அலசல்
சமூகம்
Published:Updated:

கழுகார் பதில்கள்

சட்டமன்றம்
பிரீமியம் ஸ்டோரி
News
சட்டமன்றம்

நாட்டில் பிடுங்கவேண்டிய விஷயங்கள் ஆயிரம் இருக்கின்றன. அங்கெல்லாம் சலாம் போட்டு சைலன்ட்டாக நின்றுவிட்டு, அதிகாரமில்லாத ஏழை, எளியவன் சிக்கினால்

தே.மாதவராஜ், கோயம்புத்தூர்.

சசிகலா தலையில் கைவைத்த மோடி... ஒ.பி.எஸ்-ஸை நெஞ்சில் அணைத்துக்கொண்ட மோடி... உதயநிதி ஸ்டாலினின் தோளில் தட்டிக்கொடுத்ததைப் பார்த்தால், இவருக்கும் அவர்களின் நிலைதானா?

அபசகுனமா பேசாதீங்க பாஸ்!

சசிகலா  - மோடி... ஒ.பி.எஸ் - மோடி... உதயநிதி ஸ்டாலின் - மோடி...
சசிகலா - மோடி... ஒ.பி.எஸ் - மோடி... உதயநிதி ஸ்டாலின் - மோடி...

மூர்த்தி பாலகிருஷ்ணன், மதுரை.

தி.மு.௧., ஒன்றிய அரசை எதிர்க்கிறதா, எதிர்ப்பது மாதிரி நடிக்கிறதா?

தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரின் சந்தேகத்தையும் சிம்பிளா கேட்டிருக்கீங்க.

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

வாழையடி வாழையாக அரசியலில் மாறாமல் இருப்பது எது?

எதிர்க்கட்சியாக இருக்கும்போது எதையெல்லாம் செய்யக் கூடாது என்று கொதித்து, கூச்சல் போட்டு, போராட்டம் நடத்துகிறார்களோ... அந்த விஷயத்தை ஆளுங்கட்சியாக வந்தவுடன் அவர்களே செய்வது. அதற்கு விதவிதமாகச் சப்பைக்கட்டு வேறு கட்டுவது.

டி.சிவக்குமார், திண்டுக்கல்.

கேமோஃபிளாஜ் உடையில் மோடி?

‘96’ படத்தில் ‘இரு காலின் இடையிலே உரசும் பூனையாய்... வாழ்க்கை போதும் அடடா...’ என்று பாடும் விஜய் சேதுபதிபோலவே இருந்தார். கேமராக்களுக்குத் தீனி போடுவதில் நம் பிரதமரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை.

ஆா்.நாகராஜன், செம்பனாா்கோவில்.

கழுகாரே... துஷ்டரைக் கண்டால் தூர விலகிவிடுவீா்களா?

எங்கே பாஸ்... துஷ்டர் என்று நாம் அவர்களைக் கண்டுபிடிப்பதற்குள் சம்பவம் நடந்து முடிந்துவிடுகிறது!

திருப்பூர். அர்ஜுனன்.ஜி, அவிநாசி.

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரத்தில் தி.மு.க கேம் விளையாடுகிறதா?

விளையாட்டு மட்டுமா... சட்டமன்றத்துக்குள் எடப்பாடி - பன்னீர் இருவரையும் வைத்து நடக்கும் கிண்டல், கேலி, காமெடிகள், சேட்டைகள் குறித்து ஒரு சட்டமன்ற உறுப்பினர் சொன்னதைக் கேட்டுச் சிரித்து வயிறே வலித்துவிட்டது.

சட்டமன்றம்
சட்டமன்றம்

டி.ஜெயசிங், கோயம்புத்தூர்.

மூன்று முறை முதல்வராக இருந்த ஓ.பி.எஸ்., கட்சியைவிட்டே விலக்கப்படும் அளவுக்குச் செய்த தவறு என்ன?

எதிலும் உறுதியாக நிற்காதது.

எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.

நாசா - கைலாசா... ஒப்பிடுக?

‘முக்கியமான’ ஆராய்ச்சிகளும் ரகசியங்களும் நிறைந்த இடங்கள்.

என்.இளங்கோவன், மயிலாடுதுறை.

‘சாத்தான்குளம்’ சம்பவத்துக்குப் பிறகும் பல்வீர் சிங் போன்ற இளம் காவல்துறை அதிகாரிகள் திருந்துவதாகத் தெரியவில்லையே?

“நாட்டில் பிடுங்கவேண்டிய விஷயங்கள் ஆயிரம் இருக்கின்றன. அங்கெல்லாம் சலாம் போட்டு சைலன்ட்டாக நின்றுவிட்டு, அதிகாரமில்லாத ஏழை, எளியவன் சிக்கினால் அவன் பல்லைப் பிடுங்குவதா?” என்று நாமும் உரைக்கிற மாதிரி கேட்டுக்கொண்டேதான் இருக்கிறோம்.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

இன்றைய அரசியல்வாதிகளில், ‘கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்று கூறுபவர் யார்?

பெரும்பாலும் அவர் மீசை வைத்துக்கொள்வதில்லை.

திலகர் ஈஸ்வரன், சேலம்.

எல்லாம் அவன் செயல்தானே?

ஆம். ஆனால், பெரிய பதவியில் இருக்கிறார். எனவே ‘அவர்’ என்று சொல்லுங்கள்.

விஜயலட்சுமி, ஈரோடு.

இன்றைய இளம் தலைமுறை போதையின் பிடியிலும், போனின் பிடியிலும் மாட்டிக்கொண்டிருக்கும் நிலையில், பெற்றோர்கள் செய்யவேண்டியது என்ன?

அவர்களுடன் நிறைய நேரம் செலவிட வேண்டும். போதையைவிடவும், போனைவிடவும் மகிழ்ச்சியான, சுவாரஸ்யமான, உற்சாகமான விஷயங்கள் இந்த வாழ்க்கையில் இருக்கின்றன என்பதை உணர்த்த வேண்டும். வெறும் வார்த்தைகளில் அல்ல, நடைமுறையில்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!