Published:Updated:

கழுகார் பதில்கள்

சசிகலா - எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
சசிகலா - எடப்பாடி பழனிசாமி

அப்போதெல்லாம் எதிரி நாடுகளிடமிருந்து மக்களைப் பாதுகாக்க ஒட்டுக் கேட்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது!

கழுகார் பதில்கள்

அப்போதெல்லாம் எதிரி நாடுகளிடமிருந்து மக்களைப் பாதுகாக்க ஒட்டுக் கேட்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது!

Published:Updated:
சசிகலா - எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
சசிகலா - எடப்பாடி பழனிசாமி

ஸ்டீஃபன் ராஜ், தோஹா, கத்தார்.

`ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்படவில்லை’ என மாநில, ஒன்றிய அரசுகள் சத்தியம் செய்கின்றனவே?

இதுக்கே ஆச்சர்யப்பட்டா எப்படிங்க..? கொஞ்ச நாள் பொறுங்க. ‘இந்தியாவுல கொரோனாவால் மரணங்களே நடக்கலை’னு சொல்லுவாங்க பாருங்க! நாடாளுமன்றத்துலயே இப்படித் தகவல்களைப் பதிவு செஞ்சா எதைத்தான் நம்பறது?

குருராஜ் சுப்பிரமணியன், ஈரோடு.

சமீபத்தில் கேட்ட நகைச்சுவை?

இந்தியாவிலிருந்து லண்டன் செல்லும் வழியில், ஃப்ராங்ஃபர்ட் ஏர்போர்ட்டில் பயணியிடம் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான ஆதாரத்தைக் கேட்டிருக்கிறார் விமானப் பணிப்பெண். பயணியும் எடுத்துக் கொடுத்திருக்கிறார். வாங்கிப் பார்த்தவர், “வேறு யாருடைய சான்றிதழையோ கொடுத்திருக்கிறீர்கள்” என்று திருப்பிக் கொடுத்து சந்தேகமாகப் பார்த்திருக்கிறார். பிறகு பயணி, “அதெல்லாம் இல்லை. இது என்னுடையதுதான். வேண்டு

மானால் பெயர், ஆதார் விவரங்களைப் பாருங்கள்” என்று சொல்லியிருக்கிறார். அவர் மீண்டும் பார்க்க, “ஓ... அந்த போட்டோவா... அது எங்கள் பிரைம் மினிஸ்டர்” என்றிருக்கிறார் பயணி. அந்த விமானப் பணிப்பெண் சத்தமாகச் சிரித்து, உடனிருந்தவர்களிடம் காண்பித்து “இப்படி எங்கேயும் பார்த்ததே இல்லை” என்றாராம்!

சரவண குமார் சின்னசாமி, தாராபுரம்.

ஒட்டுக்கேட்பது என்பது காலனியாதிக்க காலத்திலிருந்தே நடைமுறையில் இருக்கும் விஷயம்தான். மக்களின் அத்தியாவசியப் பிரச்னைகள் ஆயிரக்கணக்கில் இருப்பதிலிருந்து மடைமாற்றும் யுக்தியாக நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்னை கிளப்பப்படுவதுபோல் தெரிகிறதே?

அப்போதெல்லாம் எதிரி நாடுகளிடமிருந்து மக்களைப் பாதுகாக்க ஒட்டுக் கேட்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது!

கழுகார் பதில்கள்

@சரோஜா பாலசுப்ரமணியன்.

அப்போலோவில் சசிகலாவும் எடப்பாடியும் ஒருவேளை நேருக்கு நேராகச் சந்தித்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

அந்த அற்புதக் காட்சியைப் பார்க்க எல்லோருமே ஆசைப்பட்டோம். ஒண்ணும் நடக்கலையே!

தாமரைச் செல்வி, கோபிசெட்டிபாளையம்.

கோர்வையாகப் பேச, எழுத வராவிட்டாலும் சிலர் பிரபலமடைகிறார்களே?

Duncan Ban MacIntyre என்றொரு ஸ்காட்லாந்துக் கவிஞர் இருந்தார். அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. வாழ்நாள் முழுவதும் தன் கவிதைகளைச் சொல்லி, பிறரை எழுதவைத்தார். என்ன தெரியும் என்பதைவிட, அதை எப்படி உலகுக்குத் தெரியவைக்கிறோம் என்பதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது!

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

கூட்டணிக் கட்சிகளின் தர்மம்தான் என்ன?

தர்மம் எங்க சார் தர்மம்... எல்லாம் ஆதாயத்துக்காகப் போய்... எனக்கு இத்தனை, உனக்கு அத்தனைனு பங்கு பிரிக்கறதுதானே!

அ.குணசேகரன், புவனகிரி.

ஜூனியர் விகடனில், ‘குட்கா இன்னும் ஜோராக விற்கிறது முதல்வரே’ அட்டைப்படத்தைப் பார்த்து முதல்வர் சாட்டையைச் சுழற்றுவாரா கழுகாரே?

சுழற்றியதன் விளைவுதான், 2-ம் பக்கத்தில் கட்டுரையாக வந்திருக்கிறதே!

பிரதீபா ஈஸ்வரன், சேலம் (மா).

“சிறப்பாக நடைபெறும் தி.மு.க ஆட்சியைக் குறை கூறுவது வெற்று அரசியலே” என எஸ்.வி.சேகர் கூறுகிறாரே?

வரிசையா நடக்குற கைது நடவடிக்கைகளையெல்லாம் பார்த்து எடுத்த முடிவா இருக்கும்போல!

கழுகார் பதில்கள்

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

‘ராகுலின் ட்விட்டரை முடக்கியதால் என்ன பயன்... சொல்லும்படியாக ஒன்றும் இருக்கப்போவதில்லை’ என்று குஷ்பு கலாய்த்திருக்கிறாரே?

இந்த மாதிரி ஸ்டேட்மென்ட்டையெல்லாம் ஒரே இடத்துல இருக்கறவங்க சொன்னாத்தான் அதுக்கு மரியாதை!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!