Published:Updated:

கழுகார் பதில்கள்

கொரோனாதேவி
பிரீமியம் ஸ்டோரி
News
கொரோனாதேவி

‘விருமாண்டி’ படத்துக்கு முதல்ல ஒரு பேர் வெச்சிருந்தாரே... எதிர்ப்புகூட கிளம்பிச்சே... அந்தப் பெயர் செட் ஆகும்!

கழுகார் பதில்கள்

மாணிக்கம், திருப்பூர்.

முதல்வர்களோடும் அதிகாரிகளோடும் காணொலிக் கூட்டம் நடத்தும் பிரதமர், கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய எந்தத் திட்டத்தையும் கொண்டுவந்ததாகத் தெரியவில்லையே?


காணொலிக் கூட்டத்துலதான் சிறப்பா அந்தந்த மாநில முதல்வர்களையே கொரோனா ஏற்பாடுகளைப் பார்த்துக்கச் சொல்லிட்டாரே... இதுக்கு மேல ஒரு திட்டம் வேணுமா என்ன!?

கழுகார் பதில்கள்

பாபு கிருஷ்ணராஜ், கோவை.

எங்கள் ஊரில் ஒரு மடம், கொரோனாதேவி எனப் பெயரிட்டு, யாகத்துக்கு ஏற்பாடு செய்து, விஞ்ஞானத்தோடு விளையாட்டில் இறங்கியிருப்பது பற்றி?


எல்லோரும் ஒரு வழி என்றால், உங்க ஊர்க்காரர்கள் தனிதான். என்ன செய்ய!

சே.எட்வின், மயிலாடுதுறை.

கழுகாருங்கோ ‘கோ’வாக்ஸின், ‘கோ’விஷீல்டு இதில் எந்த ‘கோ’ நல்லதுங்’கோ’?


இதில் ஏதாவது ஒரு ‘கோ’வைத் தட்டுப்பாடு இல்லாம ஏற்பாடு பண்ற ‘கோ’ இருந்தாலே போதும்.

ஓ... ‘கோ’ன்னா அரசன்ல?!
ஓ... ‘கோ’ன்னா அரசன்ல?!

சரவணகுமார் சின்னசாமி, தாராபுரம்.

கி.ராவுக்கு அரசு மரியாதை, சிலை, அவர் படித்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை அரசு சார்பில் பழைமை மாறாமல் புதுப்பித்து கி.ராவுக்காக ஓர் அரங்கம் அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் முடிவு பாராட்டுக்குரியதுதானே?

நிச்சயமாகப் பாராட்டுக்குரியது. அதேசமயம், தமிழ் மொழிக்குத் தன் வாழ்நாளை ஒப்புக்கொடுத்த பல எழுத்தாளர்கள், கலைஞர்கள் இன்னும் உரிய முறையில் கௌரவிக்கப்படாமல் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். விருதுகள் மூலம் அவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட வேண்டும். புனைவுலகின் பிதாமகன், மறைந்த புதுமைப்பித்தனுக்கு திருநெல்வேலியில் நினைவிடமும், சிலையும் அமைக்கப்பட வேண்டும் என்பது எழுத்தாளர்களின் பல நாள் கோரிக்கை. அதைப் பரிசீலிக்கலாம். நவீன இலக்கிய ஆளுமைகளின் புத்தகங்களோடு நூலகங்களில், வாசிப்பில் மறுமலர்ச்சி ஏற்படுத்துவதே எழுத்தாளர்களுக்குச் செய்யும் உண்மையான மரியாதை!

த.சிவாஜி மூக்கையா, தர்காஸ்.

கமல் கட்சியின் பலம் எது... பலவீனம் எது?


கேள்வியிலேயே பதில் இருக்கிறதே!

சரவணன், சென்னை-2.

கடந்த ஆட்சியில் சிறப்பாகப் பணியாற்றிய அமைச்சர் ஷைலஜாவை, தற்போதைய அமைச்சரவையில் சேர்க்கவில்லையே கேரள முதல்வர்?


14-ம் பக்கத்துல அதைப் படிச்சிருப்பீங்களே!

மாடக்கண்ணு, திருநெல்வேலி.

கொரோனாவிலிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு யாருக்கு உள்ளது... ஆள்பவர்களுக்கா, அரசு அதிகாரிகளுக்கா, மக்களுக்கா, கடவுளுக்கா?

இதிலென்ன சந்தேகம்... எல்லோரும் சேர்ந்து கூட்டு முயற்சியால்தான் இதை வெல்ல வேண்டும்!

குருபரன், கயத்தாறு.

கமல் இப்ப இருக்கற நிலைமைல, அவருக்கு அவரோட படத்தின் டைட்டில் ஒன்றையே டெடிகேட் பண்ணலாம்னா எதைச் சொல்வீர்கள்?


‘விருமாண்டி’ படத்துக்கு முதல்ல ஒரு பேர் வெச்சிருந்தாரே... எதிர்ப்புகூட கிளம்பிச்சே... அந்தப் பெயர் செட் ஆகும்!

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

‘`மக்களை பாதிக்கிற விஷயம் எதுவாக இருந்தாலும் அதற்கு எதிராக அ.தி.மு.க குரல் கொடுக்கும்’’ என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளாரே?

எப்படி..? இவ்ளோ நாள் சத்தமே வராம, வாயை மட்டும் அசைச்சு குரல் கொடுத்தாங்களே... அந்த மாதிரியா?

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!