@பெ.பச்சையப்பன், கம்பம்.

எம்.ஜி.ஆர் கெட்டப்பில் எடப்பாடியாரை ரசித்தீர்களா?

கறுப்பு எம்.ஜி.ஆர்., சிவப்பு எம்.ஜி.ஆர்., மோடி எம்.ஜி.ஆர்., ரஜினி எம்.ஜி.ஆர்., கமல் எம்.ஜி.ஆர்., விஜய் எம்.ஜி.ஆர்., இப்ப எடப்பாடி எம்.ஜி.ஆர்... இன்னும் எத்தனை எம்.ஜி.ஆரை இந்தத் தமிழகம் பாக்கணுமோ தெரியலையே!

மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி.

எவ்வித ஆதாரமும் இன்றி லட்சம் ரூபாய் கடன் கொடுத்த நண்பர், தீடீரென்று இயற்கை எய்துகிறார். `அவரது குடும்பத்தினரிடம் பணத்தைக் கொடு’ என்று மனசாட்சி சொல்கிறது... `கொடுக்காதே’ என்று அறிவு சொல்கிறது. இப்போது மனசாட்சிப்படி நடப்பது நல்லதா... அறிவுடன் நடப்பது நல்லதா?

மனசாட்சிப்படி நடப்பதுதானே அறிவார்ந்த செயலாக இருக்க முடியும்!

@கு.ப.இரகுநாதன், பூவிருந்தவல்லி.

`உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் நாடு நார்வே’ என்று படித்ததாக ஞாபகம். அது எந்த அடிப்படையில்?

நார்வே அல்ல. கடைசியாக மார்ச் 2020-ல் ஐக்கிய நாடுகள் வெளியிட்ட சர்வேபடி ஃபின்லாந்துதான் முதலிடத்தில் இருக்கிறது. `உங்கள் பொருளாதாரநிலை எப்படி இருக்கிறது, நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள், எவ்வளவு சுதந்திரமாக உணர்கிறீர்கள், உங்கள் முன்னேற்றத்தில் அரசின் பங்கு எவ்வளவு...’ உட்பட பல கேள்விகளை மக்கள் முன்வைத்து இந்த சர்வே எடுக்கப்படுகிறது. 156 நாடுகளில் எடுக்கப்பட்ட இந்த சர்வேயில் இந்தியாவுக்கு 144-வது இடம்... சந்தோஷம்தானே நாதன்?

மிக்கேல் ராஜ், விருதுநகர்.

39 வயதிலும் 20 வயது இளம்பெண்போலக் காட்சியளிக்கிறாரே அனுஷ்கா..?

என்ன மிக்கேல்... இத்தனை ரணகளங்களுக்கு மத்தியிலுமா?

@இல.கண்ணன், நங்கவள்ளி.

தமிழ்நாட்டில் படிப்படியாக கொரோனா பரவல் குறைந்துவருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறாரே..?

இதுவரை சமூகப் பரவல் இல்லை என்று சத்தியம் செய்துவரும் அரசாங்கம், கொரோனா பாதிப்பு குறைந்துவிட்டதாகச் சொல்வதில் ஆச்சர்யமொன்றுமில்லை. ஆனால், இந்த நோயின் தீவிரம் குறித்து உணர்ந்து, பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது நம் கடமை. குறிப்பாகப் பண்டிகைக் காலங்களில்!

ச.ந.தர்மலிங்கம், ஈரோடு.

ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை விதிப்பதில் ஏன் தாமதம்?

தடை ஒரு பக்கம் இருக்கட்டும். அதில் விளையாடிச் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் மக்களுக்கு வருவது நிச்சயம் ஆபத்தானது.

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை.

தமிழக அரசியலில் ரஜினி ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு பலிக்குமா... பலிக்காதா?

இது யாருடைய எதிர்பார்ப்பு மனோகர்? உங்கள் எதிர்பார்ப்பா... தமிழருவி மணியனின் எதிர்பார்ப்பா?

தாமஸ் மனோகரன், உழவர்கரை.

பா.ஜ.க என்ன செய்தால் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கும்?

என்ன செய்ய வேண்டும் என்பதைவிட, என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதை அவர்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

எஸ்.மோகன், கோவில்பட்டி.

எம்.பி பதவி கிடைத்ததும் வாசன் அமைதியாகிவிட்டாரே?

என்னவோ அதற்கு முன் மட்டும் மக்கள் பிரச்னைகளுக்காக வாரம் ஒரு பிரஸ் மீட் வைத்து, மாதம் ஓர் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்ததைப்போலக் கேட்கிறீர்களே!

சம்பத்குமாரி, பொன்மலை.

‘நல்லவர்களுடன்தான் கூட்டு’ என்கிறாரே கமல். அரசியலில் நல்லவர்கள் யார்?

ரொம்ப சிம்பிள்... கமலுடன் சேர்பவர்கள் கமலுக்கு நல்லவர்கள்.

கே.கே.வெங்கடேசன், செங்கல்பட்டு.

நான் இந்தியாவின் சர்வாதிகாரி ஆகிவிட்டால், மெகா சீரியல்கள் அனைத்துக்கும் நிரந்தரத் தடை விதிப்பேன். தாங்கள் என்ன செய்வீர்கள்?

எந்த சர்வாதிகாரி கையிலும் இந்தியா சிக்காமல் பார்த்துக்கொள்வேன்!

பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி.

மறைந்த முதல் ஜேம்ஸ் பாண்ட், சீன் கானரி குறித்த சுவாரஸ்யத் தகவல்..?

கூட்டுறவு சொசைட்டியில் பால் விற்பனையாளர், சவப்பெட்டிக்கு பாலிஷ் அடிப்பவர் என்று பல வேலைகளைத் தன் சிறு வயதில் செய்திருக்கிறார் சீன் கானரி. ஒருமுறை ஓவர் ஸ்பீடாகச் சென்றவரை சார்ஜென்ட் ஒருவர் பிடித்திருக்கிறார். சீன் கானரி என்று தெரிந்தும், அபராதம் போட்டு வசூலித்துவிட்டு, கடைசியாகத் தன் அடையாள அட்டையிலுள்ள பெயரை கானரிக்குக் காட்டியிருக்கிறார் அந்த சார்ஜென்ட். அவரின் பெயரைப் பார்த்ததும், சீன் கானரி சிரித்துக்கொண்டே ஒரு பேப்பரில் ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்திருக்கிறார். அந்த சார்ஜென்ட்டின் பெயர்: ஜேம்ஸ் பாண்ட்!

சம்பத், திருச்சி.

செல்லூர் ராஜூ, உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் இவர்களைப் போட்டு முழுநீள காமெடி படம் எடுத்தால் எப்படியிருக்கும்?

இப்ப மட்டும் என்ன குறையாம்... சீரியஸான படமா ஓடிட்டிருக்கு? ஆமா... ராஜேந்திர பாலாஜியை விட்டுவிட்டீர்களே!

ஆர்.துரைசாமி, கணபதிபுதூர், கோவை.

எனக்கு கழுகார் எதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

உங்களுக்கும், உங்கள் மூலமாக அனைத்து வாசகர்களுக்கும் இனிய, பாதுகாப்பான தீபாவளி நல்வாழ்த்துகள்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை,சென்னை-600 002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!