Published:Updated:

கழுகார் பதில்கள்

கிறிஸ் ராக்,  வில்ஸ் மித்
பிரீமியம் ஸ்டோரி
கிறிஸ் ராக், வில்ஸ் மித்

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் சிங்க்ளேர் லூயியை, ஒரு கல்லூரியில் பேச அழைத்திருக்கிறார்கள். ‘எழுத்தாளர் ஆவது எப்படி?’ என்பது கொடுக்கப்பட்ட தலைப்பு.

கழுகார் பதில்கள்

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் சிங்க்ளேர் லூயியை, ஒரு கல்லூரியில் பேச அழைத்திருக்கிறார்கள். ‘எழுத்தாளர் ஆவது எப்படி?’ என்பது கொடுக்கப்பட்ட தலைப்பு.

Published:Updated:
கிறிஸ் ராக்,  வில்ஸ் மித்
பிரீமியம் ஸ்டோரி
கிறிஸ் ராக், வில்ஸ் மித்

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

ஆஸ்கர் விழா மேடையில், ஹாலிவுட் நடிகர் கிறிஸ் ராக்கை, நடிகர் வில்ஸ் மித் கன்னத்தில் அறைந்தது குறித்து..?

யார் ஒருவரையும் உருவ கேலி செய்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. அதேசமயம், அதற்குத் தீர்வு வன்முறை அல்ல. “உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன், தவறுதான்” என்று வில் ஸ்மித் மன்னிப்புக் கோரியிருக்கிறார். அன்றைய நிகழ்வில் கண்ணீர் வழிய அவர் பேசியவிதத்தில், அவர் அதிகமும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்ததைப் புரிந்துகொள்ள முடிகிறது. இதில், சரி தவறு என்ற விவாதத்தைத் தாண்டி, கிறிஸ் - ஸ்மித் இருவரின் செயல்களிலிருந்தும் நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன.

அமெரிக்காவில் பொது இடங்களில் பண உதவி கேட்டு அமர்ந்திருப்பவர்களில் பலர் கிரியேட்டிவாக ஏதாவது ஒரு விஷயத்தை எழுதிவைத்து அதன் மூலம் கவனம் ஈர்ப்பார்கள். அப்படி, இந்தச் சம்பவத்துக்கு அடுத்த நாள் ஒருவர், ஒரு டப்பாவில் ‘வில் ஸ்மித் ஆதரவாளர் என்றால் இதில் பிச்சை இடுங்கள்” என்றும், இன்னொன்றில் ‘கிறிஸ் ராக் ஆதரவாளர் என்றால் இதில் பிச்சை இடுங்கள்’ என்றும் எழுதிவைத்திருந்தார். அதில் கிறிஸ் ராக்கின் டப்பாவில்தான் அதிக பணம் விழுந்திருந்தது. சரி தவறு என்பதற்கு அப்பால், சிறிதோ பெரிதோ எப்போதும் மக்கள் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் பக்கமே நிற்கிறார்கள்!

கிறிஸ் ராக்,  வில்ஸ் மித்
கிறிஸ் ராக், வில்ஸ் மித்
கழுகார் பதில்கள்

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

‘டெபாசிட் இழந்துவிடுவோம்’ என்று தெரிந்தும் தேர்தலில் போட்டியிடுபவர்கள் பற்றி..?

இவர்களில் பலரும், ஓட்டுகளைப் பிரிக்க நிறைய லட்டுகள் கொண்ட ‘ஸ்வீட் பாக்ஸ்’ வாங்கிக் கொண்டுதானே தேர்தலிலேயே நிற்கிறார்கள். டெபாசிட் தொகை என்பதெல்லாம் அவர்களுக்குச் சிந்திச் சிதறும் பூந்திகள்தானே!

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

அரசியல்வாதிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் மக்கள் மயங்குகின்றனர். மக்களின் வாக்குறுதிக்கு அரசியல்வாதிகள் மயங்குவதுண்டா... எப்போது?

