Published:Updated:

கழுகார் பதில்கள்

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

எதிர்க்கட்சியின் கருத்துகளுக்கு மறுமொழி அளிப்பது உங்களுக்கோ உங்கள் அரசுக்கோ வழக்கமில்லை

கழுகார் பதில்கள்

எதிர்க்கட்சியின் கருத்துகளுக்கு மறுமொழி அளிப்பது உங்களுக்கோ உங்கள் அரசுக்கோ வழக்கமில்லை

Published:Updated:
ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

குணசேகரன், தென்காசி.

அரசியல் உளறல்கள் கம்மி ஆகிவிட்டதுதானே... இப்போது `உளறல் நாயகன்’ பட்டத்தை என்ன செய்வீர்கள்?

தமிழ்நாட்டில் இல்லைதான். ஆனால்,

``தத்துவார்த்தரீதியாக கொரோனா தொற்று கிருமி ஓர் உயிர். நம்மைப் போன்று அதற்கும் உயிர்வாழ உரிமை உண்டு” என்று சொன்ன பா.ஜ.க-வைச் சேர்ந்த உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்.... “எனக்கு கொரோனா தொற்று வரவில்லை. நான் தினமும் கோமியம் குடித்ததுதான் அதற்குக் காரணம்” என்று சொன்ன பா.ஜ.க எம்பி பிரக்யா சிங் தாகூர்...

இரண்டு பேருக்கும் ஆளுக்குப் பாதியாக அந்தப் பட்டத்தைப் பிரித்துக் கொடுத்துவிட வேண்டியதுதான்!

கழுகார் பதில்கள்

சீனிவாசன், கண்டனூர், சிவகங்கை (மா).

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் `ஓப்பனிங்’ சொல்வதென்ன?


பதவியேற்பின்போதே தன் தந்தைக்கும் தாத்தாவுக்கும் பெருமை சேர்த்தவர், வார் ரூம் நள்ளிரவு விசிட், புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு, கொரோனா ஆலோசனைக் குழுவில் அ.தி.மு.க-வின் விஜயபாஸ்கர் சேர்ப்பு என்று டி-20 போல அடித்து ஆடிக்கொண்டிருக்கிறார்!

கழுகார் பதில்கள்

அர்ஜுனன், பொள்ளாச்சி.

‘ஊமைக்குத்து’க்கு சமீபத்திய உதாரணம்?


சோனியா தலைமையில், எதிர்க்கட்சித் தலைவர்களெல்லாம் சேர்ந்து மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்கள். கொரோனாவுக்காக மத்திய அரசு அவசரகதியில் செய்ய வேண்டிய சிலவற்றை பட்டியலிட்ட அந்தக் கடிதத்தின் இறுதியில் ஒரு வரியில் “எதிர்க்கட்சியின் கருத்துகளுக்கு மறுமொழி அளிப்பது உங்களுக்கோ உங்கள் அரசுக்கோ வழக்கமில்லை. இருந்தாலும், நம் நாட்டின் நாட்டு மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு இதற்கு பதிலளித்தால் பாராட்டுக்குரிய வர்களாவீர்கள்” என்று ஊமைக்குத்து குத்தியிருக்கிறார்கள்.

எம்.கல்யாணசுந்தரம், கணபதி புதூர், கோவை.

“2021 தேர்தல் முக்கியமில்லை. 2026-ல் ஆட்சியைப் பிடிப்பதே இலக்கு’’ என்கிறதே தமிழக பா.ஜ.க?


அதற்கு முன்னால 2024 நாடாளுமன்றத் தேர்தல் அவங்க இலக்கில்லைபோல!

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர்.

‘அப்பாவு..?’


சென்றமுறை தான் பேரவையில் நுழைய முடியாமல் நீதிமன்றப் படியேறிக் கொண்டிருந்தவரை, இந்தமுறை பேரவைத் தலைவராகப் பணித்திருக்கிறது காலம்.

@புவனேஷ்

குஜராத்தில் நடக்கும் சாணிக் குளியல்?


தடுப்பூசியெல்லாம் ஏற்றுமதி செய்யறதை விட்டுட்டு, இந்த மாதிரி சாணிக் குளியல் மாடலை வெளிநாடுகளுக்கு அறிமுகப்படுத்தியிருந்தாங்கன்னா நம்ம நாட்டுல தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு இருந்திருக்காது!

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

காங்கிரஸில் உள்ளவர்களுக்கு ஏதாவது மந்திரி பதவி கொடுத்திருக்கலாம் அல்லவா?


ம்க்கும்... அவங்க சட்டமன்றக் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கறதுக்கே மீட்டிங் மீட்டிங்கா போட்டு இழுத்துட்டிருக்காங்க. இதுல மந்திரி பதவின்னு வேற சொன்னா சட்டை கிழியும் போங்க!

கல்யாணசுந்தரம், கோயம்புத்தூர்.

தேர்தல் முடிந்ததும் தங்களின் வெற்றி தோல்விகளை ஆராயும் அரசியல் கட்சிகள், காரணத்தைக் கண்டுபிடித்து குறைகளைச் சரிசெய்கிறார்களா...?


அடுத்த அஞ்சு வருஷத்துல அந்தக் குறையெல்லாம் நீங்க மறந்துடுவீங்கன்ற நம்பிக்கையில, அதைச் சரிசெய்யற வெட்டி வேலை எதுக்கு நமக்குன்னு விட்டுடறாங்க பாஸ்!

கழுகார் பதில்கள்

ம.ராகவ்ரம்யா, வெள்ளக்கோவில்.

புண்ணிய நதி கங்கையில் கொரோனா சடலங்கள் மிதந்துவருவது குறித்து..?


கொரோனாவால் உயிரிழந்து மிதந்துவரும் அந்தச் சடலங்களை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்து, உ.பி அரசு தன் பாவத்தைப் போக்கிக்கொள்ள வேண்டும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism