Published:Updated:

கழுகார் பதில்கள்!

டாஸ்மாக்
பிரீமியம் ஸ்டோரி
டாஸ்மாக்

கொரோனா பரவலை ஒழிக்க அரசு காட்டும் அதே கவனத்தை, குடிநோயாளிகளின் விஷயத்திலும் காட்ட வேண்டும்.

கழுகார் பதில்கள்!

கொரோனா பரவலை ஒழிக்க அரசு காட்டும் அதே கவனத்தை, குடிநோயாளிகளின் விஷயத்திலும் காட்ட வேண்டும்.

Published:Updated:
டாஸ்மாக்
பிரீமியம் ஸ்டோரி
டாஸ்மாக்

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

வாயை மூடி, கண்களைப் பொத்தி, செவியை அடைத்து மூன்று குரங்குகள் உள்ளன. இவற்றைவைத்து இன்றைய சூழலில் பொருத்திப் பார்த்து என்ன சொல்வீர்கள்?

இந்த தேசமே திணறிக் கொண்டிருக்கும்போது மூன்றும் சேர்ந்த மாதிரி ஒருவரே இருப்பதுதான் வருத்தமளிக்கிறது!

த.சிவாஜி மூக்கையா, தர்காஸ்.

வாக்காளர் விலைபோவது... வேட்பாளர் விலைபோவது... எது ஆபத்தானது?

தீக்குளிப்பதா... விஷம் அருந்துவதா... இரண்டில் எது உயிருக்கு ஆபத்து என்பதுபோல இருக்கிறது கேள்வி.

@மாணிக்கம், திருப்பூர்.

‘கொரோனா வந்தால் எனக்குத்தானே வருகிறது... இறந்தால் நான்தானே இறக்கிறேன்... அரசாங்கம் எதற்காக லாக்டௌன் அறிவித்து என்னை வெளியே போக வேண்டாம் என்கிறது... எதற்காக என் மீது இவ்வளவு அக்கறை செலுத்துகிறது?’ என்று கொரோனா தீவிரத்தைப் புரிந்துகொள்ள மறுப்பவர்களுக்கு என்ன பதில் சொல்வது?

ஒருவரிடமிருந்து மூன்று பேர் என்று பரவ ஆரம்பிக்கும் இந்தத் தொற்றின் மூலம் கொரோனா பாதித்த ஒரு நபர் 30 நாள்களில் 406 பேருக்கு நோயைப் பரப்புவார் என்கிறது உலக சுகாதார நிறுவனம். இதை அந்த அதிபுத்திசாலிக்கு யாராவது விளக்குங்கள்!

கழுகார் பதில்கள்!
கழுகார் பதில்கள்!

பச்சையப்பன், கம்பம்.

இந்த இரண்டாம் கொரோனா அலையில் தங்களை பாதித்த காட்சி?

மரண பயம் கண்களில் தெரிய, எப்படியும் பிழைக்க வேண்டும் என்று மூச்சுக்குப் போராடியபடி மருத்துவமனை வாசலில் நிற்பவர்கள் ஒரு பக்கம்... எரியூட்டுவதற்காக வரிசையில் வைக்கப்பட்டிருக்கும் பிணங்கள் மறுபக்கம்... மகள், மகன், மனைவி, கணவன் என்று பிணங்களை அழுத கண்களோடு சுமந்து செல்பவர்கள் இன்னொரு பக்கம்... இவையெல்லாம் காட்சிகள் அல்ல; கொரோனா கொடுந்தாண்டவத்தின் சாட்சிகள்!

சிவாஜி, சென்னை-44.

வெற்றிபெற்றால், `ஜனநாயகம் வென்றது’ என்றும், தோல்வி அடைந்தால் `பணநாயகம் வென்றது’ என்றும் அரசியல்வாதிகள் கூலாகச் சொல்லி முடித்துவிடுகிறார்களே?

இவை தவிர, `வெற்றிகரமான தோல்வி’, `மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ங்கற மாதிரி டயலாக்கையெல்லாம் விட்டுட்டீங்களே. இருங்க... இந்தத் தேர்தலுக்கு புதுசா என்ன வருதுனு பார்ப்போம்!

கழுகார் பதில்கள்!

சண்முக சுந்தரம், பல்லடம்.

சமீபத்தில் உங்களையே அசரவைத்தது, யார் கேட்ட கேள்வி?

‘‘கொரோனா தடுப்பூசிச் சான்றிதழில் பிரதமரின் புகைப்படம் இருப்பதுபோல, ஆக்ஸிஜன் இல்லாமல் உயிரிழப்போரின் இறப்புச் சான்றிதழிலும் பிரதமரின் புகைப்படம் இடம்பெறுமா?’’ என்று மேற்கு வங்க எம்.பி மஹூவா மொய்த்ரா கேட்ட கேள்விதான்.

காந்தி, திருச்சி.

கழுகாரே... அடுத்த முதல்வருக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பொறுப்புணர்ந்து செயல்பட வாழ்த்துகளைச் சொல்வோம்!

@மாதவராஜ்.டி

`மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் மாதக் கடைசி ஞாயிற்றுக்கிழமை பேசுவதால் என்ன பலன் கிடைக்கும்?

மீம் க்ரியேட்டர்களுக்கு நிறைய கன்டென்ட் கிடைக்கும்!

கழுகார் பதில்கள்!

அன்புக்கரசி பாலசுப்பிரமணியன், மன்னார்குடி.

`ஆக்ஸிஜனோடு வாழ நினைப்பவர் களைவிட, ஆல்கஹாலுடன் வாழ நினைப்பவர்கள்தான் அதிகம்’ என்று ஊரடங்குக்கு முதல் நாள் டாஸ்மாக் வசூல் நிரூபித்துவிட்டதை கவனித்தீரா?

கொரோனா பரவலை ஒழிக்க அரசு காட்டும் அதே கவனத்தை, குடிநோயாளிகளின் விஷயத்திலும் காட்ட வேண்டும். கொரோ னாவைப்போலவே குடியின் தீவிரமும் அதிகமாகி வருகிறது என்பதையே இது போன்ற வசூல் புள்ளிவிவரங்கள் மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றன.

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை

தேர்தல் திருவிழாவுக்குப் பின் ஏற்பட்டுள்ள ‘அமைதியோ அமைதியை’ எப்படிப் பார்க்கிறீர்கள்?

அமைதியா... உயிர்வாழ மக்கள் திணறிக் கொண்டிருப்பதை கவனிக்கவில்லையா?

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism