Published:Updated:

கழுகார் பதில்கள்

கண்ணதாசன், வாலி, வைரமுத்து
பிரீமியம் ஸ்டோரி
கண்ணதாசன், வாலி, வைரமுத்து

இந்த முடிவு உங்களுக்கு வேணா சோகமா இருக்கலாம். ஆனா, இந்தச் சோகம்கூட எனக்கு சுகமாத்தான் இருக்கு.

கழுகார் பதில்கள்

இந்த முடிவு உங்களுக்கு வேணா சோகமா இருக்கலாம். ஆனா, இந்தச் சோகம்கூட எனக்கு சுகமாத்தான் இருக்கு.

Published:Updated:
கண்ணதாசன், வாலி, வைரமுத்து
பிரீமியம் ஸ்டோரி
கண்ணதாசன், வாலி, வைரமுத்து

ர.பிரசன்னா, காட்டுப்பாக்கம்.

ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதாக இந்திய ரயில்வே தெரிவித்திருக்கிறதே?

2021-22 நிதியாண்டில், 1.78 கோடி பேர் டிக்கெட் இல்லாமல் பயணித்திருப்பதாகவும், அவர்களிடமிருந்து 1,017 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது இந்திய ரயில்வே. இது, சென்ற நிதியாண்டைவிட 79% சதவிகிதம் அதிகம். கொரோனா விதிகளுக்காக ‘அன்ரிசர்வ்டு’ பெட்டிகளை கேன்சல் செய்தனர். அதனால் பெரும்பாலும் வடமாநிலங்களில், அவசரப் பயணங்களுக்கு பலரும் ரிசர்வ்டு பெட்டியில் அபராதம் கட்டியே பயணித்தனர் என்கிறது ஒரு செய்திக் குறிப்பு. டிக்கெட் கவுன்ட்டர்களைக் குறைத்து, ஆன்லைன் வசதியை அறிமுகப்படுத்தியதும் ஒரு காரணம் என்று பயணியர்கள் சார்பில் கூறப்படுகிறது. சரியான மாற்று ஏற்பாடு செய்யாமல் மக்களைக் குறைகூறுவது நியாயமில்லை!

கழுகார் பதில்கள்

திருப்பூர். அர்ஜுனன்.ஜி, அவிநாசி.

ஆவடி நகராட்சியில் தேர்தல் அதிகாரி கொடுத்த வெற்றி பெற்றதற்கான சான்றிதழில், அவரது கையெழுத்து மை ஈரம் காய்வதற்குள் ஒருவர் கட்சி மாறி அசத்தியிருக்கிறாரே?

‘அரசியலில் இதெல்லாம் சாதரணமப்பா’ என்கிற காமெடி வசனம், தமிழக அரசியலின் யதார்த்தமாகிக்கொண்டிருக்கிறது. வாழ்க ஜனநாயகம்!

திருப்பூர். அர்ஜுனன்.ஜி, அவிநாசி.

‘கண்ணுக்கெட்டிய வரை எதிரிகளே இல்லை’ என்று ஜெயலலிதா ஒருமுறை சொன்னார். இப்போது ஸ்டாலினுக்கும் அது பொருந்தும்தானே!?

‘அருகே இருந்து சிரிக்கவைத்துக்கொண்டிருக்கும் நண்பர்களைவிட, தூரத்திலிருந்து உங்கள் பலவீனங்களை உணர்த்தும் எதிரிகள் செய்யும் நன்மை அதிகம்’ என்கிறது அரேபியப் பழமொழி. எதிரிகள் இல்லாமலிருப்பது அத்தனை பெருமைக்குரிய விஷயமல்ல!

இல.கண்ணன், நங்கவள்ளி.

தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறதோ, அந்தக் கட்சி உள்ளாட்சித் தேர்தலில் ஜெயிப்பது சகஜம்தானே கழுகாரே..?

சகஜம்தான் என்றாலும், தி.மு.க இந்தத் தேர்தலைச் சவாலாக நினைத்துத்தான் எதிர்கொள்ளவேண்டியிருந்தது. கொஞ்சம் பயந்ததும் உண்மை!

சரவணகுமார் சின்னசாமி, தாராபுரம்.

தோல்வியைத் தழுவுவோம் என்று தெரிந்தே தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கு என்ன சொல்லலாம்?

`அடுத்த முறையாவது ஜெயிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என யோசியுங்கள்’ என்று சொல்லலாம்!

கழுகார் பதில்கள்

தே.மாதவராஜ், இராமநாதபுரம், கோவை.

உள்ளாட்சித் தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம்?

‘இந்த முடிவு உங்களுக்கு வேணா சோகமா இருக்கலாம். ஆனா, இந்தச் சோகம்கூட எனக்கு சுகமாத்தான் இருக்கு...’ என்ற ‘பூவே உனக்காக’ படத்தின் க்ளைமாக்ஸ் வசனம் பின்னணி இசையோடு நினைவுக்கு வருகிறது!

மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி, மதுரை.

ரூபாய் நோட்டிலிருக்கும் மகாத்மா சிரிப்பது, ஏழைகளைப் பார்த்தா... பணக்காரர்களைப் பார்த்தா?

ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருக்கும் பணக்காரர்களைப் பார்த்து!

தாமஸ் மனோகரன், உழவர்கரை, புதுச்சேரி.

யார் கொடுக்கும் தைரியத்தில் எடப்பாடி பழனிசாமி, ‘27 அமாவாசைதான் இந்த ஆட்சி. தமிழகத்தில் ஆட்சி மாறும்’ என்றெல்லாம் திகில் கிளப்புகிறார்?

போங்க தாமஸ்... தெரியாத மாதிரியே கேட்கறது... ‘ஓனர்’ யாருனு உங்களுக்குத் தெரியாதா?!

நிதிஷ், நாட்டரசன்கோட்டை.

தமிழ்நாட்டில் நடக்கும் தேர்தல்களில் கொஞ்சமாவது பரவாயில்லை என்று நினைக்கவைக்கும் விஷயம்?

அப்படி ஏதாவது இருந்தா பரவாயில்லை!

கழுகார் பதில்கள்

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

மக்களுக்குப் புரியாத கவிதைகளை, மக்களுக்குப் புரியவைக்குமாறு பாடல்களை அதிகம் தந்தவர் கவியரசு கண்ணதாசன், வாலி, வைரமுத்து இவர்களில் யார்?

இதில் கண்ணதாசன் முன்னத்தி ஏர். வாலியும் அந்த எளிமையைப் பின்பற்றியதால்தான் கண்ணதாசனுடனும், அவருக்குப் பின் வந்த வைரமுத்துவுடனும், ஏன் வைரமுத்து மகன் மதன் கார்க்கியுடனுமே களத்தில் இருந்தார். எளிமையோடு தமிழக வட்டார வழக்குமொழியைத் திரைப்பாடல்களில் புகுத்தி மண்சுவை சேர்த்தார் வைரமுத்து. மூவருமே ரசனையில், எளிமையில் தனித்துவமான கலைஞர்கள்தான்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!