Published:Updated:

கழுகார் பதில்கள்

மோடி
பிரீமியம் ஸ்டோரி
News
மோடி

லஞ்சம் வாங்குவதையே கேவலமாக நினைக்காத இந்த நாட்டில், பிச்சையெடுப்பதைக் கேவலம் என்று சொல்வது தவறுதான்!

வண்ணை கணேசன், சென்னை.

ஓட்டுக்குப் பண நிர்ணயம் செய்வது மக்களா, அரசியல்வாதிகளா, கட்சியா?

கட்சியை பலப்படுத்துவதற்காக அரசியல்வாதிகள் ஆரம்பித்தது. அதை மக்களும் பிடித்துக்கொண்டதுதான் வேதனை!

கணேசகுமார், நங்கநல்லூர்.

அரசியல்வாதிகள் லஞ்சம், ஊழலற்ற ஆட்சி நடத்தி, `மக்கள் சேவையே முக்கியம்’ என்று நினைக்கும் காலம் எப்போது வரும்?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அடுத்த கேள்வியைப் பார்க்கவும்.

ரங்கநாதன், திருச்சி.

கழுகாருக்கு `குபீர்’ சிரிப்பை வரவழைத்த கேள்வி எது?

முந்தைய கேள்வியைப் பார்க்கவும்.

கணேசன், பொன்னியம்மன்மேடு.

`பா.ஜ.க ஆட்சியில்தான் சாலையோர வியாபாரிகளுக்கும் கடன் பெறுவதற்கான வசதி செய்யப்பட்டிருக்கிறது’ என்று பிரதமர் பெருமிதப்பட்டிருக்கிறாரே..?

அவர்களைச் சாலையோரத்துக்குத் தள்ளியது எது என்று ஆராய்ந்து, அதைச் சரிசெய்வதை விடுத்து, மேலும் அவர்களைக் கடன்காரர்களாக்குவது பெருமையா?

மோடி
மோடி

சிவாஜி மூக்கையா, தர்காஸ்.

லெட்டர்பேடு கட்சி தொடங்க என்ன தகுதி வேண்டும்?

லெட்டர் பேடு இருந்தா போதும்.

அருணகிரி, திருவண்ணாமலை.

பிச்சையெடுப்பது கேவலமா?

லஞ்சம் வாங்குவதையே கேவலமாக நினைக்காத இந்த நாட்டில், பிச்சையெடுப்பதைக் கேவலம் என்று சொல்வது தவறுதான்!

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

மனித வாழ்க்கையை எட்டெட்டாகப் பிரிச்சவரு எந்த எட்டுல வருவாரு?

எட்டாம் எட்டுக்கு மேல கட்சி தொடங்கினா நிம்மதி இல்லைனு நெனைக்கிறாருபோல.

@கே.கே.வெங்கடேசன், செங்கல்பட்டு.

40, 50 வயது கடந்தவர்களைக்கூட இளைஞர்கள் தங்கள் அபிமான நாயகர்களாகக் கருதுகின்றனரே!

இளைஞர்களிடம் அவர்கள் எதை விதைக்கிறார்கள் என்பதுதான் முக்கியமே தவிர, வயது அல்ல. ஆபிரஹாம் லிங்கன், ஹென்றி ஃபோர்டு தொடங்கி நம்மூர் நஸ்ருதீன் ஷா வரை பலரும் 40-க்குப் பிறகு சாதித்து இளைஞர்களை ஈர்த்தவர்கள்தான்.

@சீ.பாஸ்கர், நந்திவரம்-கூடுவாஞ்சேரி.

பிரதமர் நரேந்திர மோடி, அடிக்கடி தனது பேச்சில் திருக்குறள், பாரதியார் பாடல்கள், கம்பராமாயணம் உள்ளிட்ட இலக்கியங்களை மேற்கோள்காட்டிப் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறாரே..?

தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையில்தான் இதெல்லாம் நடக்கிறது என்பது கண்கூடு. எது எப்படியோ, இந்தி மட்டுமே பேசுபவரை அவ்வப்போது தமிழ் பேசவைத்துவிட்டார்கள் திருவள்ளுவரும் பாரதியாரும் கம்பரும்!

ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம் - 608 001.

2020 தீபாவளி செம சூப்பரா இருக்கும்போல?

2020 தீபாவளியில இருந்தாவது சூப்பரா இருக்கட்டுமே!

@வெங்கட்

காந்தியின் கைத்தடி, பெரியாரின் கைத்தடி என்ன வித்தியாசம்... ஒற்றுமை?

ஒன்று, அஹிம்சையின் சாந்த வடிவம். மற்றொன்று, அதிரடியின் உக்கிர வடிவம். ஆனால், இரண்டுமே தேசத்தைத் தட்டி எழுப்பியவை.

காந்தி, பெரியார்
காந்தி, பெரியார்

@அருண் கார்த்திக், ஊத்துக்குளி

‘பழைய நெனைப்புடா பேராண்டி’ என்பதற்குச் சமீபத்திய உதாரணம் ஏதாவது..?

மத்தியப்பிரதேச மாநில, டாப்ரா தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் இமார்டி தேவிக்காக பிரசாரம் செய்தார் பா.ஜ க-வின் ஜோதிராதித்யா சிந்தியா. முன்னாள் காங்கிரஸ்காரரான இவர், தீவிரமாகப் பேசிக்கொண்டே வந்து சடாரென ‘காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்’ என்று பழைய நினைப்பிலேயே கூறிவிட, மேடையிலிருந்த அனைவரும் ஷாக் ஆகிப்போனார்கள்.

கிடையூர் மாணிக்கம், சங்ககிரி, சேலம்.

முருகனின் ‘வெற்றிவேல் யாத்திரை’ வரும் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு ஓட்டுகளை அள்ளித்தருமா?

வேலுக்கு யாத்திரை நடத்துபவர்கள், வேலைக்கும் ஒரு யாத்திரை நடத்தலாம்!

@சரவணகுமார் சின்னசாமி, தாராபுரம்.

இந்தியாவில் இருக்கவும் பிடிக்கவில்லை, கைலாசாவின் தற்போதைய நிலையும் தெரியவில்லை... என்னதான் செய்வது?

கைலாசா நிலை மட்டுமல்ல... அதன் அதிபரோட நிலையும் என்னவென்று தெரியவில்லை. இருக்கிற நாட்டில் இருக்கிறதுதான் நித்தமும் ஆனந்தம் சரவணரே!

@குணசீலன், மேல்மருவத்தூர்.

கழுகாரின் லேட்டஸ்ட் பாராட்டு யாருக்கு?

இந்திய ராணுவ வீரர் ஒருவருக்கு. ராணுவ மருத்துவர்கள் மூவர் குடல்வால் அறுவை சிகிச்சை ஒன்றை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார்கள். அந்த மருத்துவக்குழுவுக்குத்தான் நம் பாராட்டு!

கிழக்கு லடாக்கில் 16,000 அடி உயரத்தில், வலியால் துடித்த ராணுவ வீரரைக் கீழே கொண்டுவர காலநிலைகள் ஒத்துவராத நிலையில், மருத்துவக்குழு அந்த இடத்துக்கு விரைந்திருக்கிறது. ஆக்சிஜன் அளவு குறைந்திருக்கும் அத்தனை உயரத்தில், நடுங்கும் குளிரில், தோண்டப்பட்ட குழிக்குள் நடந்த இந்த அறுவை சிகிச்சையை மருத்துவ உலகமே வியந்து பாராட்டிவருகிறது!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை,சென்னை-600 002 kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!