@சுகன்யா, சென்னை.

இன்றைய அரசியலில் கலகலத்துப்போனவர், கலகலப்பாக இருப்பவர், கலாய்த்துக்கொண்டிருப்பவர்... யார், யார்?

ஆ.ராசா... சீமான்... உதயநிதி ஸ்டாலின்!

அ.ச.நாராயணன், பாளையங்கோட்டை.

ஊழல், லஞ்சம் என்ற அம்சங்களை விலக்கிவிட்டுப் பார்த்தால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வேறெந்தக் குறையும் சொல்ல முடியவில்லைதானே?

எடப்பாடி என்ன... அந்த இரண்டையும் விலக்கிவிட்டால் அரசியலில் எல்லோருமே நல்லவர்கள்தானே!

எம்.ஃபாரூக், காயல்பட்டினம்.

தேர்தல் நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள், எதிர்கட்சித் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பழிவாங்கும் படலமாகவே தெரிகிறது. இது வருமான வரித்துறைக்குக் களங்கத்தை ஏற்படுத்தாதா?

அம்புகளை யாரும் கோபித்துக்கொள்வதில்லை ஃபாரூக். ஏதோ புதிதாக நடப்பதுபோலச் சொல்கிறீர்கள்... மேலும், அவர்கள்மீது புதிதாக இனிமேல்தான் களங்கம் ஏற்படப்போகிறது என்கிறீர்களா?

சோம சுந்தரம், தஞ்சாவூர்.

ஏப்ரல் ஃபூல் செய்தி ஏதாவது?

மார்ச் 31-ம் தேதி, சேமிப்புக் கணக்கு, வருங்கால வைப்பு நிதி, சீனியர் சிட்டிசன்களுக்கான சேமிப்புக் கணக்கின் வட்டி உள்ளிட்ட பலவற்றின் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டதாகச் செய்திகள் வந்தன. என்ன ஆச்சோ... ஏப்ரல் ஒன்றாம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக அறிவித்தார். இதில் ‘ஏப்ரல் ஃபூல்’ விஷயம் என்னவென்பது புரிகிறதுதானே!

@திருப்பூர்.அர்ஜுனன்.ஜி, அவிநாசி.

பா.ஜ.க., தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் சிதம்பரத்தின் மருமகளும், கார்த்தி சிதம்பரத்தின் மனைவியுமான ஸ்ரீநிதியின் புகைப்படத்தைத் தேர்தல் விளம்பரத்துக்காகப் பயன்படுத்தியிருக்கிறதே?

‘எவ்வளவு நாள்தான் எம்.ஜி.ஆர்., காமராஜர், ஜெயலலிதா என்று மறைந்தவர்களின் படங்களையே பயன்படுத்துவது’ என நினைத்து, அடுத்தகட்டமாக உயிரோடிருக்கும் மாற்றுக்கட்சி நபர்களிடம் வந்துவிட்டார்கள்போல. பலே!

கே.கே.பாலசுப்ரமணியன், கோவைப்புதூர்.

தனது பிரசாரத்தின்போது கூட்டம் கூடாததற்கு கொரோனாதான் காரணம் என்கிறாரே பிரேமலதா?

“இன்னும் எதெதுக்குத்தான் என்னைக் காரணம் சொல்வீங்க?”னு கொரோனாவே கதறும் குரல் உங்களுக்குக் கேட்கலையா?

குணசீலன், டாடாபாத்.

`வெற்றி நடை...’, `ஸ்டாலின்தான் வாராரு...’ நீங்க அடிக்கடி கேட்பது எந்தப் பாடல்?

தஞ்சை ராமையாதாஸ் எழுதிய ‘இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே... இந்த நாட்டிலே’ பாடலைத்தான் சமீபமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறேன் குணா!

@சரவணகுமார் சின்னசாமி, தாராபுரம்.

பேரறிஞர் அண்ணா, கலைஞர் போன்று மக்களை வார்த்தைகளால் கட்டிப்போட்ட திராவிட இயக்கத் தலைவர்களின் மேடைப்பேச்சு இன்று கேள்வி-பதில் என்ற உரையாடல் நிலையை எட்டியிருப்பது ஆரோக்கியமான விஷயமா?

ஒருவர் பேசினால் மேடைப்பேச்சு. இருவர் பேசினால் உரையாடல். கம்யூனிகேஷன் எனப்படும் தொடர்பு மொழி, இருவழிப் பாதையாக இருப்பது ஆரோக்கியமானதுதான். இவையெல்லாம் கலந்ததுதானே பிரசாரம்!

@P.அசோகன், கொளப்பலூர்.

தங்களைக் கவர்ந்த தேர்தல் அறிக்கை எது?

மதுரையில் சுயேச்சை வேட்பாளர் சரவணன் அறிவித்தாரே... அனைவருக்கும் ஐபோன், வீட்டுக்கு ஒரு கார், ஒரு ஹெலிகாப்டர், நீச்சல் குள வசதியுடன் 3 மாடி வீடு, ஒரு படகு, நிலாவுக்குச் சுற்றுலா, தொகுதிக்குள் செயற்கை பனிமலை, விண்வெளி ஆராய்ச்சி மையம், ராக்கெட் ஏவுதளம், பெண்கள் திருமணத்துக்கு 100 பவுன், வீட்டு வேலைக்கு ரோபோ என்று அள்ளி வழங்கினாரே... கேக்கவே எவ்ளோ நல்லா இருக்குல்ல!

@நெல்லை குரலோன், பொட்டல்புதூர்.

கருத்துக்கணிப்புகளால் வாக்காளர்களுக்குக் குழப்பமா... குஷியா?

குழப்பமும் இல்லை, குஷியும் இல்லை. வாக்காளர்களுக்கு அது ஒரு கண்ணாடி...

@அ.சகாய அரசு, நாகர்கோவில்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ஜெயில் தண்டனை எனச் சட்டம் வந்தால் என்ன நடக்கும்?

சட்டமன்றம் காலியாகிவிடும்!

@கா.கு.இலக்கியன், செங்குன்றம்.

பணம் மட்டுமே தங்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்துவிடும் என்ற நம்பிக்கையில், வேட்பாளர்கள் தேர்தலில் நிற்பதைப் பற்றி..?

அப்படி இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டியது மக்களின் பொறுப்பு!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!