அரசி சண்முகசுந்தரம், புதுவண்ணை, சென்னை-81.

கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதியுடன் அவரின் மனைவியும் மேடையில் பங்குபெறுகிறாரே, அதுவும் பட்டமளிப்பு உடையுடன்?

அரசராட்சி மோகத்திலிருந்து இன்னமும் விடுபடாதவர்களாகத்தானே இருக்கிறார்கள் நம் அரசியல்வாதிகள். அந்தக் காலங்களில் பட்டங்களை வழங்குவதெல்லாம் அரசர்தான் (வேந்தர்). ஒருவகையில் நம் நாட்டு ஜனாதிபதியும் அரசர்போலத்தானே வைக்கப்பட்டிருக்கிறார். அரசரின் மனைவி அரசி என்கிற வகையில் மேடை ஏற்றியிருப்பார்கள். ‘ஜனநாயக நாடு’ எனச் சொல்லிக்கொள்ளும் நம் நாட்டில், வழக்கொழிக்கப்பட வேண்டிய இதுபோன்ற பல விஷயங்கள் இன்னும் நடைமுறையில் இருக்கத்தான் செய்கின்றன. ‘முடிவுகட்ட’ வேண்டியவர்களே முதல் வரிசையில் உட்கார்ந்து ரசித்து அனுபவிக்கிறார்களே!

பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி.

‘என்னுடைய புத்தகம், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கையில் இருக்கும் என நினைக்கிறேன். நான் எண்ணிய திட்டங்களை அவர் அங்கு நிறைவேற்றிவருகிறார்’ என்கிறாரே சீமான்?

‘கதைத் திருட்டு!’

சு.பிரபாகர், தேவகோட்டை, சிவகங்கை மாவட்டம்.

மனித நடமாட்டம் உள்ள பெரிய இடங்களில்கூட துணிந்து கைவரிசைகாட்டும் கொள்ளையர்கள், பணக்கார அரசியல்வாதி வீடுகளில் ‘கை’ வைக்காததன் மர்மம் என்னவோ?

அதெல்லாம் தொழில் ரகசியம்!

@அ.குணசேகரன், புவனகிரி, கடலூர் மாவட்டம்.

கியூபாவைப் போன்று, கல்வியை அரசே ஏன் இலவசமாக வழங்கக் கூடாது?

கல்வியை மட்டுமல்ல... மருத்துவம், போக்குவரத்து, குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளான பலவற்றையும் அரசாங்கம் மட்டும்தான் இலவசமாக வழங்க வேண்டும். அரசாங்கம் என்கிற அமைப்பை நாம் உருவாக்கியதே நம்மை நெறிப்படுத்தி, வழிப்படுத்தி, நமக்குத் தேவையானவற்றை எல்லாம் பார்த்துப் பார்த்துச் செய்வதற்காகத்தான். அந்த வகையில்தான் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் ஆரம்பத்திலிருந்தே அரசாங்கத்தின் கைகளில் இருந்தன. காலப்போக்கில், தனியார் நிறுவனங்களிடம் ‘கான்ட்ராக்ட்’ விட்டு ‘கமிஷன்’ பார்ப்பதுதான் அரசாங்கம் என்றாகிவிட்டது. கிட்டத்தட்ட அரசாங்கத்தையே ‘கான்ட்ராக்ட்’ அடிப்படையில் நடத்த ஆரம்பித்துவிட்டார்களே! தேர்தலுக்குத் தேர்தல் பலருக்கும் 2000, 3000 என ‘கமிஷன்’ கொடுத்து திருப்தியும்படுத்தி விடுகின்றனரே.

சின்னதாக ஓர் ஒப்பீடு. அரசாங்க மருத்துவக் கல்லூரியில் ஓராண்டுக் கட்டணம் 13,600 ரூபாய். தனியார் மருத்துவக் கல்லூரியில் குறைந்தபட்சம் 18 லட்சம் ரூபாய்!

@கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்.

உள்ளாட்சித் தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பதற்கான கால அவகாசத்தை செப்டம்பர் 30, அக்டோபர் 18 என நீட்டித்தவர்கள், தற்போது நவம்பர் 18 என நீட்டித்துவிட்டார்களே?

கோர்ட்டில் சொல்வதற்கு, புதிது புதிதாகக் காரணங்கள் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கின்றனவே!

டி.சந்திரன், ஈரோடு.

ம்... தீபாவளிக்கு விடுமுறைவிடும் விஷயத்தில்கூட உறுதியாக முடிவெடுக்க முடியாமல் மாற்றி மாற்றிக் குழப்பும் இந்த ஆட்சியாளர்களை நம்பி ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் ஒப்படைத்துவிட்டோமே?

அது முடிந்த கதை!

பாலு, வேர்க்கிளம்பி, கன்னியாகுமரி மாவட்டம்.

ஐ.நா சபையும் பொருளாதாரச் சிக்கலில் சிக்கிவிட்டது. ‘இந்த மாத இறுதிக்குள் இருப்புநிதி தீர்ந்துவிடும்’ என்கிறாரே அதன் பொதுச்செயலாளர்?

ஏகப்பட்ட வளங்களை வைத்திருக்கும் பெரும்நாடுகளே பொருளாதார நெருக்கடியில் தள்ளாடும்போது, அந்த நாடுகளாகப் பார்த்துக் கொடுக்கும் கொஞ்சநஞ்ச நிதியை மட்டுமே எதிர்பார்த்து காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் ஐ.நா எந்த மூலைக்கு?

இல.கண்ணன், நங்க வள்ளி, சேலம் மாவட்டம்.

‘அனைவரும் எளிமையாக வாழ்ந்தால் ஊழலை ஒழிக்கலாம்’ என்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பேசியிருக் கிறாரே?

நூற்றுக்கு நூறு உண்மை. அதற்கு முன்மாதிரியாக இவர் போன்ற பெரும் பதவியில் இருப்பவர்கள் எல்லோரும் ‘இறங்கிவந்து’ வாழ்ந்து காட்டவேண்டும். தனியொரு நபருக்காக ‘கவர்னர் மாளிகை’ என்ற பெயரில் 156 ஏக்கர் நிலத்தை வளைத்து வெள்ளைக் காரர்கள் கட்டிவைத்த பங்களாவில்தான் இவரும் வாசம்செய்கிறார். நீலகிரி மலைமீது வேறு கூடுதலாக ஒரு கவர்னர் மாளிகை இருக்கிறது. இவர், ஓராண்டில் ஒரு தடவை அங்கு சென்றாலே அதிசயம். அப்படிப்பட்ட பங்களா வுக்கும் கோடிக்கணக்கில் கொட்டி, இழைத்து இழைத்துப் பராமரிக் கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் பிறருக்கு எளிமையா பிறக்கும்?

‘மீஞ்சூர்’ கோதை ஜெயராமன், சென்னை.

பொதுமக்களுக்கு இடையூறாக நடைபாதையை ஆக்கிரமித்து கடைகளை வைத்துள்ளோர்மீது மாநகராட்சி உதவி செயற்பொறியாளர், மண்டல அதிகாரி, புகார் தொலைபேசி எண்: 1913, அம்மா கைபேசி எண்: 1100 எனப் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லையே?

‘பங்காளி’களிடமே புகார் செய்துவிட்டு நடவடிக்கையை எதிர்பார்ப்பது, கொஞ்சமும் சரியில்லை ஜெயராமன்.

கே.மாதேஸ்வரன், தர்மபுரி.

இப்போதைய சூழ்நிலையில் ஜனநாயகம் ஆரோக்கியமாக இருக்கிறதா?

இருந்தால் நன்றாக இருக்கும்.

@ந.அய்யப்பசாமி தேவாரம்.

‘சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம்’ என்ற அரிய கண்டுபிடிப்புக்காகவா டாக்டர் பட்டம் கழுகாரே?

ச்சேச்சே... அதற்கு நோபல் பரிசேகூட தரலாம்! ‘வேலூர்’காரர் தந்திருக்கும் இந்தப் பட்டம், வேறு ஏதாவது காரணத்துக்காக இருக்கும்.

எஸ்.ராமதாஸ், சேலம்-30.

இப்போது நிலவிவரும் இந்திய அரசியல் சூழலில் சீமான், கமல் போன்றோரால் ஒரு கவுன்சிலராகவாவது ஆக முடியுமா?

யாரென்றே தெரியாமல் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், திடீரென விஸ்வரூபம் எடுத்து டெல்லி மாநில ஆட்சியையே பிடிப்பார் என யாராவது கணித்தோமா?

வி.ஹரிகிருஷ்ணன், திருக்கழுக்குன்றம், காஞ்சிபுரம் மாவட்டம்.

முரசொலி அலுவலக நிலம் பற்றியப் பிரச்னையில் மு.க.ஸ்டாலினும் டாக்டர் ராமதாஸும் கடுமையாக மோதிக்கொள்கிறார்களே?

‘அது, அறிவாலயமாக இருந்தாலும் பஞ்சமி நிலம் மீட்கப்பட வேண்டும்’ என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனையும் சீறவைத்த வகையில் டாக்டருக்கு வெற்றியே!

பி.சூடாமணி, ஸ்ரீரங்கம், திருச்சி.கழுகார் பார்வையில் ஜம்மு-காஷ்மீரின் இன்றைய நிலை என்ன?

இரும்புத்திரை!

மு.மதிவாணன், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம்.

ராஜீவ் கொலை பற்றி இஷ்டம்போல் பேசிவிட்டு, ‘ஒன்றுமில்லாத என்னை, பெரிய ஆளாக்கிவருகின்றனர் காங்கிரஸார்’ என்று இப்போது சொல்கிறாரே சீமான்?

பாவம், அவரே சொல்கிறார். விட்டுத்தள்ள வேண்டியதுதானே!

@பொன்விழி, அன்னூர்.

கழுகார், யாருடைய ‘வெறித்தனத்தை’ப் பார்த்து வியந்துள்ளீர்கள்?

நாடி, நரம்பெங்கும் ‘ஏன்... ஏன்... ஏன்?’ என்பதையே நிரப்பிவைத்திருக்கும் உங்களைப் போன்ற வாசகர்களின் `வெறித்தன’த்தைப் பார்த்துதான்.

செ.அ.ஷாதலி, கோனுழாம்பள்ளம்.

தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் பலவீனம் அடைந்து கொண்டிருக்கின்றனவா?

பலவீனப்படுத்தும் முயற்சியை கையில் எடுத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!