Published:Updated:

கழுகார் பதில்கள்

இலங்கை
பிரீமியம் ஸ்டோரி
இலங்கை

இப்பதான் வந்திருக்காங்க” என்று பெரிதாக விமர்சனங்கள் வைக்க மாட்டார்கள். அதேசமயம், ஒரு அரசு ஆளும் கடைசி ஆறு மாதங்கள் மக்களுக்குத் தேனிலவுக் காலம்

கழுகார் பதில்கள்

இப்பதான் வந்திருக்காங்க” என்று பெரிதாக விமர்சனங்கள் வைக்க மாட்டார்கள். அதேசமயம், ஒரு அரசு ஆளும் கடைசி ஆறு மாதங்கள் மக்களுக்குத் தேனிலவுக் காலம்

Published:Updated:
இலங்கை
பிரீமியம் ஸ்டோரி
இலங்கை

கௌசிக், தஞ்சாவூர்.

இலங்கையில் மக்கள் கொந்தளிப்பை கவனித்தீரா... படித்த இளைஞர்களின் போராட்டத்தில், ஏதேனும் முக்கியமான விஷயத்தை கவனித்தீரா?

மக்கள் சக்தி மகத்தானது என்பதையும், ‘எதற்கும் ஓர் எல்லை உண்டு’ என்பதையுமே அவர்களின் போராட்டம் காட்டுகிறது. படித்த, புத்திகூர்மையான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபடும்போது அவர்களின் சமயோசிதம், அரசின் அடக்குமுறைக்குச் சவால்விடுகிறது. ஒரு காட்சி பார்த்தேன்... போராட்டக்காரர்கள்மீது கண்ணீர்ப் புகைக்குண்டு வீசப்படுகிறது. உடனே ஓர் இளைஞர், சாலைத் தடுப்புக்காக வைக்கப்பட்டிருக்கும் கூம்பு வடிவப் பொருளை அந்தக் குண்டுமீது வைத்து, சுற்றிலும் நீரூற்றி, செயலிழக்கச் செய்துவிடுகிறார். போலீஸார் என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கிறார்கள்!

கழுகார் பதில்கள்

பி.சேக்கிழார், கோவிலம்பாக்கம், சென்னை-117.

சசிகலா, இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் முக்கோணச் சிக்கலில் இருக்கும் அ.தி.மு.க-வின் நிலையை, இவர் பொங்கி எழுந்தால் மாற்றலாம் என்று நீங்கள் நினைப்பது யாரை?

அந்தக் கட்சியின் தொண்டர்களைத்தான்!

சசிகலா, ஓ.பி.எஸ், இ.பி.எஸ்.,
சசிகலா, ஓ.பி.எஸ், இ.பி.எஸ்.,

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

மனித வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிப்பது காதலா, அரசியலா, வங்கிகளில் லோன் வாங்குவதா?

ஒப்பீடுகள் கண்ணைக்கட்டுதே பாஸ்... மூணாவது ஆப்ஷனைப் பார்த்தா, உங்களுக்கு நெறைய ‘இன்ட்டரஸ்ட்’ இருக்கும்போலயே!

அ.கார்த்திகேயன், அம்மாபேட்டை, சேலம்.

ஒரு மாநிலத்தின் நலனுக்காக கவர்னர் தனித்தன்மையுடன் செயல்படுவது தவறா?

‘ஒரு மாநிலத்தின் நலனுக்காக’ச் செயல்பட்டால் யார் தவறென்று சொல்லப்போகிறார்கள்?!

மணிகண்டன், குன்னத்தூர்.

“எம்.ஜி.ஆர் கட்சியைவிட்டுப் போனபோதே நாங்கள் கவலைப்படவில்லை. வைகோவையே தூக்கி எறிந்தோம்... யார் வந்தாலும், யார் போனாலும் அதைப் பற்றிக் கவலையில்லை” என்று கூறியிருக்கிறாரே தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி?

வைகோவைக் கூட்டணிக்குள் வைத்துக்கொண்டே இப்படிப் பேசுவதில், தி.மு.க-வினர் கூட்டணிக் கட்சியினரை மதிக்கும் விதம் தெரிகிறது!

மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி, மதுரை.

காந்தி தாத்தா, நேரு மாமா என்ற இருவரைத் தவிர, வேறு எந்த அரசியல்வாதியையும் மக்கள் உறவுமுறை சொல்லி அழைக்கவில்லையே ஏன்?

பிறகு யாரின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை வரவில்லைபோல. ஆனால், அரசியலில் ‘டாடி... அன்னை... அம்மா... சின்னம்மா... அண்ணன்... அண்ணி... அக்கா...’ என உறவுமுறை வைத்து தொண்டர்கள் கூவிக்கொண்டுதானே இருக்கிறார்கள்!

கிடையூர் மாணிக்கம், சங்ககிரி, சேலம் மாவட்டம்.

“ஜி.எஸ்.டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலைக் கொண்டுவர தமிழ்நாடு நிதியமைச்சர் ஒப்புக்கொண்டால், அது குறித்து விவாதிக்கப்படும்” என மத்திய நிதியமைச்சர் கூறியிருக்கிறாரே?

இப்போதெல்லாம் மக்களின் அடிப்படைப் பிரச்னைகள் பேசுபொருளாகும்போது “விவாதிக்க நான் ரெடி... நீ ரெடியா..?” என்று இரு தரப்பினரும் போட்டி போட்டுக்கொண்டு விவாதமன்றத்துக்கு அழைக்கிறார்கள். மக்களுக்குத் தேவை தீர்வு. இது போன்ற ஸ்டன்ட்டுகள் அல்ல!

சண்முகசுந்தரம், கடலூர்.

அரசியலில் ‘தேனிலவுக் காலம்’ எது... ஏன்?

புதிதாக ஆட்சி அமைத்தவர்களுக்கு முதல் ஆறு மாதங்கள் தேனிலவுக் காலம். “இப்பதான் வந்திருக்காங்க” என்று பெரிதாக விமர்சனங்கள் வைக்க மாட்டார்கள். அதேசமயம், ஒரு அரசு ஆளும் கடைசி ஆறு மாதங்கள் மக்களுக்குத் தேனிலவுக் காலம். அந்தக் காலத்தில்தான் அடுத்த ஆட்சியைப் பிடிக்க, புதிய சலுகைகளும் அறிவிப்புகளுமாக மக்கள்மீதான ‘அக்கறை’ பாலாகப் பொங்கும்!

ஜெ.நெடுமாறன், ராமாபுரம், சென்னை.

சட்டமன்ற நடப்புகளில் அப்போதைய அ.தி.மு.க-வும், இப்போதைய தி.மு.க-வும் ஒரே மாதிரி என்று எந்த விஷயத்தில் சொல்வீர்கள்?

துதி பாடுவதில்!

கழுகார் பதில்கள்

பரமசிவன், கும்பகோணம்.

சமீபத்திய முன்னுதாரண நிகழ்வாக எதைச் சொல்வீர்கள்?

முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டதற்கிணங்க மக்களும், பல்வேறு நிறுவனங்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் இலங்கைக்கு நிவாரண நிதியை அனுப்பிய வண்ணம் உள்ளனர். அதன் மூலம் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட நிவாரணப் பொருள்களில் அரசு அச்சடித்திருந்த வாசகம்: ‘தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அன்புடன்!’

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism