Published:Updated:

கழுகார் பதில்கள்

மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

இன்னும் அகற்றவேண்டிய குப்பைகள் நிறைய இருக்கின்றன. அவற்றையும் அகற்றுவார் என்று நம்புவோம்.

கழுகார் பதில்கள்

இன்னும் அகற்றவேண்டிய குப்பைகள் நிறைய இருக்கின்றன. அவற்றையும் அகற்றுவார் என்று நம்புவோம்.

Published:Updated:
மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

V.பாலசுப்ரமணியன், காளவாய்க்கரை, மன்னார்குடி.

இரட்டை இலையில், எந்த இலைக்கு உண்மையான தொண்டர்களின் ஆதரவு?

தொண்டர்களின் கவனம் எது முக்கியமான இலை என்பதில் இல்லை. வேர் அழுகிவிடாமல் இருக்க வேண்டுமே என்கிற பதைபதைப்பில் இருக்கிறது!

கிடையூர் மாணிக்கம், சங்ககிரி, சேலம் மாவட்டம்.

அரசன், மன்னன், மந்திரிகளின் காலங்களெல்லாம் எப்போதோ ஒழிந்துவிட்டதே... இன்னும் பல பத்திரிகைகளில் அவர்களைப் பற்றிய ஜோக்ஸ் வந்துகொண்டிருக்கின்றனவே!

உடையலங்காரம்தான் மாறியிருக்கிறதே தவிர... மற்ற விஷயங்களெல்லாம் அப்படியேதானே பாஸ் இருக்கின்றன?!

கழுகார் பதில்கள்

இல.கண்ணன், நங்கவள்ளி.

டெல்லியில் புதிதாகத் திறக்கப்பட்ட சுரங்கப்பாதையில் கிடந்த குப்பைகளை பிரதமர் மோடி கைகளால் அகற்றி சுத்தம் செய்திருக்கிறாரே?

நல்ல விஷயம்தான். இன்னும் அகற்றவேண்டிய குப்பைகள் நிறைய இருக்கின்றன. அவற்றையும் அகற்றுவார் என்று நம்புவோம்.

திருப்பூர் அர்ஜுனன் ஜி, அவிநாசி

பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் தேநீர் அருந்துவதைத் தவிர்க்குமாறு பாகிஸ்தான் அரசு விநோத வேண்டுகோள் விடுத்திருக்கிறதே?

நாட்டின் பிரச்னைகளைக் கண்டுகொள்ளாமல் நமக்கென்ன என்று இருந்தால், கடைசியாக சிங்கிள் டீக்கு சிங்கியடிக்கவேண்டி வரும் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறது.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

`அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை’ என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்திருப்பது எதைக் காட்டுகிறது?

2014-ல் ‘இரண்டு கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்’ என்று இதே பிரதமர் சொன்னதை மக்கள் மறந்துவிட்டார்கள் என்பதைக் காட்டுகிறது. இன்னும் ஒன்றரை வருடங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருப்பதைக் காட்டுகிறது.

பெ.பச்சையப்பன், கம்பம்.

அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை ஏற்பட்டால் மக்களுக்கு என்ன பலன் கிடைக்கும்..?

கட்சிப் பிரச்னையில் கவனம் செலுத்துவதைக் குறைந்துவிட்டு, ஓர் எதிர்க்கட்சியாகக் கொஞ்சம் மக்கள் பிரச்னைகளைப் பேச வாய்ப்பிருக்கும்.

சக்தி, பொள்ளாச்சி.

நீதி எப்போது அநீதியாகிறது?

“வன்முறை இல்லாமல் ஒரு சமூகம் வாழக்கூடிய ஒரே வழி, அங்கு சமூகநீதியை நிலைநாட்டுவதே ஆகும். ஆனால் ஒவ்வொரு மனிதனும் தன் அண்டை வீட்டாரைவிட, தான் உயர்ந்தவன் என்று நம்பவைக்கப்பட்டிருந்தால், அவனுக்கு நீதி என்பது அநீதியாகத் தோன்றும்” என்கிறார் பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்.

கழுகார் பதில்கள்

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

மனிதன் எப்போது உஷாராக இருக்க வேண்டும்... போற்றப்படும்போதா... தூற்றப்படும்போதா?

எப்பவுமே உஷாரா இருங்களேன்... அது எப்பவும் நல்லது.

செல்வம், பாண்டிச்சேரி.

இத்தனை ஆண்டுகளாயினும் இயற்கை ஏன் கொண்டாடப்பட்டுக்கொண்டே இருக்கிறது?

இயற்கை நம்மை வியக்கவைத்துக்கொண்டே இருப்பதால்தான். “மனதுக்கு எவ்வளவு பிடித்தாலும் ஒரு மனிதனின் கலைப்படைப்பை நாம் ஏதேனும் ஒரு குறையைச் சொல்லி விமர்சித்துவிட முடியும். ஆனால், பாறையைப் பிளந்துகொண்டு முளைக்கும் ஒரு செடியை நீங்கள் எந்த விமர்சனமும் இன்றிப் பார்த்துக்கொண்டிருக்க மட்டுமே முடியும்” என்பார் ஓவியர் சந்ரு.

தே.மாதவராஜ், ராமநாதபுரம், கோயம்புத்தூர்.

மோடிதான் ‘துணை முதல்வர்’ பதவியை ஏற்குமாறு கேட்டுக்கொண்டதாகக் கூறுகிறாரே ஓ.பி.எஸ்... அப்படியானால் அ.தி.மு.க தலைமை மோடிதானே?

நீங்க ரொம்ப லேட்டு பாஸ்.

கழுகார் பதில்கள்

சரவணகுமார் சின்னசாமி, தாராபுரம்.

யோகியின் புல்டோசர் அமித் ஷாவை ஓரங்கட்டிவிடுமா?

‘மோடியையே ஓரங்கட்டிவிடும்’ என்பதுபோலச் சென்ற வார ‘போட்டோ தாக்கு’ பகுதியில் வாசகர்கள் கமென்ட் அடித்திருந்தார்களே!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism