Published:Updated:

கழுகார் பதில்கள்

ஜெயலலிதா
பிரீமியம் ஸ்டோரி
ஜெயலலிதா

`பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயைத் தாண்டிருச்சே’ன்னு ஒருசிலர் சைக்கிளுக்கு மாறிக்கிட்டுருக்கறதா கேள்விப்பட்டோம்.

கழுகார் பதில்கள்

`பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயைத் தாண்டிருச்சே’ன்னு ஒருசிலர் சைக்கிளுக்கு மாறிக்கிட்டுருக்கறதா கேள்விப்பட்டோம்.

Published:Updated:
ஜெயலலிதா
பிரீமியம் ஸ்டோரி
ஜெயலலிதா

ஆர்.ஜெயச்சந்திரன், திருச்சி-25.

ஜெயலலிதாவுக்கு அரசியல் ஆசை இருக்கவில்லைதானே... அவர் விருப்பமில்லாமல்தானே அரசியலுக்குள் இழுத்துவரப்பட்டார்?

“அரசியலில் தீவிரமாக இறங்கி, பெரிய அரசியல்வாதியாக வேண்டும் என்ற ஆசையும் எனக்கு இருந்தது. ஒருவேளை நான் சினிமாவுக்கு வராமலிருந்திருந்தால், இன்று தேர்தலுக்காக அல்லது உப தேர்தலுக்காக எங்காவது மேடையில் பேசி வெளுத்து வாங்கிக்கொண்டிருப்பேன்.” - இது ஜெயலலிதா பிரபலமாக நடித்துக்கொண்டிருந்த 1969 ஆகஸ்ட்டில், ஒரு பேட்டியில் சொன்னது. அதன் பிறகு 13 வருடங்களுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் சேர்கிறார். ஆக, அரசியல் ஆசை அவருக்குள் கனன்றுகொண்டே இருந்த ஒன்றுதான்!

கழுகார் பதில்கள்

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

ஆண்கள் விட்டுக்கொடுக்கும் அளவுக்குப் பெண்கள் விட்டுக்கொடுப்பதில்லையே?

உங்க ஆதங்கம் புரியுது. எதுவாயிருந்தாலும் மனசுல வெச்சுக்காம, வீட்ல பேசிருங்க கணேசன்!

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

இரண்டு கட்சிகளின் அரசியல் தலைவர்கள் சந்திப்பின்போது ‘இது அரசியல் சந்திப்பு அல்ல’ என்று கூறப்படும் விளக்கம் பற்றி..?

அரசியல் படங்களில் ‘இந்தக் கதையில் இடம்பெறும் பாத்திரங்களும் பெயர்களும் கற்பனையே’ என்று பொறுப்புத் துறப்பு போடுவார்களே... அது போன்றதுதான் இந்த ஸ்டேட்மென்ட். அப்படியான சந்திப்புகளில்தான் பல அழுத்தமான அரசியல் நிலைப்பாடுகள் எடுக்கப்படும்!

மாணிக்கம், திருப்பூர்.

‘பொதுமக்களின் வாழ்க்கையில் நேர்மறை மாற்றங்களைக் கொண்டுவர அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது’ என்று கூறியிருக்கிறாரே பிரதமர் மோடி. அதென்ன நேர்மறை மாற்றம்?

`பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயைத் தாண்டிருச்சே’ன்னு ஒருசிலர் சைக்கிளுக்கு மாறிக்கிட்டுருக்கறதா கேள்விப்பட்டோம். ‘அப்படி சைக்கிள் ஓட்டி, உடலும் மனமும் சீராகி, மக்களின் மனங்களில் நேர்மறை எண்ணங்கள் வளர, அதுவே அவர்களின் வாழ்க்கையில் நேர்மறை மாற்றங்களுக்கு வழிவகுக்கும்’ என்று விளக்கம் சொல்வாரோ?

சௌந்தர், அரியலூர்.

மதவெறி என்னென்ன செய்யும்?

ஹரியானா, பிவானி மாவட்டம், ஹிசர் என்ற ஊரில், முஸ்லிம்களின் கல்லறைகளைத் தோண்டியெடுத்துவிட்டு அங்கே அனுமன் சிலையை வைத்துச் செல்கிறார்கள் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆட்கள். இறந்தாலும் சிறுபான்மையினருக்கு இடமில்லை என்று சொல்லும் இந்தச் செயல் எத்தனை கொடூரமானது! மதவெறி, இதைப் போன்ற மனிதாபிமானமற்ற செயல்களை, கிஞ்சித்தும் குற்றவுணர்வின்றிச் செய்யச் சொல்லும்!

சோ.பூவேந்த அரசு, சின்னதாராபுரம், கரூர்.

அரசியல்ரீதியாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்க்குரல் கொடுப்பதில் மம்தா பானர்ஜிதான் முந்துகிறாரா?

அவருக்குத்தான் குடைச்சல் அதிகம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதால், அவர்தான் குரலும் அதிகம் கொடுக்கிறார். ஆனால், இந்த அதிகாரச் சண்டையில், மக்கள் நலன் பின்னுக்குத் தள்ளப்படாமல் இருந்தால் சரி!

கழுகார் பதில்கள்

சுகன்யா, சென்னை - 110.

‘அனைத்து காவல் நிலையங்களையும் சுத்தப்படுத்திவிட்டு, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்’ என்ற டி.ஜி.பி சைலேந்திரபாபுவின் உத்தரவு பற்றி..?

மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையை, தூய்மை தினமாகக் கடைப்பிடிக்கச் சொல்லி இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். நிச்சயமாக நல்ல விஷயம்தான். காவல் நிலையங்களில் சுத்தப்படுத்தவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றையும் செய்தால் நல்லது!

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.

“மூன்றாவது பெரிய கட்சியாக இருந்து பயனில்லை... முதல் கட்சியாக, அதுவும் ஆளுங்கட்சியாக பா.ம.க இருக்க வேண்டும்” என்கிறாரே அன்புமணி ராமதாஸ்... இது எதைக் காட்டுகிறது!

மீண்டும் ‘மாற்றம் முன்னேற்றம்’ போஸ்டர்களுக்கு ஆர்டர் கொடுக்கப்போகிறார்கள் என்பதைக் காட்டுகிறது!

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

2024 தேர்தலுக்கு இப்போதிலிருந்தே தயாராயிருப்பது யார்?

இந்திய தேர்தல் ஆணையம்!

பா.ஜெயப்பிரகாஷ், தேனி

“அரசியல் காரணங்களுக்காகத்தான் ஆளுநரின் தேநீர் விருந்தை ஆளுங்கட்சி புறக்கணிக்கிறது!” என்று தி.மு.க மீது அண்ணாமலை குற்றம்சாட்டியிருக்கிறாரே?

அரசியல் காரணமில்லாமல், சொந்த விருப்பு வெறுப்பால் தேநீர் விருந்தைப் புறக்கணித்தால்தான் தவறு. அவர்களைக் குற்றம்சாட்டலாம். ஆனால், முதல்வர் ஸ்டாலின்தான் அரசியல் காரணம் எனத் தெளிவாகச் சொல்லியிருக்கிறாரே!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism