Published:Updated:

கழுகார் பதில்கள்

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

சிவாஜி, டி.ராஜேந்தர், கே.பாக்யராஜையெல்லாம் பார்த்த பிறகும் விஜயகாந்த், கமல் அரசியலுக்கு வரவில்லையா என்ன!

கழுகார் பதில்கள்

சிவாஜி, டி.ராஜேந்தர், கே.பாக்யராஜையெல்லாம் பார்த்த பிறகும் விஜயகாந்த், கமல் அரசியலுக்கு வரவில்லையா என்ன!

Published:Updated:
ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

எதையும் தாங்கும் இதயம் இப்போது யாருக்கு இருக்கிறது?

வேற யாருக்கு... கொரோனா காலத்துல இவ்வளவு விஷயங்களைப் பார்த்துட்டும் மனதிடத்தோட இருக்கற மக்களாகிய நமக்குத்தான்.

சம்பத்குமாரி, பொன்மலை.

எல்லாக் கட்சிகளுமே தங்கள் நட்சத்திரப் பேச்சாளர்களை வெறும் பிரசாரக் கருவியாகவே பார்க்கின்றன. அவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவதில்லையே... ஏன்?

அ.தி.மு.க-வின் வைகைச் செல்வன், தி.மு.க-வின் கோவி செழியன், வி.சி.க-வின் ஆளூர் ஷானவாஸ், பா.ஜ.க-வின் குஷ்பு ஆகியோர் நட்சத்திரப் பேச்சாளர்கள்தானே... போட்டியிட்டார்களே! ஒருவேளை நீங்கள் வேறு சிலரை நினைத்துக் கேட்கிறீர்கள் என்றால், ‘சீட் எதிர்பார்க்காதீர்கள்!’ என்று சொல்லும் தலைமையின் குரலுக்கு இணங்கித்தான் அவர்கள் அதைச் செய்கிறார்கள்.

பெ.பச்சையப்பன், கம்பம்.

ஊரடங்கின் தனிமையில் மன அமைதிக்குப் பாட்டுக் கேட்பது, புத்தகம் வாசிப்பது, டி.வி பார்ப்பது எதைத் தேர்ந்தெடுக்கலாம்?

இதையெல்லாம் செய்து கொண்டு, குடும்பத்தோடு நேரம் செலவிட்டு இன்னும் அவர்களைப் புரிந்துகொள்ள இதை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொள்ளலாமே பச்சையப்பன்!

கழுகார் பதில்கள்

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.

எளிமையான முறையில் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டது எதைக் காட்டுகிறது?

கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தன என்பதைக் காட்டுகிறது.

மாணிக்கம், திருப்பூர்.

நடிகர்கள் ரஜினி, கமலைப் பார்த்த பிறகு, நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது சந்தேகம்தானே?

அப்படியெல்லாம் சொல்லிவிட முடியாது. சிவாஜி, டி.ராஜேந்தர், கே.பாக்யராஜையெல்லாம் பார்த்த பிறகும் விஜயகாந்த், கமல் அரசியலுக்கு வரவில்லையா என்ன!

கழுகார் பதில்கள்

இல.கண்ணன், நங்கவள்ளி.

``பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் எப்போதும் செய்துகொண்டிருக்கிறது’’ என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறுகிறாரே?

அவரு வேற என்னங்க சொல்வாரு? அப்படிச் சொல்லச் சொல்லித்தான் ஓனர்கிட்டருந்து உத்தரவு வந்திருக்கும்!

மாணிக், கோவை.

அமித் ஷா இப்போது எதைப் பற்றி யோசித்துக்கொண்டிருப்பார்... கொரோனாவைப் பற்றியா அல்லது மேற்கு வங்கத்தில் ஆட்சியைக் கைப்பற்ற ஏதாவது வழி இருக்கிறதா என்பதைப் பற்றியா?

யாரு... தேர்தல் சமயத்துல திருநெல்வேலி, கன்னியாகுமரி, சென்னை, விழுப்புரம்லாம் வந்துட்டுப் போனாரே அவருங்களா... அதுக்கப்பறம் வெளியிலேயே வராதவரு என்ன யோசிச்சுக்கிட்டிருப்பார்னு எப்டிங்க சொல்றது!

கழுகார் பதில்கள்

சீனிவாசன், கண்டனூர், சிவகங்கை (மா).

ஒருவழியாக காங்கிரஸ், தங்கள் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவரைத் தேர்ந்தெடுத்துவிட்டதே?

அப்பாடா... சட்டை கிழியாம தேர்ந்தெடுத்துட்டாங்களே... இனியாவது மக்கள் பிரச்னைகளை கவனிப்பாங்கனு நம்புவோம்!

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

‘கட்சித் தலைமையின் கட்டளையை மீறினால், கட்சி அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவதோடு, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூட்டாக அறிவித்துள்ள ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இருவரும் எம்.ஜி.ஆர் - ஜெயலலிதாவைவிட ரொம்ப ‘ஸ்ட்ரிக்ட்’தானோ?

இது ஒவ்வொரு கட்சியின் அடிப்படை விதிகள்லயே இருக்கிறதுதானே... இதுல ஸ்ட்ரிக்ட்டுக்கு என்ன இருக்கு!

அ.குணசேகரன், புவனகிரி.

தளர்வில்லா ஊரடங்குக்கு முந்தைய ஞாயிறன்று, அதிக விலையில் கொள்ளை லாபத்துக்கு விற்ற வியாபாரிகளுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

‘மனுசன மனுசன் சாப்புடுறாண்டா தம்பிப் பயலே...’ பாடலை நினைவுகூர்கிறேன்.

கழுகார் பதில்கள்

ம.ராகவ்மணி, குப்பம், ஆந்திரா.

கமலின் லட்சியப் படமான `மருதநாயகம்’ என்னவாயிற்று?

ஆனாலும் அவரு இருக்கற நிலைமையில.... எந்த நேரத்துல என்ன கேட்கறீங்க பாருங்க. ரொம்ப குசும்புதான் உங்களுக்கு!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!