Published:Updated:

கழுகார் பதில்கள்

மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

எந்த ரோலில் நடித்தாலும் ‘என்ட்ரி’யில் வெளுத்து வாங்குவார். என்னவொன்று... க்ளைமாக்ஸில்தான் பெரும்பாலும் சொதப்பிவிடுவார்

கழுகார் பதில்கள்

எந்த ரோலில் நடித்தாலும் ‘என்ட்ரி’யில் வெளுத்து வாங்குவார். என்னவொன்று... க்ளைமாக்ஸில்தான் பெரும்பாலும் சொதப்பிவிடுவார்

Published:Updated:
மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி.

அழுத்திய பொத்தானில், சரியான சின்னத்துக்கு ஓட்டு விழுந்திருக்கும்தானே?

அதான் பக்கத்துலயே VVPAT மெஷின்ல டிஸ்ப்ளே தெரிஞ்சிருக்குமே... அதுல செக் பணணீட்டீங்கதானே?

கணபதி சின்னய்யா, டாடாபாத், கோவை.

திடீர் ஞானோதயம் என்றால் என்ன?

ஏப்ரல் 17-ம் தேதி சனிக்கிழமை, மேற்கு வங்கத்தில் நடந்த பா.ஜ.க பேரணியில் கலந்துகொண்ட மோடி “இவ்வளவு பெரிய கூட்டத்தை முதன்முறையாகப் பார்க்கிறேன்” என்று பேசிவிட்டு, அன்று மாலையே கொரோனாவுக்கான தடுப்பு நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தினாரே... அதுதான் திடீர் ஞானோதயம்!

V.பாலசுப்ரமணியன், மன்னார்குடி.

EVM-ல் பதிவான வாக்குகளில் தகிடுதத்தம் செய்ய ஆறு பேர்கொண்ட ஒரு கணினி வல்லநர்கள் டீம் செயல்பட்டுவருகிறது. ‘அவர்களின் உரையாடல் இது’ என ஒரு வாட்ஸ்அப் ஆடியோ உலவுகிறதே... என்ன நினைக்கிறீர்கள்?

நாட்ல பாதிப் பிரச்னையே இந்த வாட்ஸ்அப் வதந்தியாலதான் வருது... இன்னுமா இதையெல்லாம் நம்பிக்கிட்டிருக்கீங்க!

@டி.ஜே.தனபாலன், நஞ்சுண்டாபுரம்.

இரவு நேர ஊரடங்கு மூலம் கொரானா கட்டுக்குள் வந்துவிடுமா?

நிச்சயமாகக் குறையும். ஊரடங்கால் இரவில் நமக்குள் உருவாகும் பொறுப்புணர்வும் கவனமும் பகலிலும் தொடர வேண்டும். அதை நினைவில் கொள்ளத்தான் இந்த ஊரடங்கு. பகலோ இரவோ எப்போதும் அலட்சியம் வேண்டாமே!

கழுகார் பதில்கள்

@ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

பிரதமர் மோடியை வைத்து ஒரு படம் எடுத்தால், எந்த ரோலில் நடித்து பட்டையைக் கிளப்புவார்?

எந்த ரோலில் நடித்தாலும் ‘என்ட்ரி’யில் வெளுத்து வாங்குவார். என்னவொன்று... க்ளைமாக்ஸில்தான் பெரும்பாலும் சொதப்பிவிடுவார்!

தமிழ் அமுதன், திருப்பத்தூர்.

மன்சூர் அலிகான் பேச்சு?

இதைப் போன்றதொரு இக்கட்டான காலகட்டத்தில், மன்சூர் அலிகானைப்போலப் பிதற்றுபவர்களைப் புறம்தள்ளுவதே சிறந்தது.

@பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர்.

“தலைவர்களே... மனசாட்சியுடன் நடந்து கொள்ளுங்கள். அரசியல் லாபத்துக்காக மனசாட்சியை விற்றுவிடாதீர்கள்!” என்று பா.ம.க தலைவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்திருப்பது பற்றி?

பரவாயில்லையே... இப்பவாச்சும் டாக்டர் ராமதாஸ் சுயவிமர்சனம் செய்துகொள்ளத் தொடங்கியிருக்கிறாரே!

கண்ணு, திருநெல்வேலி.

எது ஆபத்து... கோரானா உரு மாறுதல்... அரசியல்வாதிகள் உரு மாறுதல்... மக்கள் உரு மாறுதல்?

‘மாற்றம் ஒன்றுதான் மாறாதது’ என்றார் மாவோ. எது மாறினாலும் அதற்கேற்ப நம்மையும் மாற்றிக்கொண்டால் இவற்றையெல்லாம் ஈஸியாகக் கையாளலாமே!

பழனி மாணிக்கம், ஆயக்குடி.

கொரோனா பரவலுக்கு மக்களை மட்டுமே குற்றம்சாட்டுகின்றனரே பலரும்?

தேர்தல் கூட்டங்கள் நடத்தியதும், கும்பமேளாவுக்கு அனுமதி கொடுத்துக் கூட்டம் நடத்தியதும் மக்களா என்ன?

கழுகார் பதில்கள்

ராஜசண்முகம், கிருஷ்ணகிரி.

வெற்றிக்குப் பாடுபட்டவர்களை, ஜெயித்தவர்கள் நன்றாக கவனிப்பார்கள்தானே?

ஒரு ஜென் கதை சொல்கிறேன் கேளுங்கள். நோய்வாய்ப்பட்ட குதிரை ஒன்றுக்கு வைத்தியர் ஒருவர் சிகிச்சை செய்துவந்தார். குதிரையுடன் இருக்கும் ஆடு, தினமும் குதிரையிடம் ‘உன்னால் முடியும். எழுந்து நட... ஓடு’ என்று நம்பிக்கை வார்த்தைகளைச் சொல்லிவந்தது. அந்த வார்த்தைகள் தந்த உற்சாகத்தில் குதிரையும் குணமானது. ஒரு வாரம் கழித்து வந்த வைத்தியரிடம், குதிரையின் உரிமையாளர் நன்றி சொல்லிவிட்டு “உங்களுக்கு என்ன வேண்டும்” என்று கேட்டாராம். அதற்கு வைத்தியர் சொன்னாராம். “ஒரு ஆடு வளர்க்கிறீர்கள் அல்லவா... அதை வெட்டி விருந்து கொடுங்கள்” என்று.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism