Published:Updated:

கழுகார் பதில்கள்

அமித் ஷா, மோடி
பிரீமியம் ஸ்டோரி
அமித் ஷா, மோடி

பிரியாணிக்கடை அருகே அறை எடுத்த ஒருவன் டயட் இருக்க வேண்டும் என முடிவெடுத்தான். கடை தெரியவே கூடாது என்று ஜன்னல்களை மூடிவைத்தான்.

கழுகார் பதில்கள்

பிரியாணிக்கடை அருகே அறை எடுத்த ஒருவன் டயட் இருக்க வேண்டும் என முடிவெடுத்தான். கடை தெரியவே கூடாது என்று ஜன்னல்களை மூடிவைத்தான்.

Published:Updated:
அமித் ஷா, மோடி
பிரீமியம் ஸ்டோரி
அமித் ஷா, மோடி

திருப்பூர்.அர்ஜுனன். ஜி, அவிநாசி.

“பாற்கடலில் அமிர்தத்தைக் கடைந்தபோது உருவான விஷத்தை, தன் கழுத்தில் ஏந்தினார் இந்துக் கடவுள் சிவன். அவரைப்போல, கடந்த பல ஆண்டுகளாகக் கூறப்பட்டுவந்த விமர்சனங்களுக்கு எந்த பதிலும் தராமல் மோடி அமைதி காத்தார்” என அமித் ஷா பேசியிருக்கிறாரே?

உவமைகள், உதாரணங்களெல்லாம் நன்றாகத்தான் இருக்கின்றன. ஒருவர் தனிமனித வாழ்வில், அவர்மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதில் தராமல் கடந்து சென்று, வெற்றிபெற்று தன்னை நிரூபித்தால் பாராட்டலாம். பொதுவாழ்வில், அதுவும் மக்களுக்கான அரசியலில், அதுவும் தேசத்தின் மிக உயர்ந்த பொறுப்பில் இருப்பவர் விமர்சனங்களுக்கு பதில் தராமல் அமைதி காப்பதைச் சிலாகிக்க முடியாது.

கழுகார் பதில்கள்

சக்தி, பொள்ளாச்சி.

தினமும் செல்போன் பார்க்கும் நேரத்தைக் குறைக்க, அலாரம் செட் செய்தும் குறைக்க முடிவதில்லையே... என்ன செய்யலாம்?

பிரியாணிக்கடை அருகே அறை எடுத்த ஒருவன் டயட் இருக்க வேண்டும் என முடிவெடுத்தான். கடை தெரியவே கூடாது என்று ஜன்னல்களை மூடிவைத்தான். ஆனால், பிரியாணி வண்டி வரும் நேரம், வாசனை அறைக்குள் வந்தது. வீடு முழுக்க சாம்பிராணி போட ஆரம்பித்தான். அடுத்த நாள்... வண்டி வரும் சத்தம் கேட்டதுமே இவனுக்கு பிரியாணி நினைவுக்கு வந்தது. காலையில் வண்டி வரும் நேரத்தில் சத்தமாகப் பாட்டுவைக்க ஆரம்பித்தான். நான்காம் நாள் மிகச் சரியாக அந்த நேரம் நெருங்கியதும், அவன் மனது ‘இந்நேரம் பிரியாணி வண்டி வந்திருக்கும்ல’ என்று நினைத்ததாம். ஆக, நீங்கள் கவனித்து... செல்லமாகக் கண்டித்து... பழக்கவேண்டியது மனதை!

ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.

அரசியல் சதுரங்கத்தில் மிக நுட்பமாகக் காய்களை நகர்த்துபவர்களில் ஒருவர் பெயரைச் சொல்லுங்களேன்?

அரசியல் என்றாலே காய்நகர்த்தல்கள்தானே. ஆனால் பொதுவாக அரசியலில் காய்களை நகர்த்துபவர்கள் அல்ல, கட்டங்களையே நகர்த்துபவர்கள்தான் ஜெயிக்கிறார்கள்.

வாசுதேவன், பெங்களூரு.

கலையுலக வாரிசு - அரசியல் வாரிசு என்ன ஒற்றுமை?

இரண்டிலும் ஈஸியாக வெளிச்சத்துக்கு வந்துவிடலாம். இரண்டிலும் தந்தையின் பெயரைக் காப்பாற்றப் போராட வேண்டும். குறிப்பாக, இரண்டு பேருக்குமே அபார நடிப்புத் திறமை வேண்டும்.

டாக்டர். இரா.அருண்குமார், புதுச்சேரி.

“ஒழுங்கீனமும் முறைகேடும் நடந்தால் கடுமையாக நடவடிக்கை எடுப்பேன் அல்லது சர்வாதிகாரியாக நடப்பேன்” என்று ஸ்டாலின் கூறியிருக்கிறாரே?

அப்படியென்றால், இப்போதுவரை எந்த ஒழுங்கீனமும் முறைகேடும் நடக்கவே இல்லை என்று நம்புகிறாரா என்ன?!

கழுகார் பதில்கள்

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

``சிவசேனாவில் நடக்கும் பிரச்னைக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் தொடர்பில்லை’’ என அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியிருக்கிறாரே?

ஓ... தேவாவே சொல்லிட்டாரா?!

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

“ஒட்டுமொத்தத் தொண்டர்களின் விருப்பப்படி, எனது தலைமையில் அ.தி.மு.க வலிமை பெறும்” என்று சசிகலா தெரிவித்திருக்கிறாரே?

ஒட்டுமொத்தம் என்றால் எத்தனை தொண்டர்கள்?

கழுகார் பதில்கள்

அருண்குமார், வாணரப்பேட்டை.

“எங்களுடைய ஸ்லீப்பர் செல்கள் இன்னும் அ.தி.மு.க-வில் இருக்கிறார்கள். தேவைப்படும்போது வெளியில் வருவார்கள்” என்று டி.டி.வி.தினகரன் கூறியிருப்பது பற்றி..?

யாருக்கு, என்ன தேவைப்படும்போது?

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

மக்களுக்கு நன்மைகள் செய்ய வேண்டும் என விரும்புகிறவர்கள், தற்போது எந்தக் கட்சியில் சேரலாம்?

கட்சியில் சேர்ந்துதான் மக்களுக்கு நன்மைகள் செய்ய வேண்டுமா என்ன?

சௌந்தர், அரியலூர்.

நாமும் காலால்தானே நடக்கிறோம்... அப்புறம் ஏன் விலங்குகளை மட்டும் ‘கால்நடைகள்’ என்று கூறுகிறோம்?

காலால் மட்டும் நடப்பவை, கால்நடைகள். நாம் மனதாலும் நடக்கிறோம். நடப்பது என்றால், ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குச் செல்லும் ‘நடை’ மட்டுமல்ல. நல்ல கருத்துகளை நோக்கி நம் உள்ளம் செல்வது, எதிர்காலத்தை நோக்கிச் சிந்தனையால் நகர்வது இவையும்கூட நடைதான். அதனால்தான் தீய வழியில் செல்பவர்களை ‘அவன் நடத்தை சரியில்லை’ என்று கூறுகிறோம்!