@கொ.மூர்த்தி, குட்டலாடம் பட்டி.

‘பிரதமர் மோடியின் தமிழர் வேடத்தைக் கண்டு, தமிழ் மக்கள் எவரும் ஏமாற மாட்டார்கள்’ என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளாரே?

தமிழர்கள் இப்படி ஏமாறாமல் இருந்ததற்கு, அழகிரியிடம் ஏதேனும் ‘புள்ளி’ விவரங்கள் இருக்கின்றனவா?

@ப.சுவாமிநாதன், சென்னை.

‘பாலிவுட் படங்களின் ஒரு நாள் வசூல் பல கோடி ரூபாய். அப்படி இருக்கும்போது இந்தியாவின் பொருளாதாரம் மந்தநிலையில் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம்’ என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியிருப்பது பற்றி..?

சரியாகத்தான் சொல்லியிருக் கிறார். இதுமட்டுமா, மத்திய-மாநில அமைச்சர்களில் பெரும்பாலானோரின் ஒரு மணி நேர வசூலே பல ஆயிரம் கோடி ரூபாயாயிற்றே! ‘மந்தை’களான நமக்குத்தான் மந்தநிலையே.

@இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி, கரூர் மாவட்டம்.சூப்பர் ஸ்டார் இந்த முறை இமயமலையிலிருந்து திரும்பி வரும்போதாவது அரசியலில் களம் இறங்குவது குறித்து நல்ல முடிவுடன் வருவாரா?

ஏற்கெனவே முடிவெடுத்து விட்டுத்தானே போயிருக்கிறார். வந்தவுடனே பூஜைபோட வேண்டியதுதான் பாக்கி!

@சுதன் ஆதித்யா, பெங்களூரு.

அரசியல் அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசியலை கட்டாயப்பாடமாக வைக்கலாமே! இதன்மூலமாக மீண்டும் காமராஜர், கக்கன், ஜீவா போன்றோர் தோன்றுவதற்கு வாய்ப்பு இருக்கும்தானே?

வைக்கலாம்தான். ஆனால், ஏட்டுப்பாடங்களால் மட்டும் அரசியல் அறிவைப் பெற்றுவிட முடியாது. வாழ்க்கைப்பாடம் மிகமிக முக்கியம். நீங்கள் சொல்லும் தலைவர்கள் எல்லோரும் வாழ்க்கைப் பாடத்தில் கரைகண்டவர்கள். குறிப்பாக, பள்ளிக்கூடத்துக்கே செல்லாத காமராஜர்தான் மாநிலம் முழுக்க நிறைய கல்விக்கூடங்கள் உருவாகக் காரணமாக இருந்தார். இப்போது, பள்ளிக்கூடங்களில் ஏட்டுப்பாடத்தை மட்டுமே படிக்கும் ‘பிராய்லர் குஞ்சு’களாகத்தானே பொரித்துக் கொண்டிருக்கிறோம்.

ஹெச்.மோகன், மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம்.

‘அசுரன்’ தனுஷ்?

நடிகாசுரன்!

@வாசுதேவன், காடுகுடி, பெங்களூரு.

அறியாமை குற்றமா?

அதை அறியாமலேயே இருப்பது குற்றம்!

மனோகரன், சின்னதாரா புரம், கரூர் மாவட்டம்.

காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களா... பெண்களா?

காதல்!

எஸ்.பழனிவேல், தேவகோட்டை.

அ.தி.மு.க எம்.பி-யான சசிகலா புஷ்பா, ‘நடிகர் ரஜினி புலி; நடிகர் விஜய் புளி’ எனக் கிண்டலடித் துள்ளாரே?

ஓ... இவருக்கும் வயிற்றில் கரைய ஆரம்பித்துவிட்டதோ!

@சி.கார்த்திகேயன், சாத்தூர்.

கழுகார், ஆள்மாறாட்டம் செய்து பதில் தருகிறாராமே?

இந்தப் புகாரை, சி.பி.ஐ விசாரிக்க உடனடியாக உத்தரவிடுகிறேன்!

@சத்யமூர்த்தி

கீழடி உள்பட பல்வேறு இடங்களில் நாகரிகம்மிக்க மனிதர்கள் வாழ்ந்துள்ளனர். அந்த மக்களுக்கும் ஊர்களுக்கும் என்னதான் நடந்தது. அவையெல்லாம் மண்மூடிப்போனதற்கான காரணம்தான் என்ன?

பெரும்பாலும் நாகரிகங்கள் உருவாவது ஆற்றங்கரைகளில்தான். அழிந்துபோன நகரங்களில் பெரும்பாலானவையும் ஆற்றங்கரை நகர நாகரிங்களே! பெரும்பாலான நாகரிகங்களின் அழிவுக்கு மிக முக்கியமான காரணம், ஆறுகளில் ஏற்பட்ட அளவுக்குமீறிய வெள்ளப்பெருக்கு, நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்களே. இதுபோன்றவைதான் நகரமே மண்மூடிப்போகக் காரணமாக இருக்க முடியும் என்பது தொல்பொருள் ஆய்வாளர்களின் கருத்து. சில நாகரிகங்கள், எதிரிகளால் மொத்தமாக அழிக்கப்பட்டிருக்கலாம். காலப்போக்கில் அவையும் மண்மூடிப்போயிருக்கலாம்.

ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

‘காவிரி டெல்டாவை வேளாண் மண்டலமாக அறிவிக்கும் வகையில் சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும்’ என்கிறாரே அன்புமணி ராமதாஸ்?

சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க மற்றும் பி.ஜே.பி-யுடன் கூட்டணிவைத்த டாக்டர் ராமதாஸ், அதற்காக 10 கோரிக்கைகளை வெளியிட்டார். முதல் கோரிக்கையே இதுதான். ஆனால், தேர்தல் முடிந்த கையோடு முதலில் நிறைவேற்றப் பட்டது இந்த 10-ல் இடம்பெறாத ராஜ்யசபா எம்.பி பதவி. சூட்டோடுசூடாக அதை வாங்கி விட்டார் அன்புமணி. அவர் நினைத்தால், பதவி வாங்கியதுடன் ஒதுங்கியிருக் கலாம். ‘சூடு குறைந்துவிடக் கூடாது’ என்ற அக்கறையில் கோரிக்கைகளை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறார். சின்ன ஐயாவின் இந்த அதீத அக்கறைக்காகவே விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் குத்துக் குத்து என கூட்டணிக் கட்சிக்குக் குத்தலாம்.

ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்.

‘நான் சினிமா தொழிலில் இருக்கிறேன். பேனர் வைக்கக் கூடாது என்று சொல்ல மாட்டேன். சட்டப்படி அனுமதிபெற்று பேனர் வைக்க வேண்டுகிறேன்’ என்று கமல் சொல்கிறாரே?

நான் டாஸ்மாக் கடையில் வேலைபார்க்கிறேன், நான் பிளாஸ்டிக் கம்பெனி நடத்தி வருகிறேன், நான் சாயப்பட்டறை நடத்திக்கொண்டிருக்கிறேன், நான் மணல் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறேன்... இப்படி ஒவ்வொரு தொழிலில் இருப்ப வருக்கும் ஒவ்வொரு நியாயம் இருக்கத்தானே செய்கிறது. அதெல்லாம்கூட ‘அனுமதி’ யுடன்தானே நடக்கிறது.

சம்பத்குமாரி, பொன்மலை, திருச்சி.

‘சிங்கப்பூரில்கூடத்தான் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்கிறாரே முதல்வர் எடப்பாடி பழனிசாமி?

‘இங்கிவனை யான்பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்..?’ என்று நாம் பாடும் அளவுக்கு என்ன ஒரு மூளைக்கார மனிதர்! ‘தமிழ்நாடும் சிங்கப்பூர்போல ஆகிவிட்டது’ என்பதை நமக்கு எப்படிப் புரியவைக்கிறார் பாருங்களேன்!

என்.சண்முகம், திருவண்ணாமலை.

திருச்சி நகைக்கடைக் கொள்ளையர்களை விரைவாகப் பிடித்துவிட்டதே நமது காவல்துறை?

யதார்த்தமாகத்தான் சிக்கிக் கொண்டார்கள். என்றாலும், அந்த நேரத்தில் திருவாரூர் காவல்துறையினர் விழிப்புடன் இருந்து துரத்திப் பிடிக்கவில்லை என்றால், அதன் பிறகு பிடித்திருப்பார்களா என்பதே சந்தேகம்தான். காரணம், இதே காவல்துறையில் திருவாரூர் முருகனுக்கு ஏகப்பட்ட தோஸ்துகள் இருக்கிறார்கள். அன்றைய தினம் அந்த தோஸ்துகள் ரோந்துப்பணிக்கு வரவில்லை என்பது குறித்துக் கொள்ள வேண்டிய விஷயம். திருவாரூர் போலீஸை விடுங்கள், பெங்களூரு போலீஸையும் வளைத்துப்போட்டிருக்கிறாரே அந்தக் கில்லாடி முருகன். பெரம்பலூர் போலீஸ் மடக்கவில்லை என்றால், அந்தக் கதையும் அம்பலத்துக்கு வந்திருக்காது. தமிழக காவல்துறையில் நல்ல இதயங்களும் இருக்கின்றன... பாராட்டுவோம், வாழ்த்துவோம்!

@சு.சேகர், ஆலப்பாக்கம், சென்னை-116.

மு.க.ஸ்டாலின் பேச்சில் சமீப காலமாக சர்வாதிகார நெடி அடிப்பதைக் கவனித்தீரா?

சமீபகாலமாகவா... ஆரம்பத் திலிருந்தே அவர் ‘ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி’தானே!

பி.சாந்தா, மதுரை-14

இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாசா, கோத்தபய ராஜபக்சே போல் தமிழர் களுக்கு தீயதைச் செய்ய மாட்டார் என என்ன நிச்சயம்?

‘நல்ல கொள்ளி’ என்று ஏதும் இல்லை!

ஜெ.ஜானி, போரூர், சென்னை-116.

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் எந்தெந்தப் பள்ளிகளில் படிக்கிறார்கள் என்ற கணக்கெடுப்பை, பள்ளிக்கல்வித் துறை எடுக்க ஆரம்பித்துள்ளதே?

‘ஆசிரியர்கள் பொறுப்பாக இருந்தால், அரசுப் பள்ளிகளின் தரம் ஏன் குறையப்போகிறது?’ என்ற நல்லெண்ணத்தில்தான் இந்த நடவடிக்கை. இது, அவர்களின் குழந்தைகளை எல்லாம் அரசுப் பள்ளிகளிலேயே சேர்ப்பதற்கான முன்முயற்சி என்கிறார்கள். இது அதிகாரிகள், அமைச்சர்கள் என நீளவேண்டும். அனைவரின் குழந்தைகளும் அரசுப் பள்ளிகளில் படித்தால், அனைவருமே கூடுதல் அக்கறைகாட்டுவார்களே!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை- 600002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!