Published:Updated:

கழுகார் பதில்கள்

காந்தி, பெரியார்
பிரீமியம் ஸ்டோரி
காந்தி, பெரியார்

வரலாற்றில் எத்தனையோ பேரிடர்களை வெற்றிகரமாகக் கடந்துவந்திருக்கிறது மனித இனம்

கழுகார் பதில்கள்

வரலாற்றில் எத்தனையோ பேரிடர்களை வெற்றிகரமாகக் கடந்துவந்திருக்கிறது மனித இனம்

Published:Updated:
காந்தி, பெரியார்
பிரீமியம் ஸ்டோரி
காந்தி, பெரியார்

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

முதல்வர் சசிகலா, எதிர்க்கட்சித் தலைவர் கனிமொழி, சபாநாயகர் பிரேமலதா, கவர்னர் குஷ்பு இப்படி ஒரு சட்டசபை அமைந்தால் எப்படி இருக்கும்?

நல்ல வுமன் ஓரியண்டட் ஸ்கிரிப்ட் பாஸ்... வெறித்தனம்!

கழுகார் பதில்கள்

அ.யாழினி பர்வதம், சென்னை-78.

சென்னை முழுவதும் ஸ்மார்ட் சிட்டி ஆவது எப்போது?

ஏற்கெனவே நடந்த ஸ்மார்ட் சிட்டி பணிகளே பல்லைக் காட்டுது... இதுல சென்னை முழுவதும் வேறயா!?

லட்சுமி செங்குட்டுவன், வேலூர்.

தி.மு.க., அ.தி.மு.க-வாக மாறிவருகிறதே?

‘அரியும் சிவனும் ஒண்ணு... அதை அறியாதவன் வாயில் மண்ணு’ என்றொரு சொலவடை உண்டு. சும்மா ஞாபகப்படுத்தினேன்!

சுகன்யா, சென்னை-110.

ஆட்சி மாறினாலும், மாறாமல் இருக்கும் காட்சி எது?

கொரோனா கட்டுப்பாடுகளைக் கணக்கில்கொள்ளாமல் ஆளுங்கட்சியாக இருப்பவர்கள் டாஸ்மாக்கைத் திறந்து வைத்திருப்பதும், எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் அதை மூடச் சொல்லி தொடர்ந்து வலியுறுத்துவதும்!

மணிவண்ணன், சூலூர்.

நாட்டிலேயே முதன்முறையாக ஆட்டோ டிரைவர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோரைக் குடியரசு தினவிழாக் கொண்டாட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்து மோடி உத்தரவிட்டிருக்கிறாரே!?

ஐந்து மாநிலத் தேர்தல் ஸ்டன்ட்டாக மட்டுமல்லாமல், ஒவ்வோர் ஆண்டும் இதுபோல சாமானியர்களுக்கும் சிறப்பு செய்தால் நிச்சயம் பாராட்டலாம்!

கணேஷ், தணிகாசலம் நகர்.

அரசியலில் மட்டும் ஏன் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லை?

“கெட்டியா நாற்காலியைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டிருக்கும்போதே, ஆளுக்கொரு பக்கம் நாற்காலியின் கால்களைக் கழட்டிடுறாங்க. இதுல விட்டுக்கொடுத்துட்டா என்ன ஆகும் என்ற பயம்தான்!

@அட்லாண்டா கணேஷ்

திரு மோடி, ‘திரு திரு’ மோடி ஆகி பேச்சு வராமல் தவித்தாரே?

பிரஸ் மீட் வைக்காமல், எப்போதும் `மன் கி பாத்’-தில் மட்டுமே அவர் பேசுவது எதனால் என்று இப்போது புரிகிறது!

கார்த்திகா, புதுக்கோட்டை.

ஊரடங்கு இன்னும் அவசியமா?

வரலாற்றில் எத்தனையோ பேரிடர்களை வெற்றிகரமாகக் கடந்துவந்திருக்கிறது மனித இனம். அப்படி, கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனாவைக் கையாள்வதில் நாம் ரொம்பவே முன்னேறியிருக்கிறோம். இங்கிலாந்தில் கொரோனா விதிமுறைகள் தளர்த்தப்பட்டுவிட்டன. தடுப்பூசி, முகக்கவசம், தனிமனித இடைவெளி, கிருமிநாசினி பயன்படுத்துதல் போன்ற அடிப்படைப் பாதுகாப்பு விஷயங்களை முறையாகக் கடைப்பிடித்தாலே நாம் வெற்றிகரமாக நோய்த்தொற்றிலிருந்து தப்பிவிடலாம் என்று மருத்துவர்களும், சுகாதார வல்லுநர்களும் கூறுகிறார்கள். மக்கள் நல்வாழ்வு என்பது பொருளாதாரத்தோடும் தொடர்புடையது. அதையும் கருத்தில் கொண்டு ஊரடங்கைப் படிப்படியாகத் தளர்த்தலாம்!

செந்தில், ராமநாதபுரம்.

திருப்பூரில் அரசுப்பள்ளி தலைமையாசிரியரே, மாணவர் மாணவியரைச் சாதியைச் சொல்லித் திட்டியிருக்கிறாரே?

சாதியற்ற சமூகம் ஒருவேளை சாத்தியமாகுமென்றால், பள்ளிகள்தான் அந்த நம்பிக்கைக்கான நாற்றங்காலாக இருக்க முடியும்.அந்த நாற்றங்காலிலேயே நஞ்சை விதைப்பது அருவருக்கத்தக்கது. கல்வியறிவு அற்றவர்களின் சாதியப் பிடிப்பைவிட ஆபத்தானது, படித்தவர்களின் சாதிப்பற்று!

கழுகார் பதில்கள்

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

தேர்தலில் போட்டியிடாமல் அரசியல் வாழ்க்கையில் வென்றவர்கள் உண்டா... எதனால் அந்த வெற்றி சாத்தியமானது?

காந்தி, பெரியார் போன்று இன்றளவும் பேசப்படும் பல ஆளுமைகள் அப்படியானவர்கள்தானே! தன்னலமில்லாமல் பொதுநலனுக்கென்று அரசியலில் இருப்பவர்களுக்கு மட்டுமே அந்த வெற்றி சாத்தியம்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism