@கே.சங்கர், சிட்லபாக்கம், சென்னை.

சிதம்பரத்துக்குப் பிறகு? (சீர்காழி என்ற பதில் வேண்டாம்).

கொள்ளிடம்!

@‘காட்டாவூர்’ இலக்கியன், சென்னை-52.

அரசுகளின் அலட்சியத்தால் நடக்கும் கொலைகளுக்கு (பலிகளுக்கு), யாரைப் பொறுப்பாக்குவது?

கோணவாய்க்காலில் பாசனத்துக்காக நீர் திறந்து விடுவதைக்கூட தன் சாதனையாக எடப்பாடியார் விளம்பரப்படுத்திக்கொள்ளும்போது, இதற்கு மட்டும் மேகாலயா முதலமைச்சரையா பொறுப்பாக்க முடியும்?

@‘நவோதயா’ செந்தில், புதுவை-14.

தற்போதைய சூழ்நிலை... மோடிக்கு ஏறுமுகமா, இறங்குமுகமா?

இறங்குமுகமே!

@பொன்விழி, அன்னூர்.

பாரத திருநாட்டின் பல்வேறு பிரச்னைகளுக்கும் காரணம், நாடாளுமன்றக் கட்டடத்திலிருக்கும் வாஸ்து குறைபாடு என நினைக்கிறேன். எனக்கும் வாஸ்து சாஸ்திரம் தெரியும். எனக்கொரு வாய்ப்பு கிடைக்குமா அதைச் சரிசெய்ய?

முதலில் இங்கே பலருடைய ‘வாய்ஸ்’தான் பிரச்னையே! ‘வாய்ஸ் சாஸ்திரம்’ ஏதாவது இருந்தால் எடுத்துவிடுங்களேன். இல்லை என்றாலும் புதிதாக உருவாக்குங்கள். நல்ல ‘ஸ்டார்ட் அப்’ ஆகவும் இருக்கும்.

@செ.அ.ஷாதலி, கோனுழாம்பள்ளம்.

ஸ்டாலினின் அனைத்து விமர்சனங்களுக்கும் சளைக்காமல் பதில் அளித்துவிடுகிறாரே அமைச்சர் ஜெயக்குமார்?

வாயுள்ளபோதே தூற்றிக்‘கொல்!’

@சரவணகுமார் சின்னசாமி, தாராபுரம்.

பதவி ஆசைக்காட்டி இழுக்கப்படும் அனைவரையும் பி.ஜே.பி எப்படிச் சமாளிக்கிறது?

‘நரி, இடம் போனால் என்ன... வலம் போனால் என்ன, நம்மீது விழுந்து பிடுங்காமல் போனால் சரி’ என்ற நிலையிலேயே பல தலைகள் அங்கே ஐக்கியமாகிக் கொண்டிருக் கின்றன. ஆக, அவர்கள்தாம் பி.ஜே.பி-யைச் சமாளித்துக்கொண்டிருக் கிறார்கள்.

ஏ.அழகிரிராஜ், அம்மாபேட்டை, சேலம்.

‘யாரை, எங்கு உட்காரவைக்க வேண்டுமோ அங்கு உட்காரவைத்தால், எல்லாம் சரியாகி விடும்’ என்கிறாரே நடிகர் விஜய்?

ஒவ்வொரு படம் வெளியாகும் போதும், திரையரங்கு முழுக்க உட்காருபவர்கள் யோசித்தால் எல்லாம் சரியாகிவிடும்.

காந்தி, திருச்சி.

விஜய் பேச்சு, ‘பிகில்’ விளம்பரமா... சமூக அக்கறையா?

பார்த்தா சின்ன ரஜினிடா..!

ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

‘தீவிரவாதம் ஒழிப்பு தொடர்பாகக் கொடுத்த வாக்குறுதியைச் செயல்படுத்த வேண்டும்’ என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளாரே?

இதெல்லாம், ‘நான் அடிப்பதுபோல் அடிக்கிறேன்... நீ அழுவதுபோல் அழு’ என்கிற கதைதான். இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதி நிலவவேண்டும் எனப் பாடுபடுவதற்கு, ட்ரம்ப் ஒன்றும் ஔவையார் அல்ல... சர்வதேச வியாபாரி.

@பாலரவீந்தரா.

நீர் மேலாண்மை பற்றித் தெரிந்துகொள்ள, இஸ்ரேலுக்குத்தான் போக வேண்டுமா?

‘ஆழம் காண இயலாத மணற்படுக்கையில் எப்படி அடித்தளம் அமைப்பது என்கிற நுட்பத்தை இவர்களிடமிருந்துதான் (ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் கல்லணையைக் கட்டிய கரிகாற்சோழன்) நாம் தெரிந்துகொண்டோம். இந்தப் பாடத்தைப் பயன்படுத்தி ஆற்றுப் பாலங்கள், அணைக்கட்டுகள் போன்ற நீரியல் கட்டுமானங்களைக் கட்டினோம். இந்த மகத்தான சாதனைபுரிந்த அந்நாளைய மக்களுக்கு, நாம் பெரிதும் கடன்பட்டுள்ளோம்.’ - இது, ஆங்கிலேயப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் எழுதிவைத்த பதிவு.

‘மகத்தான அணை’ (Grand Anaicut) என்ற பொருளில் கல்லணைக்கு ஆங்கிலத்தில் பெயர் சூட்டிய இவர்தான், இந்தியாவில் பல்வேறு அணைகளை பிற்காலத்தில் உருவாக்கியவர்.

இப்படி ஆயிரமாயிரம் நீரியல் நுட்பங்களைக்கொண்ட தண்ணீர் தேசம்தான் தமிழகம். இதையெல்லாம் தன்னுடைய ‘நீரின்றி அமையாது நிலவளம்’ என்ற நூலில் அழகாகத் தொகுத்துள்ளார் முனைவர் பழ.கோமதிநாயகம். வெறும் 130 ரூபாய் செலவழித்து இதை வாங்கிப் படித்தாலே போதும், கோடிகளைக் கொட்டி இஸ்ரேலுக்கெல்லாம் போகத் தேவையில்லை.

@மா.இராமலிங்கம், தஞ்சாவூர்.

நெதர்லாந்து போன்று இந்தியர்களும் மிதிவண்டியைப் பயன்படுத்தினால் உடல்நல மேம்பாடு, எரிபொருள் சிக்கனம், சுற்றுச்சூழல் மாசு குறைவு என நிறைய பலன்கள் கிடைக்கும்தானே?

ஆனால், நெதர்லாந்துபோல இங்கே சாலைகள் இல்லையே! அங்கெல்லாம் மிதிவண்டிகளுக்கு என, தனிப்பாதைகளே உண்டு. இங்கே, பிளாட்பாரத்திலேயே டூ வீலர் மற்றும் கார்களைக்கூட ஏற்றி இறக்குகிறார்கள். நடந்து செல்பவர்களின் உயிருக்கே உத்தரவாதம் இல்லாத இந்தச் சாலைகளில் மிதிவண்டிகளை ஓட்டுவதை நினைக்கவே பயமாக இருக்கிறது.

பின்குறிப்பு: சென்னையில்கூட மிதிவண்டிகள் செல்வதற்காகவே தனிப்பாதைகளை உருவாக்க, சிலபல கோடிகளைக் கொட்டியது மாநகராட்சி. ஆனால், அந்தப் பாதைகள் எங்கே இருக்கின்றன என்பதை சாட்டிலைட் மூலம் தேடினால்கூட கண்டுபிடிக்கவே முடியாது என்பதுதான் நிதர்சனம்.

@‘காஞ்சி’ எஸ்.ஃபைசுதீன், காஞ்சிபுரம்-1.

‘பேனர்களை ஒழிக்க உத்தரவிட்ட முதல்வரே வருக’ என அ.தி.மு.க-வினர் வைத்த ‘பேனர்’ கழுகார் கவனத்துக்கு வந்ததா?

`முதல்வர் குறித்த பேனர் விஷயம் பற்றி ‘கழுகாரிடம்’ துணிச்சலாகக் கேள்வி கேட்கும் ‘காஞ்சித் தலைவன்’ ஃபைசுதீன் அவர்களே வருக வருக..!’ என்று வரதராஜப் பெருமாள் கோயில் அருகே ஒரு பேனர் வைத்ததை நீங்கள் பார்க்கவில்லையா?

@உஷாதேவி, சென்னை-2.

ஃபேஸ்புக் பிரியம், மனிதனின் அறிவுத்தாகத்தைத்தானே காட்டுகிறது?

அந்தத் தாகத்தோடு நிறுத்திக்கொண்டால் பரவாயில்லையே!

@வளர்மதி ஆசைத்தம்பி, விளார், தஞ்சாவூர்-6.

‘இந்தி தினத்தில் அமித் ஷா பேசியதை, தமிழகத்தில் உள்ள பிரிவினை அரசியல்வாதிகள் திரித்துக் கூறுகின்றனர்’ என்று ஹெச்.ராஜா கூறுகிறாரே?

‘இந்தி தினத்தன்று அமித் ஷா மௌனவிரதம் இருந்தார்’ என்று சொல்லியிருக்கலாமே ராஜா!

வி.அரிகிருஷ்ணன், திருக்கழுக்குன்றம், காஞ்சிபுரம் மாவட்டம்.

திருப்பூரில் விஜயகாந்துடன் மேடையேறிய பிரேமலதா, ‘இந்திய இறையாண்மைக்கு எதிராகச் செயல்படும் திராவிட முன்னேற்றக் கழகத்தை, தடை செய்ய வேண்டும்’ என்று சீறியுள்ளாரே?

தமிழக மக்களால் தூக்கிவீசப்பட்டிருக்கும் இவருடைய தே.மு.தி.க கட்சியை என்ன செய்வது என்பதையும் சேர்த்தே சொன்னால் சரியாக இருக்கும்.

எம்.டி.உமாபார்வதி, சென்னை.

‘2000 ரூபாய் நோட்டுப் புகழ்’, ‘மணல் கான்ட்ராக்டர்’, ‘ஓ.பி.எஸ்-ஸின் நண்பர்’ சேகர் ரெட்டி, திருப்பதி தேவஸ்தானம் அறங்காவலர் குழுவில் மீண்டும் இடம்பிடித்துவிட்டாரே?

பணக்கார (ஆ)சாமியாயிற்றே!

இல.கண்ணன், நங்கவள்ளி, சேலம் மாவட்டம்.

கர்நாடகம் 16 நாள்களில் திறந்த 51 டி.எம்.சி தண்ணீரில் 30 டி.எம்.சி தண்ணீர் கடலில் கலந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளதே?

கர்நாடகத்தைப் பொறுத்தவரை தமிழகம் என்பது வடிகால் மட்டுமே. முன்கூட்டியே தண்ணீரைத் திறந்திருந்தால், ஏரி, குளம் குட்டை என முடிந்த அளவுக்கு நம்மால் நிரப்பியிருக்க முடியும். ஆனால், அங்கே தேக்கிவைக்க முடியாத சூழலில் ஒரே நேரத்தில் திடீரென தண்ணீரைத் திறந்துவிட்டால், அகத்தியர்போல கமண்ட லத்திலா பிடித்து வைத்துக்கொள்ள முடியும்? கடலுக்குப் போவதைத்தானே வேடிக்கை பார்க்க முடியும்!

டி.கிருஷ்ணமூர்த்தி, விழுப்புரம்.

‘கர்நாடகத்தில் கன்னடத்துக்குத்தான் முக்கியத்துவம்’ என அந்த மாநிலத்தை ஆளும் பி.ஜே.பி முதல்வர் எடியூரப்பா சீறுகிறாரே?

அங்கே, எடியூரப்பாவை நம்பித்தான் பி.ஜே.பி-யப்பா. இங்கே, பி.ஜே.பி-யப்பாவை நம்பித்தான் எடப்பாடியப்பா!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை- 600002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!