Published:Updated:

கழுகார் பதில்கள்

கமல் - லோகேஷ்கனகராஜ்
பிரீமியம் ஸ்டோரி
கமல் - லோகேஷ்கனகராஜ்

பலமாக இருப்பதை பலவீனமாக்கிக் கொள்ளாமல் இருப்பது பலம்

கழுகார் பதில்கள்

பலமாக இருப்பதை பலவீனமாக்கிக் கொள்ளாமல் இருப்பது பலம்

Published:Updated:
கமல் - லோகேஷ்கனகராஜ்
பிரீமியம் ஸ்டோரி
கமல் - லோகேஷ்கனகராஜ்

அ.யாழினி பர்வதம், சென்னை- 78.

மு.க.ஸ்டாலினுக்கும் மு.க.அழகிரிக்கும் இன்னும் சமரசம் ஏற்படவில்லையே... ஏன்?

எல்லார் குடும்பத்துலயும் இருப்பதுபோல அது அவங்க குடும்பப் பிரச்னை... அது நாட்டை பாதிக்காத வரை, நாம ஏன் பொதுவெளியில் விவாதிக்கணும்?!

கார்த்திக் திவ்யா, அரியலூர்.

இறங்கி அடிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு அடுத்தமுறை பி.கே-வின் ஆலோசனை தேவையில்லைதானே?

முதல் பந்தை எல்லோரும் இறங்கித்தான் அடிப்பாங்க. இந்த ஐந்தாண்டுகளில் நின்னு இவர் எவ்வளவு செஞ்சுரிகள் அடிக்கிறார் என்பதைப் பொறுத்துத்தான் உங்க கேள்விக்குப் பதில் கிடைக்கும்!

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

கொரோனா தாக்கம் குறைந்துள்ள நிலையில், தாடியை ‘ட்ரிம்’ செய்ய முடிவுசெய்துள்ளாராமே பிரதமர் மோடி?

தாடியை மட்டுமில்லாம... மாநில அரசுக்கான வரிகளையும் கொஞ்சம் ட்ரிம் செஞ்சா நல்லாருக்கும்கிற ஏக்கம், உங்க கேள்வியிலேயே தெரியுது.

சார்லஸ், மதுரை.

வடமாநிலங்களில் மாட்டுச்சாணத்துக்கு கிராக்கியாமே!?

அதை ஏன் கேக்கறீங்க... சத்தீஸ்கர் மாநிலம் கவுதன்சமிதி கிராமத்தில், 1,600 ரூபாய் மதிப்புள்ள 800 கிலோ மாட்டுச்சாணம் திருடப்பட்டிருப்பதாக கம்ஹான் சிங் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவுசெய்திருக்கிறது காவல்துறை. அங்கே ‘கோதான் நியாய் யோஜனா’ திட்டத்தின்கீழ் ஒரு கிலோ மாட்டுச்சாணத்துக்கு 2 ரூபாய் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது!

ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம் - 608 001.

அரசியலில் பலம், பலவீனம் எது?

பலமாக இருப்பதை பலவீனமாக்கிக் கொள்ளாமல் இருப்பது பலம். பலவீனமாக இருப்பதை பலமாக்கிக் கொள்ளாமல் இருப்பது பலவீனம்.

வாசுதேவன், பெங்களூரு.

கிரிக்கெட்டில் இரண்டாவது இன்னிங்ஸ், வெள்ளித்திரையில் இரண்டாவது இன்னிங்ஸ் மாதிரி அரசியலில் இரண்டாம் இன்னிங்ஸ் சாத்தியமா?

நிச்சயம் உண்டு. இப்போதைய அமைச்சரவையிலேயே அணி மாறிய பலர் அமைச்சராகி, இரண்டாம் இன்னிங்ஸ்தானே ஆடிக்கொண்டிருக்கிறார்கள்!

கழுகார் பதில்கள்

சீ.பாஸ்கர், நந்திவரம், கூடுவாஞ்சேரி.

கமல்ஹாசனின் அடுத்த வியூகம் என்ன?

இயக்குநர் லோகேஷ் கனகராஜைத்தான் கேட்க வேண்டும்!

சொக்கலிக்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்த படங்கள் வெற்றிபெற்றதுபோல் இரட்டைத் தலைமையில் அ.தி.மு.க வெற்றிநடை போடுகிறது என்கிறாரே செல்லூர் ராஜூ?

அப்ப இவ்வளவு நாள் படமாத்தான் நடத்தினாங்களா ஆட்சியை..? ஆனா ஒண்ணு... பேச ஆரம்பிச்சுட்டாங்க... இனி மீம் கன்டென்ட்டுக்குப் பஞ்சமிருக்காது!

கழுகார் பதில்கள்

@குரு சண்முகசுந்தரம்.

சென்னையில் ரொம்ப கஷ்டப்பட்டு சின்னதா ஒரு தள்ளுவண்டியில் உணவுக்கடை வைத்திருந்தேன். பெரிதாக ஓர் உணவகத்தை நடத்த வேண்டும் என்பது என் ஆசை. இந்த கொரோனாவால் சொந்த ஊருக்கே வந்துவிட்டேன். நம்பிக்கையாக நான்கு வார்த்தைகள் ப்ளீஸ்!

“நான் சின்ன வயசுல இந்தத் தெருவுலதான் பிச்சை எடுத்தேன். இதோ இந்தத் தெரு மூலையில்தான் நைட்ல குளிர்ல படுத்திருப்பேன். அப்புறமா இதா குட்டியூண்டா இருக்கே... இந்த வீட்ல குடியிருந்தேன். அப்பப்ப வாடகை கொடுக்க முடியாம அதோ அந்தப் பின்னாடி வழியாத்தான் வந்து வீட்டுக்குள்ள புகுந்து படுத்துப்பேன்” - லண்டனிலிருந்து அமெரிக்கா சென்று, உலகப் புகழ்பெற்று, மீண்டும் லண்டன் வந்தபோது பத்திரிகையாளர்களைக் கூட்டிக்கொண்டு போய்க் காண்பித்தபடி சார்லி சாப்ளின் கொடுத்த பேட்டி இது.

இப்போது சாத்தியப்படவில்லையென்றால் என்ன... தொடர்ந்து முயன்றுகொண்டே இருங்கள். வெற்றி ஒருநாள் கைவசமாகும்!

கழுகார் பதில்கள்

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

முதல் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின், பிரதமரின் குட்புக்கில் இடம்பெற்றிருப்பாரா?

இரண்டு பேருமே பரஸ்பரம் இன்னொருவரின் குட்புக்கில் இடம்பெற முயல்வது அந்தச் சந்திப்பில் அப்பட்டமாகத் தெரிந்தது. மாஸ்க் அணிந்திருந்தும் மனத்தின் விருப்பம் இருவருக்கும் புரிந்தது!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism