Published:Updated:

கழுகார் பதில்கள்

சசிகலா, திவாகரன்
பிரீமியம் ஸ்டோரி
சசிகலா, திவாகரன்

‘ஜனநாயகம்’, ‘கருத்துரிமை’ போன்ற இன்னும் சில வார்த்தைகளையும் சேர்த்திருக்கலாம். ஏன் விட்டுவைத்தார்கள் என்று தெரியவில்லை.

கழுகார் பதில்கள்

‘ஜனநாயகம்’, ‘கருத்துரிமை’ போன்ற இன்னும் சில வார்த்தைகளையும் சேர்த்திருக்கலாம். ஏன் விட்டுவைத்தார்கள் என்று தெரியவில்லை.

Published:Updated:
சசிகலா, திவாகரன்
பிரீமியம் ஸ்டோரி
சசிகலா, திவாகரன்

டி.ஜெய்சிங், கோவை.

தனது அண்ணா திராவிடர் கழகத்தை, சசிகலா முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைத்து விழாவெல்லாம் நடத்தியிருக்கிறாரே திவாகரன்?

சீரியஸா பண்றாங்களா, சிரிப்புக்குப் பண்றாங்களான்னே தெரியலையே... அ.தி.மு.க என்பது ஆளாளுக்கு வைத்து விளையாடும் செப்பு சாமான்போலாகிவிட்டது.

டி.சி.இம்மானுவேல், மயிலாடுதுறை.

உட்கட்சி விவகாரத்தால் அ.தி.மு.க பலத்தை இழந்துவிடுமா?

“இப்ப உடனடியா ஏதும் சொல்ல முடியாது. கொஞ்ச நாள் அப்சர்வேஷன்ல வெச்சுதான் சொல்ல முடியும்” என்று மருத்துவமனையில் சொல்வார்கள் அல்லவா... அந்த நிலையில் இருக்கிறது அ.தி.மு.க.

கழுகார் பதில்கள்

பெ.வேலுமணி, நாராயணபாளையம்.

ஸ்லீப்பர் செல்களின் முழுநேர வேலை என்ன?

அசைன்மென்ட் வரும் வரை அமைதியாக அவரவர் வேலையைச் செய்துகொண்டிருப்பது.

எஸ்.கதிரேசன், பேர்ணாம்பட்டு, வேலூர்.

‘தினமும் நாளிதழ்களை வாசிக்க வேண்டும்’ என்று உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவுரை கூறியிருக்கிறாரே?

“ஏ... சூப்பர்ப்பா... நீ இந்த மாதிரி பேசி பார்த்ததே இல்லப்பா” என்கிற ‘பருத்தி வீரன்’ பட வசனம்தான் நினைவுக்கு வருகிறது!

பி.ஓம்பிரகாஷ், கொடுங்கையூர்.

மக்கள் சேவைகளில் நடைபெறும் தவறுகளின் எண்ணிக்கையைக் குறைப்பது... ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவது... இரண்டில் ஓர் ஆட்சிமுறைக்கு எது பெருமை சேர்க்கும்?

முதலாவதை ஒழுங்காகச் செய்தாலே... இரண்டாவது தானாக நடந்துவிடும்!

மு.நடராஜன், திருப்பூர்.

எடப்பாடி பழனிசாமி முன்னிலையிலேயே சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமியிடம் மோதினாரே... கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காற்றில் பறந்துவிட்டனவா?

இதைவிடப் பெரிய பெரிய விஷயங்களெல்லாம் நடந்துவிட்டன; நடந்துகொண்டிருக்கின்றன. இந்தச் ‘சின்ன விஷயத்துக்கு’ப்போய் எதற்கு ஆச்சர்யப்படுகிறீர்கள்... ஆதங்கப்படுகிறீர்கள்? ரிலாக்ஸ்!

எம்.நிர்மலா, வாணரப்பேட்டை, புதுச்சேரி.

உதவி கேட்டு வந்த பெண்ணைத் தலையில் அடித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆரின் செயல் பற்றி..?

“உறவினர்தான் அந்தப் பெண். உரிமையோடு அப்படிச் செய்துவிட்டேன்” என்று கூறியிருக்கிறார் அமைச்சர். ஆனாலும், பொதுவெளியில் ஒருவரிடம்... அதுவும், ஒரு பெண்ணிடம் அப்படி நடந்துகொள்வது தவறு. கண்டிக்கத்தக்கது.

ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

பொன்னையன் பேசியதாகச் சொல்லப்படும் ஆடியோ மெய்யோ பொய்யோ... இருக்கட்டும். அதில் பொன்னையன் கூறும் கருத்துகள் உண்மையா?

அரசியலில் ‘எதுவும் நடக்கலாம்’ என்பது மட்டுமே நிரந்தர உண்மை.

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

தே.மு.தி.க-வில் பொருளாளர் பதவிக்குப் போட்டி நிலவுகிறதாமே?

அங்கு மட்டுமா... தமிழ்நாட்டின் பெரும்பாலான கட்சிகளில், அவர்களின் உட்கட்சிப் பிரச்னைகளைச் சமாளிப்பதற்கும், கட்சிப் பொறுப்புகளையும் கட்சியையும் காப்பாற்றுவதற்குமே நேரம் சரியாக இருக்கிறது. இவர்கள் என்றைக்கு மக்கள் பிரச்னைக்காகக் குரல் கொடுக்கக் களத்துக்கு வரப்போகிறார்களோ!?

ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

ஜூலை 18-ல் மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெறவிருக்கும் நிலையில், நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகளில் `சர்வாதிகாரம், பாலியல் தொல்லை, முட்டாள்தனம், திறமையற்றவர், ஊழல்’ போன்றவையெல்லாம் சேர்க்கப்பட்டிருக்கின்றனவே?

‘ஜனநாயகம்’, ‘கருத்துரிமை’ போன்ற இன்னும் சில வார்த்தைகளையும் சேர்த்திருக்கலாம். ஏன் விட்டுவைத்தார்கள் என்று தெரியவில்லை. போகிற போக்கைப் பார்த்தால், அடுத்த கூட்டத்தொடரில் யார் யார் என்னென்ன பேச வேண்டும் என்பதையும் மொத்தமாக எழுதியே கொடுத்துவிடுவார்கள்போல.

ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி.

ஓ.பி.எஸ்-ஸுக்காக பா.ஜ.க-வின் கதவுகள் திறந்தே இருப்பதாகக் கூறுகிறாரே அண்ணாமலை?

பிராஞ்ச் ஆபீஸ்ல வேலை செஞ்சா என்ன... ஹெட் ஆபீஸ்ல வேலை செஞ்சா என்னனு சொல்றாரோ?!

கழுகார் பதில்கள்

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

“பிரதமர் மோடியைக் கண்டு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பயப்படுகிறார். அதனால்தான் அவர் மோடியை வரவேற்கச் செல்லாமல் தவிர்க்கிறார்” என்று குஷ்பு கூறியிருக்கிறாரே?

அவர் அப்படி மட்டும்தானே சொல்ல முடியும்... பயந்து தவிர்ப்பதற்கும், துணிந்து தவிர்ப்பதற்குமான வேறுபாடு குஷ்புவுக்குத் தெரியாதா என்ன?

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!