@ஜெ.நெடுமாறன், ராமாபுரம்.

கொரோனா மட்டும் வராமல் இருந்திருந்தால் ட்ரம்ப் வெற்றிபெற்றிருப்பார் அல்லவா?

அப்படிச் சொல்லிவிட முடியாது. கொரோனாவால் பிழைப்பில்லாமல், இந்த தேசம் முழுவதும் நடையாக நடந்த பீகார் புலம்பெயர் தொழிலாளர்கள் நிதிஷ் குமாருக்கு மீண்டும் வாய்ப்பளித்திருக்கிறார்களே!

சின்னஞ்சிறுகோபு, சென்னை.

‘அடுத்த பிறந்த நாளை கோட்டையில் கொண்டாடுவோம்’ என்கிறாரே கமல்ஹாசன்?

இ.வி.பி ஃபிலிம் சிட்டியில் செட் போடுவாரோ?

வண்ணை கணேசன், சென்னை-110.

இன்றைய அரசியலில் ‘எப்படியும் வாழலாம்’ என்பவர்கள் மத்தியில், `இப்படித்தான் வாழ வேண்டும்’ என்று நினைப்பவர்கள் உண்டா?

பலரும் ‘இப்படித்தான் வாழ வேண்டும்’ என்று நினைக்கிறார்கள். ஆனால், அந்த ‘இப்படி’, எப்படி என்பதுதான் பெரிய கேள்விக்குறி!

சா.சொக்கலிக்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

தேர்தல் அறிக்கை என்றால் என்ன?

‘அடுத்த ஐந்தாண்டுகளுக்கு என்ன செய்வோம்’ என்பதைச் சொல்லி வாக்குக் கேட்கத் தயாரிக்கப்படுவதுதான் தேர்தல் அறிக்கையின் நோக்கம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக வெறும் பொய்த் தோரணங்களே பல கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இடம்பெறுகின்றன என்பதுதான் நிதர்சனம்.

மூக்கையா, தர்காஸ்.

மு.க.ஸ்டாலின் செயல்பாடு, ராகுல் காந்தியின் செயல்பாடு... எப்படிப் பார்க்கிறீர்கள்?

வாரிசுகள் இருவருமே டெஸ்ட் மேட்ச் என்கிற அன்றாட அரசியல் களத்தில் சிறப்பாக ஆடினாலும், எலெக்ஷன் என்கிற ஒன் டே மேட்சில் சொதப்புகிறார்கள்!

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.

லஞ்ச ஒழிப்புத்துறை எப்போதும் அம்புகளை மட்டுமே குறிவைப்பது ஏன்?

எய்தவர்களின் கட்டுப்பாட்டில்தான் ‘எல்லாம்’ இருப்பதாலோ என்னவோ!

@மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி.

ஒரு விவாதம் எப்படி இருக்க வேண்டும்?

நம்முடன் விவாதிப்பவரும் நாமும் எதிரி என்ற மனப்பாங்கை முதலில் களைய வேண்டும்; ஒரு விஷயத்தில் உண்மை என்ன என்பதைக் கண்டறியும் வழிதான் விவாதம் என்பதை உணர வேண்டும். விவாதத்தை விதண்டாவாதமாக மாற்றக் கூடாது. விவாதத்தின் முடிவில் யார் வென்றார்கள் என்பதைவிட, அறம் வென்றிருக்க வேண்டும்.

@ம.ரம்யா ராகவ், வெள்ளக்கோவில்.

கமல், ரஜினி இருவரில் யார் பெரியவர்?

வயதில் கமலைவிட ரஜினி நான்கு வயது மூத்தவர். நடிக்க வந்ததில் ரஜினியைவிட கமல் 15 வயது சீனியர். பொதுவெளியில் கட்சி அரசியல் பேசியதில் கமலுக்கு ரஜினி சீனியர். அரசியலுக்கு வந்ததில் ரஜினிக்கு கமல் சீனியர். ஆமாம்... நீங்கள் எதில் கேட்கிறீர்கள்..?

@நரேசு தமிழன், சேலம்.

நடிகர்கள் கட்சி தொடங்கினாலோ அல்லது அதைப் பற்றிப் பேசினாலோ அரசியல் களம் சூடுபிடிக்கிறதே ஏன்... அவர்கள் ஆட்சிக்கு வருவது நல்லதா?

திரையில் ஹீரோயிசம் காட்டும் நாயகர்கள் நிஜத்திலும் நமக்கு நல்லது செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு காரணமாக இருக்கலாம். ஜனநாயக அமைப்பில், யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம். வந்த பிறகு என்ன செய்கிறார்கள் என்பதுதான் முக்கியம்!

கே.கே.வெங்கடேசன், செங்கல்பட்டு.

இன்றைக்கும்கூட ‘முதுமையில் தனிமை’, ‘இளமையில் வறுமை’ என்பது கொடுமைதானா?

நைன்டீஸ் கிட்ஸுக்கு ‘இளமையில் தனிமை’தான் இப்போது கொடியதாக இருக்கிறதாம்!

@ந.அய்யப்பசாமி, தேவாரம்.

பள்ளித் திறப்பு பற்றி கருத்து கேட்கும் அரசு, டாஸ்மாக் மூடுவது குறித்தும் கருத்து கேட்கக் கூடாதா?

நியாயமான கேள்விதான். ‘ஈயம் பூசின மாதிரியும் இருக்க வேண்டும்... பூசாத மாதிரியும் இருக்க வேண்டும்’ என்பதுபோல இந்த மாதிரி விஷயங்களுக்கு மக்களிடம் கருத்து கேட்டு, ஜனநாயகமாக நடப்பதுபோல ஒரு பிம்பத்தை உருவாக்கிவிட்டு, சமூகத்தை பாதிக்கும் முக்கியப் பிரச்னைகளில் சர்வாதிகாரியாகச் செயல்பட்டு, அதன் விளைவுகளை மக்கள்மீது திணிப்பது இன்றைய அரசியலில் வழக்கமாகிவிட்டது.

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

ஜெ.தீபாவை நம்பிச் சென்ற தொண்டர்கள் கதி?

யாரு... அந்த ரெண்டு பேர்தானே?

திருப்பூர் அர்ஜுனன்.ஜி, அவிநாசி.

‘ஸ்வீட் பாக்ஸ் கொடு... பதவியைப் பெறு’ என்று மாற்றிவிட்டார்களே?

நேர்மையற்ற வழியில் வரும் சம்பாத்தியமே ஸ்வீட் பாக்ஸ்களாக மாறுவதால், நேர்மையாளர் களுக்கு அரசியல் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதன் கசப்பை அனுபவிப்பதென்னமோ மக்களாகிய நாம்தான்.

ராஜசேகர் கண்ணப்பன், மயிலாடுதுறை.

கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை... இந்த நிலை இன்று யாருக்குப் பொருந்தும்?

வேல் யாத்திரைக்கு ஓகே சொல்லி ரெய்டைத் தவிர்க்க வேண்டும்... அனுமதி மறுத்து மக்களிடம் `நாங்கள் கைப்பாவை இல்லை’ என்றும் நிரூபிக்க வேண்டும் என்று நாடகம் போடுபவர்களுக்கே பொருந்தும்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,757, அண்ணா சாலை,சென்னை-600 002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!