“கண்டிப்பா எங்க குடும்பத்துல எல்லாரோட ஓட்டும் உங்களுக்குத்தான் தலைவரே!”

@கார்த்திகேயன் கவிதா

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றத்தைப் பற்றி பொதுமக்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லையே?

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் டயலாக்தான் நினைவுக்கு வருகிறது. எவ்வளவு அடித்தும் வலியைக் காட்டிக்கொள்ளாமல் சிரித்தபடி நிற்கும் வடிவேலுவிடம் ‘`உனக்கு வலிக்கவே இல்லையா?’’ என்று கேட்கிற ரௌடியிடம் “ஒரு தடவை அடிச்சா பரவால்லை. ஒவ்வொரு தடவையும் அடிச்சா... பழகிருச்சுய்யா!” என்பார். அதுபோல மக்கள் வேதனைகளுக்குப் பழகிட்டாங்க. 150, 200-ன்னு கிரிக்கெட் ஸ்கோர் மாதிரி ரவுண்ட் ஃபிகர் வரும்போது மட்டும் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு பொங்கிட்டு மறுபடியும் அடங்கிடுறாங்க!

வாசுதேவன், பெங்களூரு.

யூடியூபில் வெளியாகும் ‘முதல் நாள் முதல் காட்சி’ பார்வையாளர்களின் ரிவ்யூக்களில், கழுகார் சிரிப்பது எந்த கமென்ட்டுக்கு?

“ஒரு தடவை பார்க்கலாம்” என்பார்களே... அதற்குத்தான். எவ்வளவு நல்ல படமாக இருந்தாலும், தியேட்டர் டிக்கெட், ஸ்நாக்ஸ், பார்க்கிங் என எகிறும் செலவுத் தொகைக்கு எத்தனை தடவை ஒரு படத்தைப் பார்க்க முடியும்!?

பா.ஜெயப்பிரகாஷ், தேனி.

எதையும் தள்ளிப்போடக் கூடாது என்பதற்கு ஒரு சம்பவம் சொல்லுங்களேன்!

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் சிங்க்ளேர் லூயியை, ஒரு கல்லூரியில் பேச அழைத்திருக்கிறார்கள். ‘எழுத்தாளர் ஆவது எப்படி?’ என்பது கொடுக்கப்பட்ட தலைப்பு. மேடையில் மைக் முன் வந்து நின்ற லூயி, “உங்களில் யார் யாருக்கு எழுத்தாளராக வேண்டும் என்ற லட்சியம் உள்ளது?” என்று கேட்டிருக்கிறார். கிட்டத்தட்ட அரங்கத்திலிருந்த அனைவரும் கை உயர்த்த, “சரி... அப்போ வீட்டுக்குப் போய் எழுதுங்களேன். இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டுவிட்டு விறுவிறுவென்று மேடையிலிருந்து இறங்கிச் சென்றுவிட்டாராம்!

கழுகார் பதில்கள்

மாணிக்கம், திருப்பூர்.

‘மக்கள் மீதான சுமையைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன’ என்று கூறியிருக்கிறாரே பிரதமர் மோடி?

“தோ கிலோமீட்டர்!”

சுப்பிரமணியன், கிருஷ்ணகிரி.

உ.பி-யில் யோகி முதல்வராகப் பதவியேற்றதும் 50 கிரிமினல்கள் தாமாக வந்து சரணடைந்திருக்கிறார்களே?

சரி... இதுக்கு முந்தைய ஆட்சியிலும் யோகிதானே முதலமைச்சர்? அப்போது எப்படி, ஏன் இவர்களெல்லாம் வெளியில் ஜாலியாகச் சுற்றிக்கொண்டிருந்தார்களாம்?!

கழுகார் பதில்கள்

மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி, மதுரை.

பொய் பேசுவதற்குத் திறமை வேண்டுமா... அனுபவம் வேண்டுமா?

ஞாபகசக்தி!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!