@அன்பு, சென்னை.

`தேவைப்பட்டால் தமிழக நலனுக்காக இணைந்து பணியாற்றுவோம்’ என்று சொல்லி,ஜூ.வி அட்டைப்படக் கட்டுரையை உண்மையாக்கியிருக்கிறார்களே ரஜினியும் கமலும்?

இளமை ஊஞ்சலாடுகிறது!

அ.யாழினி பர்வதம், சென்னை-78.

இ.பி.எஸ், ஓ.பி.எஸ் இருவரின் அயல்நாட்டுப் பயணங்களில் என்ன வித்தியாசம்?

அது பயங்கர சிரிப்பா இருக்கும்; இது சிரிப்பா பயங்கரமா இருக்கும்!

சுவாமி சுப்பிரமணியா, குனியமுத்தூர், கோயம்புத்தூர்.

‘சரித்திரத் தவறுகளை நீதிமன்றங்கள் சரிசெய்துவிட முடியாது’ என்கிறதே உச்ச நீதிமன்றம்?

ஆனால், சரித்திரம் படைக்க முடியும்.

தாமஸ் மனோகரன், உழவர்கரை, புதுச்சேரி-10.

‘அயோத்தி தீர்ப்பு முழு நிறைவைத் தந்துள்ளது’ என்கிறாரே எல்.கே.அத்வானி?

‘பாபர் மசூதியை இடித்தது சட்டவிரோதம்’ என்றும் அதே தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. அதையும் ஏற்றுக்கொள்கிறார் என்றுதான் அர்த்தம். விசாரணை நீதிமன்றத்தில் மேற்கொண்டு வாய்தா வாங்காமல், செய்த தவறுக்கான தண்டனையை அனுபவிக்க அத்வானி உள்ளிட்டவர்கள் தாமாகவே முன்வரவேண்டும்.

@எல்.ஆர்.சுந்தரராஜன், மடிப்பாக்கம்.

‘தகிடுதத்தம் செய்தாவது உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற வேண்டும்’ என்கிறாரே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. ஜனநாயக விரோதமான இந்தச் செயலுக்காக அரசியல் சாசனப்படி அவர்மீது நடவடிக்கை எடுக்க முடியாதா?

அதுவே அவர்களின் ‘கட்டளை’; அவர்களின் ‘கட்டளை’யே ‘அரசியல் சாசனம்!’

‘கோடந்தூர்’ எம்.ஜி.ஆர் மனோகரன், சின்னதாராபுரம், கரூர் மாவட்டம்.

அரசியல் ஒரு சாக்கடை என்கிறார்களே... ஏன்?

வாயைத் திறந்தாலே கெட்ட வாடைதானே வீசுகிறது.

மு.மதிவாணன், செங்கல்பட்டு.

ஒருவரை போலீஸ் காவலுக்கு அனுப்பியபோது, ‘அவர் கழிவறையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று இன்ஸ்பெக்டரிடம் செங்கல்பட்டு நீதிபதி காயத்ரிதேவி கூறியிருக்கிறாரே?

‘லத்தி’யடி!

பி.மணி, குப்பம், ஆந்திரா மாநிலம்.

பாவம் செய்பவர்களுக்குக் கிடைக்கும் சன்மானம் என்ன கழுகாரே?

‘பாவத்தின் சம்பளம் மரணம்’ என்று சொல்லி உங்களை ஏமாற்ற விரும்பவில்லை.

@சு.சேகர், ஆலப்பாக்கம், சென்னை-116.

சொத்துகளுக்கு ஆசைப்பட்ட தாய், தான் பெற்ற மகன் உயிரோடு இருக்கும்போதே ‘இறப்புச் சான்றிதழ்’ பெற்றுள்ளாரே. நம் சமூகம் எங்கே சென்றுகொண்டிருக்கிறது?

‘தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறே!’ இவராவது இறப்புச் சான்றிதழ்தான் பெற்றுள்ளார். அம்மாவைக் கொன்ற மகன், அண்ணன்-அண்ணியைக் கொன்று புதைத்த தங்கை, அண்ணனை உயிரோடு புதைத்த தம்பி... கடந்த ஓரிரு மாதங்களில் சொத்துகளுக்காக இப்படி ஏகப்பட்ட நிஜ நிகழ்வுகளை தமிழகம் பார்க்கத்தானே செய்தது.

‘ஆறடி நிலம்கூட சொந்தமில்லை’ என்று தெரிந்த பிறகும், ஆஸ்திகளுக்காக அலைகிறதே மனம்... என்ன செய்ய?

@ஆர்.ஹரிகோபி, புதுடெல்லி- 75.

‘தமிழக அரசியல் தலைவர்கள், ஈழத்தமிழர்கள்மீது அக்கறையிருப்பதுபோல் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்’ என்று ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே கோபப்படுகிறாரே?

ஒரு ‘முதலை’யே இதைச் சொல்வதுதான் பயமாக இருக்கிறது.

@வி.சக்திவேல், திண்டுக்கல்-2.

‘உள்ளாட்சித் தேர்தல் தேதி ஒரு வாரத்தில் வெளியாகும்’ என செய்திகள் வருகின்றனவே, தேதி வெளியாகுமா?

உங்களிடம் வந்து யாராவது சொன்னார்களா? உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று படியேறி மாறி மாறி இப்படிச் சொல்லிக்கொண்டிருக்கிறது தமிழக அரசு. வானளாவிய அதிகாரம் படைத்த அந்த மன்றங்களே அதையெல்லாம் கேட்டுக்கொண்டு, அடுத்தடுத்து உத்தரவுகளைப் போட்டுவிட்டுக் காத்திருக்கும் போது உங்களுக்கென்ன அவசரம்?

@நா. ஸ்ரீராம்பிரசாத், சீர்காழி.

கோத்தபய ராஜபக்சே புதிய அதிபராக ஆகியிருப்பதால் இலங்கைத் தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?

உலகம் முழுக்கவே இப்படிப்பட்ட முதலாளித்துவ சர்வாதிகாரிகளின் கைகளுக்கு நாடுகள் கைமாறிக் கொண்டிருக்கின்றன. ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுக்க இருக்கும் ஈ, எறும்பு முதற்கொண்டு அனைத்து உயிர்களுக்குமே ஆபத்துதான்.

@டி.ஜே.தனபாலன், நஞ்சுண்டாபுரம்.

கத்துக்குட்டி வங்கதேசத்திடம் இந்திய கிரிக்கெட் அணி தோல்வியைத் தழுவியது பற்றி?

கத்துக்குட்டியா, அவர்களும் ‘கலக்கல் குட்டி’களாக மாற ஆரம்பித்து நாள்களாகின்றன. கடந்த ஜூன் மாதம் நடந்த உலகக்கோப்பைப் போட்டியில், பலமான தென்னாப்பிரிக்காவையே ஊதித்தள்ளி அதிர்ச்சி கொடுத்தவர்கள் அவர்கள்.

@தி.மதிராஜா, சின்னபுங்கனேரி.

‘ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் அச்சிடப்படும்’ என்று பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது?

ஊருக்கு உபதேசம்!

@லலிதா கணபதி, மடிப்பாக்கம்.

சிவசேனாவின் சீற்றம் தார்மிகமானதா?

சுயநலமானது. பல ஆண்டுகளுக்கு முன்பே இந்துத்வாவை கையில் எடுத்து, மகாராஷ்டிரம் முழுக்க சிவசேனாவை வளர்த்தெடுத்தவர் பால் தாக்கரே. `பலனை அறுவடை செய்வது மட்டும் பா.ஜ.க-வா’ என்கிற கொந்தளிப்பு இருக்கத்தானே செய்யும். அவர்களுக்கும் பல்லக்கில் ஏற ஆசை இருக்குமல்லவா!

@சரவணகுமார் சின்னசாமி, தாராபுரம்.

உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற எல்லா இடங்களிலும் கூட அவர்கள் போட்டியிட முடியும். இது ஆண்களுக்கு அநீதி இழைக்கும் செயல்தானே?

காலம்காலமாக பெண்களுக்கு இழைத்த அநீதிகளுக்கு, இப்போதுதான் ஆண்களின் ‘முதலுதவி சிகிச்சை’யே ஆரம்பமாகியுள்ளது. இன்னும் ஆபரேஷன் வரை ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. என்னென்ன அநீதிகளை ஆண்வர்க்கம் இழைத்தது/இழைத்துக் கொண்டிருக்கிறது என்பதையெல்லாம் தேடித் தெரிந்துகொண்டால், இப்படியெல்லாம் குமுற மாட்டீர்கள். பெண் விடுதலைக்காகப் போராடி, இத்தகைய வாய்ப்புகள் உருவாகக் காரணமானவர் களைக் கொண்டாட ஆரம்பித்துவிடுவீர்கள்.

@உஷாதேவி, சென்னை-24.

எல்லா டி.வி சேனல்களிலும் படிப்படியாக இந்தியில் விளம்பரங்கள் ஒளிபரப்பாவதைக் கவனித்தீரா?

உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால், அந்தச் சேனலையே மூடிவையுங்கள். ‘எரியுறத இழுத்தா... கொதிக்கிறது அடங்கிடும்’ என்பார்கள். அதை டி.ஆர்.பி சொல்லிவிடும்.

@டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

அயோத்தி தீர்ப்புக்கு எதிராக சீராய்வுமனு தாக்கல் செய்யப்போகிறார்களாமே?

சட்டத்தின்மீது நம்பிக்கைவைக்கிறார்கள்.

@ஜி ராமலிங்கம், கொரட்டூர், சென்னை-80.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும், ‘சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தரமாட்டோம்’ என்று கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியிருப்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா?

சட்டம் ஒரு விளையாட்டு என்பதை மாறி மாறி நிரூபிக்கிறார்கள். நம் நீதிமன்றங்கள் தரும் தீர்ப்புகளில் இருக்கும் ‘வார்த்தை விளையாட்டு’ இந்த அரசியல்வாதிகளுக்கு மிகமிக வசதியாக இருக்கிறது. ‘ஏழு பேர்கொண்ட பெஞ்சுக்கு வழக்கு மாற்றப்பட்டுவிட்டதால், முந்தைய தீர்ப்புக்குத் தடை’ என்று சில சட்டப்புலிகள் உறுமுகின்றன. இத்தனைக்கும் ‘சபரிமலைக்குப் பெண்கள் செல்லத் தடையில்லை என்று வழங்கப்பட்ட முந்தைய தீர்ப்பு அப்படியேதான் இருக்கிறது. அதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதி பாலி நாரிமன் அறிவுறுத்தியிருக்கிறார். ஆனாலும் ‘வாக்குவங்கி’ பயத்தால் அத்தனை கட்சிகளுமே ஆஃப் ஆகித்தான் கிடக்கின்றன.

சம்பத்குமாரி, பொன்மலை, திருச்சி.

‘பேய் இருப்பதை நிரூபித்தால் 50,000 ரூபாய் பரிசு’ என்று அறிவித்திருக்கிறாரே ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கஞ்சம் மாவட்ட ஆட்சித்தலைவர்?

அச்சச்சோ... பல பேரின் அடிமடியிலேயே கை வைக்கிறாரே! காலம்காலமாக இதைவைத்து வருவாய் பார்த்துக்கொண்டிருப்பவர்கள், அவருக்கு ஏதாவது ‘சூன்யம்’ வைத்துவிடப் போகிறார்கள், பாவம்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை- 600002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!