Published:Updated:

கழுகார் பதில்கள்

அன்புமணி
பிரீமியம் ஸ்டோரி
அன்புமணி

காதால் கேட்கும், கண்ணால் பார்க்கும் அனைத்தையும் நம்புகிற உணர்ச்சிவசமானவர்கள் இன்று அதிகரித்துவிட்டார்கள்

கழுகார் பதில்கள்

காதால் கேட்கும், கண்ணால் பார்க்கும் அனைத்தையும் நம்புகிற உணர்ச்சிவசமானவர்கள் இன்று அதிகரித்துவிட்டார்கள்

Published:Updated:
அன்புமணி
பிரீமியம் ஸ்டோரி
அன்புமணி

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

பா.ம.க தலைவராக அன்புமணி நியமிக்கப்பட்டு, தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க வியூகங்கள் வகுக்கப்பட்டுவருவதாகச் செய்திகள் வெளிவருகின்றனவே?

கண்ணாடியைத் திருப்பினால்... ஆட்டோ எப்படி ஸ்டார்ட் ஆகும்?

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

மனஅழுத்தம் போக, யோகா செய்யலாமா... அரசியல்வாதிகளின் அறிக்கைகளை அசைபோடலாமா?

யோகா செஞ்சுக்கிட்டே... அறிக்கைகளை அசைபோடுங்களேன்!

கழுகார் பதில்கள்

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர், தேனி.

“90% தமிழக அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. விமானம் ஏறத் தெரியாது. டெல்லி சென்று தமிழ்நாட்டுக்கு ஒரு பைசா நிதி பெற்று வர முடியாது” என்கிறாரே அண்ணாமலை?

‘தமிழ்நாட்டு அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரிந்தால்தான் மத்திய அரசு நிதி தருமா?’ என்று நாராயணபாளையம், பெ.வேலுமணி என்ற வாசகர் கேள்வி கேட்டிருந்தார். அவரது கேள்விதான் உங்களுக்கான பதில்!

மல்லிகா அன்பழகன், சென்னை-78.

அ.தி.மு.க-வும் சிந்தனை அமர்வு நடத்துமா?

சிந்தனை அமர்வு நடத்தலாமா என்பது குறித்துச் சிந்திக்கலாம்!

த.சிவாஜி மூக்கையா, தர்காஸ்.

ஒரு தரவும் இல்லாமல் உளறுபவர்கள் பின்னால்கூட, லட்சக்கணக்கான மக்கள் திரள்வதன் ரகசியம் என்ன?

இதில் ரகசியமெல்லாம் ஒன்றும் இல்லை. பலருக்கும் வாசிப்பும் உரையாடலும் குறைந்துவிட்டன. ஒரு விஷயத்தை வாசித்து, அந்தக் கருத்து சரியா என்று விவாதித்து, அதன் மூலம் மேலும் சில புத்தகங்களை வாசித்துத் தெளிவு பெறும் இளைஞர்கள் குறைந்துவிட்டனர். காதால் கேட்கும், கண்ணால் பார்க்கும் அனைத்தையும் நம்புகிற உணர்ச்சிவசமானவர்கள் இன்று அதிகரித்துவிட்டார்கள். இதற்குத்தான், வள்ளுவன் 2,000 ஆண்டுகளுக்கு முன்னாலேயே சொல்லிவைத்தான்: எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் / மெய்ப்பொருள் காண்ப தறிவு.

இரா.அருண்குமார், வாணரப்பேட்டை, புதுச்சேரி.

“தேர்தல் வாக்குறுதியைத் தயாரித்தது டி.ஆர்.பாலுதான். எனவே, எதாவது விட்டுப்போயிருந்தால் அது குறித்து டி.ஆர்.பாலுவிடம்தான் கேட்க வேண்டும். ஸ்டாலினிடம் கேட்கக் கூடாது” என்று ஆர்.எஸ்.பாரதி பேசியிருப்பது பற்றி..?

அதைத் தட்டச்சு செய்தவர், மெய்ப்பு பார்த்தவர், பிரின்ட் எடுத்து ஸ்டாலினிடம் கொடுத்தவரையெல்லாம் விட்டுவிட்டாரே!

பா.திருக்காமேஷ்வரன், குயவர்பாளையம், புதுச்சேரி.

யார் முயன்றால் இந்தியாவை வளநாடாக மாற்றலாம்?

மக்கள்!

கழுகார் பதில்கள்

எம்.நிர்மலா, வாணரப்பேட்டை, புதுச்சேரி

“நான் வெண்ணையில் கோடு போட்டு மகிழ்பவன் அல்ல, கற்களில் கோடு போடுபவன்!” என்று பிரதமர் மோடி பேசியிருப்பது பற்றி..?

வெண்ணையில் கோடு போடுவது, கல்லில் கோடு போடுவதெல்லாம் இருக்கட்டும். எதுக்கு இப்போ கோடு போடணும்?

கழுகார் பதில்கள்

பி.சிவகுமார், கோவை.

காங்கிரஸின் மூத்த தலைவர் கபில் சிபல், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, சமாஜ்வாடியில் இணைந்துவிட்டாரே?

‘வேறு கட்சிக்குப் போவதென்றால், முன்னமே இந்த முடிவை எடுத்திருக்கலாமே’ என்கிறார்கள் காங்கிரஸ் உணர்வாளர்கள். ‘இங்கேயே இருந்து, கட்சியின் கோஷ்டிகளைச் சரிசெய்வதுதானே ஒரு மூத்த தலைவருக்கு அழகு’ என்கிறார்கள் அரசியல் பார்வை யாளர்கள். எது எப்படியோ... காங்கிரஸ் தன் மூத்த தலைவர்களிடம் பேசி, கட்சியைச் சீர்செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பது மட்டும் உண்மை!

ஸ்ரீகாந்த் ரமேஷ், விருதுநகர்.

பெரிய பணக்காரர்களெல்லாம் விளம்பரம், எக்கச்சக்க முதலீடு என்று தங்கள் நிறுவனங்களை வளர்த்துக்கொண்டிருக்க, என்னைப் போன்ற சின்னக் கடை வைத்திருப்பவர்களுக்கு, கழுகார் என்ன சொல்கிறார்?

நம்பிக்கைகொள்ளுங்கள்!

‘நுபுநாஹா’ என்றொரு ஜப்பான் வீரர் இருந்தார். சிறிய படையைக் கொண்டு, பெரிய படைகளை எதிர்கொள்வதில் பெயர்பெற்றிருந்தார். ஒருமுறை, அவரின் படை, அதுவரை காணாத அளவுக்குப் பெரிய படைவீரர்களுடன் மோதி ஒரு நாட்டைக் கடக்கவேண்டிய கட்டாயம். தளபதி உள்ளிட்ட சில வீரர்கள் பின்வாங்கிவிடலாம் என்று கூறினார்கள். நுபுநாஹா, அவர்களை புத்தவிஹார் ஒன்றுக்கு அழைத்துச் சென்று ‘தலை விழுந்தால் நாம் வெல்வோம். போரிடலாம். பூ விழுந்தால் திரும்பிப் போகலாம்” என்றபடி தங்க நாணயம் ஒன்றைச் சுண்டினார். தலை விழவே, முழு நம்பிக்கையோடு போர் புரிந்து வென்றனர். வென்ற பிறகு நுபுநாஹா தன்னிடமிருந்த தங்க நாணயத்தை வீரர்களிடம் காட்டினார். இருபுறமும் தலை இருந்தது. “உங்களிடம் இல்லாமல் இருந்தது நம்பிக்கை என்ற ஒன்றுதான். அந்த நம்பிக்கையை வரவைக்கவே இதைச் செய்தேன்” என்றார் நுபுநாஹா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism