Published:Updated:

கழுகார் பதில்கள்

அனைத்துக் கட்சிக் கூட்டம்
பிரீமியம் ஸ்டோரி
அனைத்துக் கட்சிக் கூட்டம்

யார் அந்த ‘சத்ரு’ என்பதுதான் அரசியல் வட்டாரங்களில் இப்போது ஹாட் டாபிக்.

கழுகார் பதில்கள்

யார் அந்த ‘சத்ரு’ என்பதுதான் அரசியல் வட்டாரங்களில் இப்போது ஹாட் டாபிக்.

Published:Updated:
அனைத்துக் கட்சிக் கூட்டம்
பிரீமியம் ஸ்டோரி
அனைத்துக் கட்சிக் கூட்டம்

ஏ.கணேசன், தூத்துக்குடி.

தேர்தல் ஆணையத்தின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், ஓ.பி.எஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜின் முன்னாலிருந்த அ.தி.மு.க பெயர்ப்பலகையை, இ.பி.எஸ் ஆதரவாளர் ஜெயக்குமார் தன்பக்கம் எடுத்து வைத்துக்கொண்டதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

கட்சியே எந்தப் பக்கம் என்று தெரியாத நிலையில், பலகை எந்தப் பக்கம் இருந்தாலென்ன கணேசன்!

கழுகார் பதில்கள்

எச்.மோகன், மன்னார்குடி.

மக்கள் தலைவர் என்றால் யாரைச் சொல்வீர்கள்?

மக்கள் தலைவர் யார் என்பதை எப்போதும் மக்கள்தான் சொல்வார்கள். அப்படி அவர்கள் சொல்லி ரொம்ப காலம் ஆகிவிட்டது.

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

அரசியலில் ஜெயிப்பதற்குத் தேவை கோபமா... மௌனமா?

இரண்டும் சரியான சந்தர்ப்பங்களில் வெளிப்பட வேண்டும். கோபம் வெளிப்படவேண்டிய இடத்தில் மௌனமும், மௌனம் வெளிப்படவேண்டிய இடத்தில் கோபமும் வெளிப்படும்போதுதான் பல பிரச்னைகள் ஆரம்பமாகின்றன.

சௌந்தர், அரியலூர்.

கழுகார் சமீபத்தில் ரசித்த சொலவடை ஏதும் உண்டா?

‘பூவுள்ள மங்கையாம் பொற்கொடியாம்

போற எடமெல்லாம் செருப்படியாம்!’

இல.கண்ணன், நங்கவள்ளி.

``பா.ம.க-விடம் ஆட்சி, அதிகாரம் இருந்தால் இரண்டே நாளில் போதைப்பொருள் விற்பனைக்கு முடிவுகட்டுவேன்’’ என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறுகிறாரே?

அப்போ... ஆட்சி அதிகாரம் வர்ற வரைக்கும் வெயிட் பண்ணவேண்டியதுதான்.

ச.இராமதாசு சடையாண்டி, ரங்கநாதபுரம், விழுப்புரம் மாவட்டம்.

“அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க என யாருக்கும் தனித்துப் போட்டியிட திராணி இல்லை. எங்களுக்கு இருக்கிறது” என்று சீமான் பேசியிருப்பது பற்றி?

`சுடறதுக்குத்தான் துப்பாக்கி தேவை. சுடாம இருக்கறதுக்குத் துப்பாக்கி தேவையில்லை’னு ஒரு வசனம் உண்டு. அதுதான் ஞாபகத்துக்கு வருது!

திலகர் ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.

‘ஆளுநரை எல்லோரும் அரசியல்வாதியாகவே பார்க்கின்றனர்’ என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருக்கிறாரே?

அரசியல்வாதியாகப் பார்ப்பது அவ்வளவு மோசமான விஷயமா என்ன?

இரா.அமிர்தவர்ஷினி, வாணரப்பேட்டை, புதுச்சேரி.

“தமிழ்நாட்டில் காவல் நிலைய மரணங்களே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது பற்றி..?

சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். ஆனால், அதை முதலில் புரிந்துகொள்ளவேண்டியதும், செயல்படுத்த வேண்டியதும் அவர்தான்.

இல.கண்ணன், நங்கவள்ளி.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன், திருச்செந்தூரில் சத்ரு சம்ஹார யாகம் நடத்தியதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றனவே?

யார் அந்த ‘சத்ரு’ என்பதுதான் அரசியல் வட்டாரங்களில் இப்போது ஹாட் டாபிக்.

கழுகார் பதில்கள்

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

“நான் எந்தப் பக்கமும் இல்லை. அ.தி.மு.க பக்கம்தான்” என்று சசிகலா கூறியிருக்கிறாரே?

“ஆனால், அ.தி.மு.க அவர் பக்கம் இல்லையே?” என்று எடப்பாடி பழனிசாமி சொல்வார். “எடப்பாடி பழனிசாமி அதை எப்படிச் சொல்லலாம்?” என்று ஓ.பன்னீர்செல்வம் சொல்வார். “ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இருவருக்கும் அதைச் சொல்ல உரிமை இல்லை!” என்று டி.டி.வி.தினகரன் சொல்வார். “அதனால்தான், நான் எந்தப் பக்கமும் இல்லை. அ.தி.மு.க பக்கம்தான் என்று சொல்கிறேன்” என்று மீண்டும் சசிகலா சொல்வார். ஒரே குழப்பமா இருக்குல்ல... தமிழ்நாட்டுக்கே அப்படித்தான் இருக்கு.

கழுகார் பதில்கள்

சுப்பிரமணியன், கிருஷ்ணகிரி.

கடிதங்கள் எழுதும் பழக்கம் இன்றும் இருக்கிறதா?

இந்த வாரம்கூட ஒரு கடிதம் வைரலாகியிருக்கிறதே!

உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டம், சிப்ரமாவ் நகரைச் சேர்ந்த கிரிதி துபே என்ற சிறுமி, பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், “என் பெயர் கிரிதி துபே. நான் 1-ம் வகுப்பு படிக்கிறேன். மோடி ஜி... நீங்கள் மிகப்பெரிய விலைவாசி உயர்வுக்குக் காரணமாகியிருக்கீங்க. என்னுடைய பென்சில் மற்றும் ரப்பரின் விலைகூட அதிகமாகியிருக்கு. இது மட்டுமல்லாமல், ‘மேகி’யின் விலையும் கூடிருச்சு. என் அம்மா பென்சில் கேட்டா என்னை அடிக்குறாங்க” என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருக்கிறார்.

பிரதமரிடமிருந்து பதில் வருமா என்று பார்ப்போம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!