சேகர் ராஜா, விழுப்புரம்.
எம்.எல்.ஏ-வாக இருக்கும்போது ரொம்ப சாதாரணமாக இருக்கும் சிலரது லைஃப்ஸ்டைல், மந்திரியானதும் படாடோபமாக மாறிவிடுகிறதே..?
கந்தர்வனின் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது:
‘எம்.எல்.ஏ சட்டையில் ஒரு பை வைத்தார்.
எம்.பி சட்டையில் பல பை வைத்தார்.
மந்திரி, பையையே சட்டையாக மாட்டிக்கொண்டார்.’
@P.அசோகன், கொளப்பலூர்.
எந்நேரமும் முகத்தை இறுக்கமாக வைத்திருப்பவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சிரிப்பு உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமாம். கொஞ்சம் சிரிக்கலாமே பாஸ்!
ராஜ்குமார், அரியலூர்.
நாட்டில் நகைச்சுவைக்குப் பெரும் பஞ்சம் வந்துவிட்டதுபோலத் தெரிகிறதே..?
அதான் எலெக்ஷன் வருதே ராஜ்குமார்... நிறைய காமெடிகள் ஆன் த வே!

சிவகுமார், முருகம்பாளையம்.
அமெரிக்காவின் தேர்தல் பரபரப்பைப் பார்த்தால் பயங்கரமாக இருக்கிறதே... அங்கெல்லாம் கலவர பயம் இல்லையா?
இல்லையாவா? நியூயார்க் நகரத்தின் இந்தப் புகைப்படத்தைப் பாருங்கள். முக்கிய நகரங்களில் பெரும்பாலான கடைகளின் முகப்பு கண்ணாடி என்பதால், தேர்தல் நாளன்று அத்தனை கடை களையும் ப்ளைவுட் கொண்டு அடைத்து விட்டார்கள். இங்கே கொரோனா தட்டி பிஸினஸ்போல அங்கே ப்ளைவுட் தடுப்பு பிஸினஸ் படுஜோராகப் போகிறது!
அரசியல்னு வந்துட்டா அமெரிக்கா மட்டும் விதிவிலக்கா என்ன!
@ஜோசப், தஞ்சாவூர்.
தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் இணைந்து மந்திரி சபை அமைக்கும் சூழ்நிலை ஏற்படுமா?
18-ம் பக்கத்தில் ராஜ்சிவா ‘லூசிட் கனவாளிகளைப்’ பற்றி எழுதியிருக்கிறார் வாசியுங்கள்... கொஞ்சம் முயன்றால், இப்படியான உங்களுக்கு விருப்பமான கனவை நீங்களே வடிவமைத்துக் காணலாம்.
சீ.பாஸ்கர், நந்திவரம்-கூடுவாஞ்சேரி.
ரஜினியைக் குழப்புவது யார்?
அதற்கென்று தனியாக ஓர் ஆள் தேவையா என்ன?
க.பாலகிருஷ்ணன், சுரண்டை.
அதி தீவிரமான விஞ்ஞான வளர்ச்சியில், வெங்காயத்துக்கு மாற்றுப்பொருள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லையே... ஏன்?
பாலா... இயற்கைக்கு மாற்றாக ஒரு விஷயத்தைக் கொண்டுவரலாம். இயற்கைக்குச் சமமாகக் கொண்டுவரவே முடியாது. விட்டா தாய்ப்பாசமெல்லாம் ஆர்ட்டிஃபிஷியலா கேட்பீங்கபோலயே!
க.சு.ஸ.மழாஹிரி, காயல்பட்டினம்.
என் நண்பன் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு, ‘அம்மா உணவக’த்திலிருந்து காலை சிற்றுண்டியை வாங்கும் வழக்கமுடையவராக இருந்தார். திடீரென நிறுத்திவிட்டார். கேட்டால், `எல்லாரும் கேவலமா பார்க்குறாங்க நண்பா’ என்கிறார். கேவலமாகப் பார்க்கும் அளவுக்கு அது மோசமான செயலா?
நிச்சயம் இல்லை. இந்த உலகத்துல நிறைய நல்ல விஷயங்கள் நடக்காம இருக்கிறதுக்கு ‘நாலு பேர் என்ன நினைப்பாங்களோ’னு நினைக்கிறதுதான் காரணம். அந்த நாலு பேர் யார்னு கடைசி வரைக்கும் யாருக்குமே தெரியாது. அதனால அடுத்தவங்களைப் பத்திக் கவலைப்பட வேண்டாம்னு நண்பருக்குச் சொல்லுங்க!
குமரகுரு, மேட்டுப்பட்டி.
பிறரைவிடத் தன்னைத் தாழ்த்திக்கொள்வது நல்லதா?
ஹோட்டீஸ் என்றொரு ஜென் ஞானி இருந்தார். நிறைய இனிப்புகள் கைவசம் வைத்திருப்பார். குழந்தைகளைப் பார்த்தால் அள்ளிக் கொடுப்பார். பெரியவர்களைப் பார்த்தால், “ஒரு காசு குடு” என்று கையேந்துவார். அவருடைய நோக்கம் தன்னைத் தாழ்த்திக்கொள்வதல்ல... ‘அடுத்தவர்களுக்குக் கொடுக்க ஒருவரிடம் ஏதாவது இருக்க வேண்டும். அப்படி ஒருவர் என்ன வைத்திருக்கிறார்?’ என்று ஒவ்வொருவருக்கும் உணர்த்தவே அப்படிக் கைநீட்டுவதை வழக்கமாக வைத்திருந்தாராம்!
இப்படி ஒரு தத்துவத்தை உணர்த்த தன்னைத் தாழ்த்திக்கொண்டால் பரவாயில்லைதானே குமரகுரு?
கண்ணன் சுகுமாரன், வேதாரண்யம்.
அமைச்சர்கள் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கிறார்கள்?
அறிகொன் றறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்
‘சொல்பேச்சும் கேட்காமல், சொந்த அறிவும் இல்லாமலிருக்கும் ஆட்சியாளர்களின் அருகிலுள்ள அமைச்சர்கள், நல்ல யோசனைகளைத் துணிவோடு சொல்ல வேண்டும்’ என்கிறார் வள்ளுவர்.
எப்படி இருக்கிறார்கள் என்பதை உங்கள் யோசனைக்கே விட்டுவிடுகிறேன்!
தாமஸ் மனோகரன், உழவர்கரை, புதுச்சேரி.
இன்றைக்கு வெட்கப்பட வேண்டிய, கோபப்பட வேண்டிய செய்தி எது?
பிஞ்சுகளின் மீது காட்டப்படும் வன்கொடுமைகள்.

வண்ணை கணேசன், சென்னை-10.
`பீகார் தேர்தலுக்குப் பிறகு, 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், மோடிக்கு எதிராகப் போட்டியிடவும் நிதிஷ் குமார் தயங்க மாட்டார்’ என்ற சிராக் பஸ்வானின் பேச்சு..?
இலக்கை நோக்கிய ஒரு பயணத்தில் பேருந்து பழுதடைந்தால், சட்டென்று இறங்கி வேறொரு பேருந்தில் பயணிப்பது வாடிக்கைதானே கணேசன்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSகேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை,சென்னை-600 002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!