற்ற இருவரும் அரசியலுக்கு சீனியர்கள்தான். நீங்களே கணக்கு போட்டுக்கொள்ளுங்கள்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை,

சென்னை-600 002. kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!