@நேக்கு, சென்னை-116.

எல்லோரின் கவனமும் அரசியலில் குவிந்திருப்பது ஆரோக்கியமான விஷயம்தானே?

ஆம். அதேசமயம் தேர்தலின்போது மட்டுமன்றி, தேர்தலுக்குப் பிறகும் ‘எனக்கு அரசியல் பிடிக்கும்’ என்று சொன்னால் அதைவிட ஆரோக்கியம்!

@வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

“நாட்டை நல்வழிப்படுத்த, முதலில் காந்தி வந்தார். பிறகு காமராஜர், கக்கன்... அந்த வழியில் இந்த கமல் வந்திருக்கிறேன்” என்ற பேச்சு..?

காந்தி, காமராஜர், கக்கன், கமல் என்று ரைமிங்குக்காக மட்டும் சொல்லாமல் அவர்களைப்போல் வாழ்ந்தும் காட்டினால் நல்லது.

ம.ராகவ்மணி, வெள்ளக்கோவில்.

கருத்துச் சுதந்திரத்தை முடக்க நினைப்பவர்களைப் பற்றி என்னவென்று நினைப்பது?

காலம் காலமாகக் குரல்வளையை நெருக்கும் கால்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. அதைத் தாண்டியும் குரல்கள் ஒலித்துக்கொண்டுதான் இருக்குமென்பது வரலாறு!

திருப்பூர். அர்ஜுனன்.ஜி, அவிநாசி.

பிரதமரை `Go Back Modi’ என்று சொன்னவர்களை `Welcome Modi’ எனச் சொல்ல வைத்துவிட்டாரே?

அதோட விளைவுகள்தான் ரெய்டுகளா மாறிச்சே... அதை கவனிக்கலையா?

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

தேர்தல் ஆணையத்தின் கடுமையான செயல்பாடு, காவல்துறையின் சோதனை, அப்படியும் ஓட்டுக்குப் பணப்பட்டுவாடா எப்படிச் சாத்தியமாகிறது?

சாமானியர்களைக் கண்டால் சோதனை என்ற பெயரில் முட்டிமோதுவதும், அதிகாரத்தில் இருப்பவர்களைக் கண்டுகொள்ளாமல் விடுவதும் வழக்கமாகிப்போன சூழலில், ஓட்டுக்குக் காசு கொடுப்பது எப்படிக் குறையும்?!

டி.ஜே.தனபாலன், நஞ்சுண்டாபுரம்.

தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூடுவதால் குடிமகன்களின் பணம் மிச்சமாகிறதா?

என்ன பாஸ் காமெடி பண்றீங்க... இன்னின்ன தேதிகள்ல லீவுனு முன்கூட்டியே அறிவிச்சுடறாங்களே!

அசோகன், கொளப்பலூர்.

சட்டசபையில் தெனாலிராமன் மாதிரி ஒருவரை நியமித்தால் கலகலப்பாக இருக்கும்தானே?

ஒருவரா... சட்டமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பல பேர் கலகலப்புக்குப் பஞ்சமில்லாமப் பார்த்துக்கிட்டாங்களே!

பிரகாஷ், டாடாபாத்.

மக்கள், அரசியல்வாதிகளை நோக்கிக் கேட்கும் கேள்விகள் தேர்தலின்போது மட்டும்தான் பயனளிக்கின்றனவா?

பார்த்தாத்தானே பாஸ் கேள்வி கேட்க முடியும்? தேர்தலின்போது மட்டும்தானே அவங்களையெல்லாம் பார்க்க முடியுது!

அர்ஜுன், திருப்பூர்.

நாட்டில் ஜனங்க கையில் பணப்புழக்கம் குறைஞ்சுடுச்சுன்னு சொல்றாங்களே உண்மையா கழுகாரே?

இதுல என்னைக் கேட்கறதுல என்ன இருக்குது... உங்க நிலைமையைவெச்சே கணக்கு போட்டுக்கோங்களேன்!

இல.கண்ணன், நங்கவள்ளி.

“எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், ஒரு குறையும் இல்லை!” என்று அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பது பற்றி..?

அப்ப கவர்னர்கிட்ட கொடுத்த 24 ஊழல் பட்டியல் அடங்கிய 206 பக்கங்கள் வெறும் வெள்ளை பேப்பரா?

ராமகிருஷ்ணன், மடத்துக்குளம்.

கழுகார் படித்துக் கொண்டிருக்கும் புத்தகம்?

தாவோயிசத்தின் அடித்தளமாக ‘தாவோ தே ஜிங்’ 2,400 ஆண்டுகளுக்கு முன்பு சீனமொழியில் எழுதப்பட்ட நூல். பைபிளுக்கு அடுத்த படியாக அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட வாழ்வியல் நூல் இது. தாவோ தே ஜிங் நூல் எழுதப்பட்டது குறித்து ஒரு குறிப்பு உண்டு...

சீன அரசு ஒன்றின் நீதிமன்றத்தில் ஆவணக் காப்பாளராகப் பணியாற்றியவர் லாவோட்சு. அரசின் சீர்கேடுகள் மற்றும் ஊழல்கள் மலிந்த சூழ்நிலையால் மனமுடைந்த லாவோட்சு, தனது நாட்டைவிட்டு வெளியேற முனைந்தார். அவர் நாட்டின் எல்லையை அடைந்தபோது, அங்கு காவல்பணியில் இருந்த காவலர் ஒருவர் லாவோட்சுவை அடையாளம் கண்டுகொண்டார். அவரது ஞானத்தை நாட்டு மக்களுக்கு விட்டுச் செல்லுமாறு அவரிடம் கேட்டுக்கொண்டார். அதன் காரணமாக அவர் எழுதிய 81 பாடல்களின் தொகுப்பே தாவோ தே ஜிங். இந்தக் குறிப்பைப் படிக்கும்போது இரண்டு விஷயங்கள் தோன்றின. 2,400 வருடங்களுக்கு முன்பும் ஊழல், சீர்கேடுகள் இருந்திருக்கின்றன. அன்றைக்கும் அதற்கு எதிர்வினை செய்ய ஓர் அறம் பேணும் மனிதர் இருந்திருக்கிறார்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!