அலசல்
Published:Updated:

கழுகார் பதில்கள்

சிவாஜி, எம்.ஜி.ஆர்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவாஜி, எம்.ஜி.ஆர்

‘ஒரு பூனை திருட்டுப்போனதற்காகச் சட்டத்தை நாடினால், ஒரு பசுவை விற்க நேரிடும்’ என்றொரு சீனப்பழமொழி நினைவுக்கு வருகிறது!

@வாசுதேவன், பெங்களூரு.

பரபரப்பாகப் பேசப்படும் செய்திகள் நாளடைவில் காணாமல் போய்விடுகின்றனவே?


விரைவில் மறந்துவிடுவீர்கள் என்ற நம்பிக்கையை மூலதனமாக வைத்துக்கொண்டு, மக்களுக்கு எதிரான விஷயங்கள் பல அரசியல்வாதிகளால் செயல்படுத்தப்படுகின்றன. நினைவில் வைத்துக்கொண்டால், பிழைத்துக்கொள்ளலாம்!

@சரோஜா பாலசுப்ரமணியன்

சசிகலாவின் அதிரடி அரசியல் ஆரம்பமாகிறதா?


முதலில் ஆரம்பிக்கட்டும். பிறகு அந்த அரசியலுக்குப் பெயர் வைக்கலாம்!

ரகு சுந்தரம், மேட்டுப்பாளையம்.

எப்போதோ சந்திக்கும் உறவினர்களில் சிலர் ஆணவத்தால், எழுந்து வரவேற்பதற்குக்கூட மனமின்றி இருக்கிறார்களே?


ஒருமுறை சிவாஜியிடம் “எம்.ஜி.ஆர் பண்பானவர், நீங்கள் கொஞ்சம் கர்வி என்கிறார்களே” என்று கேட்டார் வைரமுத்து. அதற்கு “அதொண்ணுமில்ல ராசா... எம்.ஜி.ஆர் சுறுசுறுப்பா இருப்பாரு. யாரைப் பார்த்தாலும் எழுந்து நின்னு வரவேற்பாரு. நான் கொஞ்சம் சுகவாசி. ஒக்காந்த வாக்குல ‘வாங்க’ம்பேன். அதைத்தான் இப்படிப் பரப்பீட்டாங்க” என்றாராம் சிவாஜி. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சூழல் இருக்கலாம், மனநிலை இருக்கலாம். அனைத்தையும் ஆணவம் என்ற கணக்கில் சேர்ப்பது உறவுகளுக்குள் நல்லதல்ல.

கழுகார் பதில்கள்

@கே.சி.நாராயணன், நன்மங்கலம்.

1967 தேர்தலில் காங்கிரஸ் தோற்றபின் ‘அவர்கள் ஆட்சிக்குப் புதியவர்கள். எனவே, ஆறுமாதம் வரை அவர்களை விமர்சனம் செய்ய வேண்டாம்’ என்று காமராஜர் சொன்னதுபோல இப்போது சொல்வார்களா?


விமர்சனமெல்லாம் ஏற்கெனவே ஆரம்பித்தாயிற்று. கொரோனா காலகட்டம் என்பதால், கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்கள். ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்கே யாரும் காமராஜரும் இல்லை. இது 1967-ம் இல்லை.

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

வலைதளங்களில் தவறான செய்திகளைத் தடுக்கும் விதமாக, அதில் கணக்கு தொடங்க, ஆதார் எண் இணைப்பதைக் கட்டாயப்படுத்தினால் என்ன?


உலகின், நாட்டின் முக்கியத் தலைவர்களே தவறான தகவல்களைப் பேசியும் எழுதியும் வரும்போது, இதுபோன்ற கட்டாயங்களால் என்ன நடந்துவிடும் என்று நினைக்கிறீர்கள்? சாதாரண தனி மனிதனின் சுதந்திரம்தான் பறிபோகும்!ராம், டாடாபாத், கோவை.

தி.மு.க ஜெயிக்கவில்லை என்பதால், சமூக ஊடகங்களில் தி.மு.க-வினர் கோவை என்றாலே எள்ளி நகையாடுகிறார்களே?


இது தவறான அணுகுமுறை. 8,27,258 வாக்குகள் பெற்று, அதாவது கோவையில் மட்டும் 38.99 சதவிகித வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பிடித்திருப்பது தி.மு.க-தான். இதை அவர்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்!

எல்.ஆர்.சுந்தரராஜன், மடிப்பாக்கம்.

ஓ.பி.எஸை-விட, இ.பி.எஸ்-தானே படு சுறுசுறுப்பாக எதிர்க்கட்சிப் பணிகளை கவனிக்கிறார்?


இதில் ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அவர்தானே?

குணசேகரன், கிருஷ்ணகிரி.

சின்னச் சின்னத் திருட்டுகளுக்கு, காவல்நிலையம் சென்றால் நியாயம் கிடைக்கும் என்றாலும் தயக்கம் காட்டுகிறார்களே சிலர்?


‘ஒரு பூனை திருட்டுப்போனதற்காகச் சட்டத்தை நாடினால், ஒரு பசுவை விற்க நேரிடும்’ என்றொரு சீனப்பழமொழி நினைவுக்கு வருகிறது!

கழுகார் பதில்கள்

@சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

மத்திய அரசை மம்தா பானர்ஜி அவமதிக்கின்றாரா?


அவமதிப்புக்கும் எதிர்ப்புக்கும் வித்தியாசம் உண்டு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள். இது மம்தா பாணிபோல!

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்

சரவணகுமார் சின்னசாமி, தாராபுரம்.

நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் வரிசையில் ‘தர்மயுத்தம்’ பன்னீர்செல்வமும் கடைசிவரை நம்பர் டூ-தானா?


ஒன்றா இரண்டா என்பது முக்கியமில்லை. நீங்கள் குறிப்பிட்ட முதல் இருவர் மீதுமே தலைமைக்கு நல்ல மதிப்பு இருந்தது. அவர்களுக்கும் தலைமைமீது நம்பிக்கை இருந்தது. ஆனால்...